என் மலர்
சண்டிகர்
- ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் நேற்று நடந்தது.
- இதில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.
சண்டிகர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சண்டிகரில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை 228 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 228 ரன்களைக் குவித்தது.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னும், திலக் வர்மா 25 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 22 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 50 பந்தில் 81 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். குசால் மெண்டிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னில் வெளியேறினார். அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரதர்போர்டு 24 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.
- முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆர்சிபி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
சண்டிகர்:
சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், குவாலிபையர் 1 சுற்றில் தோல்வி அடைந்தபின் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:
முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்களை பவர் பிளேவில் இழந்தோம். நாங்கள் செய்த தவறில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் என்னுடைய முடிவுகளை சந்தேகிப்பது கிடையாது.
நாங்கள் சரியான இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருந்தோம். எங்கள் திட்டத்தை களத்தில் பிரதிபலிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியில் பவுலர்களை குறைசொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படி ஒரு குறைந்த ஸ்கோரை யாராலும் தற்காத்துக் கொள்ள முடியாது.
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக பயிற்சி செய்யவேண்டும். நாங்கள் இங்கு விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மை வித்தியாசமாக இருந்தது. இதுபோல ஒரு காரணத்தை எல்லாம் தொழில்முறை கிரிக்கெட்டில் சொல்ல முடியாது. சூழலுக்கு ஏற்ப சரியாக பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்க வேண்டும்.
நாங்கள் மோதலில் தோற்றுவிட்டோமே தவிர, போரில் தோற்கவில்லை. இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
- மனைவிக்கு கணவன் மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது
- ஆனால் தனது மனைவி உறவினர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதை கணவன் சுட்டிக்காட்டினார்.
சண்டிகர் கீழமை நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு கணவன் மாதம் ரூ.4000 உதவித் தொகை (ஜீவனாம்சம்) கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தனது மனைவி உறவினர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதை சுட்டிக்காட்டி கீழ்மை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணவன் சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது எனக் கூறி கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
- பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சண்டிகர்:
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், அரியானா மற்றும் பஞசாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இவர்கள் பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களைக் கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்டவைகளில் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகங்கள் கோரி வருகின்றன.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில நிர்வாகங்கள் கோரி வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலால் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வருமாறு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
- நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
- விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம் திறம்பட இடைமறித்து அழித்தது.
நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் பால்கனியில் நிற்க கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்.
- பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. 26 முறை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டு முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குறைந்த 12 பேர் உயிரிழந்தனர். 57-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஷிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுக்பீர் சிங் பாதல் தனது எக்ஸ் பக்க பதிவில் "பூஞ்சில் உள்ள புனித மத்திய குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் அப்பாவியான பாய் அமிரிக் சிங் ஜி, பாய் அமர்ஜீத் சிங், பாய் ரஞ்சித் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்
தியாகிகளின் தியாகத்திற்காக அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்களின் துயர நேரத்தில் ஆதரவளிக்க போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
சீக்கியர்கள் எப்போதும் நாட்டின் வாள் கரமாக இருந்து வருகின்றனர், தொடர்ந்து இருப்பார்கள். நாங்கள் எங்கள் ஆயுதப் படைகளுடன் ஒரு பாறை போல நிற்கிறோம். சிரோமணி அகாலி தளமும் நமது நாடும் அமைதிக்காக நிற்கின்றன என்றாலும், எதிரியால் நமது கவுவரத்திற்கு சவால் விடுக்கப்பட்டால், நமது தேசபக்தி கடமைகளை நிறைவேற்ற நமக்கு எந்த நினைவூட்டலும் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
- 73 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நேற்று நடந்த 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் 50+ ரன்கள் அடிப்பது விராட் கோலிக்கு இது 67-வது முறையாகும். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்தார்.
இவருக்கு அடுத்து டேவிட் வார்னர் 66 முறையும், ஷிகர் தவான் 53 முறையும், ரோகித் சர்மா 45 முறையும் எடுத்துள்ளனர்.
- போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு சென்று பிரபல பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் தயாரித்தார்.
- ரீல்சை வலைத்தளத்தில் பதிவிட அது காட்டுத்தீயாக பரவியது.
சண்டிகரை சேர்ந்தவர் அஜய். போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஜோதி. சமூக வலைத்தளத்தில் 'ரீல்ஸ்' பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்தநிலையில் ஜோதி, சாலை நடுவே ரீல்ஸ் எடுத்து பதிவிட முடிவு செய்தார். அதன்படி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு சென்று பிரபல பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் தயாரித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த ரீல்சை வலைத்தளத்தில் பதிவிட அது காட்டுத்தீயாக பரவியது. இதனை தொடர்ந்து மனைவியின் 'ரீல்ஸ்' மோகத்தால் அவருடைய கணவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
- பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.
நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.
நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.
அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.
கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.
- சண்டிகரில் மேயர் தேர்தலில் 19 வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது.
- 17 வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது. 17 வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.
ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதாவை தோற்க்கடித்து பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா சண்டிகர் மேயராக வெற்றி பெற்றுள்ளார்.
மேயர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்ஸ்ரீ தாக்கூர் நியமிக்கப்பட்டிருந்தார்.
வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு பாஜக வென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.