என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் தொல்லை"
- விசாரணை முடிவடைய சராசரியாக 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது.
- 774 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்சோ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2.24 லட்சத்திற்கும் அதிகமான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைய சராசரியாக 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 2,24,572 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்காக 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 774 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் 398 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டவை.
டெல்லியில் ஒரு வழக்கின் விசாரணை முடிவடையச் சராசரியாக 4.5 ஆண்டுகள் ஆகிறது. இதுவே நாட்டின் மிக மெதுவான விகிதமாகும். திரிபுராவில் 4 ஆண்டுகளும், மணிப்பூரில் 3.7 ஆண்டுகளும், குஜராத்தில் 3.5 ஆண்டுகளும் ஆகின்றன.
இதற்கு நேர்மாறாக, புதுச்சேரியில் மிக விரைவாக வெறும் 6 மாதங்களில் விசாரணை முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் சராசரியாக 257 நாட்களும், சத்தீஸ்கரில் 332.5 நாட்களும் ஆகின்றன.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இது குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகங்களில் சாட்சியம் அளிக்கச் சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், புலனாய்வுத் திறனை வலுப்படுத்தப் புதிய தடய அறிவியல் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே உள்ளது என தெரிவித்தார்.
- முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து ஆபாச சைகைகள் செய்துள்ளார்.
- குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
- பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்(வயது38). கிறிஸ்தவ பாதிரியாராக இருக்கிறார்.
இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது, கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.
அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சிறுவர்கள் இருவரும் கேரளாவில் இருந்தனர். இந்தநிலையில் சிறுவர்கள் இருவரையும் தான் பராமரிப்பதாக கூறியிருக்கிறார்.
அதன்படி கேரளா வந்ததும் சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த அண்ணன்-தம்பியான சிறுவர்கள் இருவருக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
சிறுவர்களை இயற்கைக்கு மாறான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பாதிரியாரின் தொல்லை நாளுக்குநாள் அதிகரிக்கவே, அதுகுறித்து சிறுவர்கள் இருவரும் தங்களின் தாய்க்கு தெரிவித்துள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் தாய், பாதிரியார் மீது வடகரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
தாயின் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் பாதிரியார் சிறுவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிரியார் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாதிரியாரை பிடிக்க தனிப்படை போலீசார், பெங்களூரு விரைந்தனர்.
அவர்கள் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் சம்பத்தை கைது செய்தனர். பின்பு அவரை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர் கேரள மாநிலத்தில் வடகரா, முடப்பிலவு, தட்டொலிக்கரா உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி, டெல்லி மற்றும் பெங்களூரு, மைசூருவிலும் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். அந்த இடங்களிலும் அவர் இது போன்று வேறு சிறுவர்களிடம் அத்துமீறினாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
- ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார்.
பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கொரிய நாட்டு பெண்ணிடம் ஊழியர் அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி, தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.
இமிக்ரேஷன் சோதனைகளை முடித்துவிட்டு அவர் டெர்மினல் நோக்கிச் சென்றபோது ஏர் இந்தியா நிறுவனத்தின் தரைதள ஊழியராக பணிபுரியும் 25 வயது முகமது அபான் என்பவர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பயணச்சீட்டைப் பரிசோதித்த ஊழியர், அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
மீண்டும் ஸ்கிரீனிங் கவுண்டருக்குச் சென்றால் விமானத்தைத் தவறவிட நேரிடும் என்றும், தான் தனியாகச் சோதனை செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அந்தப் பெண் எதிர்த்தபோது அவரைக் கட்டிப்பிடித்து தேங்க் யூ என்று கூறிவிட்டு ஊழியர் அங்கிருந்து நழுவி உள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகளைப் ஆராய்ந்ததில் அந்த ஊழியரின் தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் முகமது அபானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது இரு சக்கர வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
- வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் நல்லாம் பகுதியை சேர்ந்தவர் சஜீந்திர பாபு (வயது50). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர் பணியாற்றிய பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவருக்கு கடந்த 4-ந்தேதி பிறந்த நாள் வந்துள்ளது. அந்த மாணவிக்கு ஆசிரியர் சஜீந்திர பாபு பள்ளியில் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும் பிறந்தநாள் பரிசை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும், அதனை வாங்க தனது வீட்டுக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.
அவரது அழைப்பு "அன்பின் அழைப்பு" என நினைத்து ஆசிரியருடன் அவரது வீட்டுக்கு 9-ம் வகுப்பு மாணவி சென்றார். தனது இரு சக்கர வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து விட்டார்.
பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தை அந்த மாணவி உடனடியாக யாரிடமும் கூறவில்லை. சில நாட்களுக்கு பிறகு தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார். அவர் அதுபற்றி மாணவியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் சஜீந்திரபாபு மீது புகார் செய்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியரை கைது செய்தனர். ஆசிரியர் சஜீந்திரபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
- சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
- கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 7 பள்ளி சிறுமிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையின் தகிசர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையாட வரும் சிறுமிகளை இலக்கு வைத்து இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 7 சிறுமிகளும் 6 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள். இந்த நபர் சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அந்த நபர் மேலும் 6 சிறுமிகளுக்கு இதேபோன்று தொல்லை கொடுத்தது அம்பலமானது.
போலீசார் அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.
அங்கு, 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அங்குஷ் பரத்வாஜ் என்ற யூடியூபர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே தங்கியிருந்த பிரமோத் குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர், யூடியூபர் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தச் செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
- தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரேசிலிய பெண்ணை பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேசிலிய இளம் பெண், மூன்று சக ஊழியர்களுடன் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை, அந்தப் பெண் ஒரு பிரபலமான செயலி மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.
பொருட்களை எடுத்து வந்த டெலிவரி ஊழியர் குமார் (21) வாசலில் வைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார். பயந்துபோன அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து அப்பெண் உடன் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம் கூறினார். அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
இதையடுத்து, முதலாளி கார்த்திக் விநாயக் அளித்த புகாரின் பேரில், ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குமாரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிகெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
- ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது.
மும்பை:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.
கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின.
இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை)ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறல் செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மானபங்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நவிமும்பையில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- தகவல் அறிந்த மாணவியின் சக நண்பர்களான மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கினர்.
- புகாரின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சமீபத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கேரளாவின் மூணாறு பகுதிக்கு சென்றனர்.
அப்போது, உடன் சென்ற பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் சக நண்பர்களான மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியர்கள் இருக்கும் அறைக்குள் புகுந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி பேராசிரியரை மாணவர்கள் சரமாரியாகத் தாக்குவதும், சிலர் நாற்காலிகளையும், பேக்குகளையும் தூக்கி எறிவதும், கைகளால் தாக்குவதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதனிடையே பாலியல் புகாருக்கு உள்ளான சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியரை 'சஸ்பெண்டு' செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
- இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.
- உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
- எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.
அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
- இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
வேலூரை சேர்ந்ததாக கூறப்படும் இளம்பெண் தனது காதலனுடன் ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பண்ணை பகுதிக்கு நேற்று இரவு வந்ததாக கூறப்படுகிறது.
அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அவரகரையை சேர்ந்த 3 பேர் காதலர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் நகை, பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து இளம்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.
பின்னர் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அந்த இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






