என் மலர்
நீங்கள் தேடியது "haryana"
- டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.
கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.
- கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
குருஷேத்ரா:
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து விலகினர். மேலும், அவர்கள் ஒன்றிணைந்து அரியானாவில் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் அசந்த், எஸ்ஜிபிசியின் சிர்சா உறுப்பினர் குர்மீத் சிங் திலோகேவால் மற்றும் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆகியோர் முக்கியமானவர்கள்.
கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக ஒரு தலைவர் கூறினார். இந்தக் குழு அடுத்த இரண்டு மாதங்களில் அரியானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சீக்கியர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதன்பின்னர், கர்னாலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் மாநில செயற்குழு அறிவிக்கப்படும் என்றும் அந்த தலைவர் தெரிவித்தார்.
- தேசியக் கொடிக்காக ஏழை மக்களிடம் ரூ.20 கேட்பது வெட்கக்கேடானது என ராகுல் கண்டனம்.
- ரேஷன் கடை விற்பனையாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.
சண்டிகர்:
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் வரும் 15ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றும் 'ஹர் கர் திரங்கா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவகங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹெம்டா கிராமத்தில் ஒரு ரேஷன் கடையில் 20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஏழை மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செய்தி இணையதளம் வெளியிட்ட பதிவில், தேசியக் கொடியை வாங்கா விட்டால் ரேஷன் பொருட்கள் மறுக்கப் படுவதாகவும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், அந்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வாங்கத் தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே 20 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் தேசிய கொடி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்னால் துணை ஆணையர் அனிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏழை மக்களிடம் தேசியக் கொடிக்காக ரூ.20 கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் பொருட்கள் கொடுக்கும்போது, ஏழை மக்களிடம் மூவர்ணக் கொடிக்காக 20 ரூபாய் வசூலிப்பது வெட்கக்கேடானது. மூவர்ணக்கொடியுடன், பாஜக அரசு நம் நாட்டு ஏழைகளின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்துகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரியானா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதேபாத் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களில் சீக்கியர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். இதன் காரணமாக சீக்கியர்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தண்டிப்பேன் என உங்கள் காவலாளியான நான், அவர்களுக்கு அளித்த சத்தியத்தினை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை எண்ணி ஆறுதல் அடைகிறேன். ஆனால் காங்கிரசோ, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராட்டி பேசுகிறது. இதிலிருந்தே அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்பது புரிகிறது.
மக்கள் என் மீதும், பாஜக மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை நான் உணர்வேன். பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. உங்களுக்காக இந்த காவலாளி என்றும் பணியாற்றுவான்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #ElectionCampaign



