search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nayab Singh Saini"

    • அரியானாவில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
    • இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் நயாப் சிங் சைனி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    90 சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள அரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி மற்றும் மாநில பா.ஜ.க. தலைவரான மோகன் லால் பதோலி ஆகியோர் ஜிந்த் கிராமத்தில் இன்று மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

    அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்த பெண்மணியிடம் முதல் மந்திரி நயாப் சிங் சைனி கிராமத்தில் நடைபெறும் விவசாயம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    முதல் மந்திரியின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலர்களும் மாட்டு வண்டியுடன் நடந்து சென்றனர்.

    • ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
    • அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.

    அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

     

    இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



     


    • மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
    • காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.

    மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.

     இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் உள்ள வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.

    அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஹிசாரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

    காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர்.

    • பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
    • கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    இந்நிலையில், அரியானா மாநில பாஜக தலைவராகவும், குருக்ஷேத்ரா தொகுதி எம்.பி ஆகவும் இருக்கும் நயாப் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றார்

    இன்று மாலை 5 மணியளவில் நயப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ×