என் மலர்
நீங்கள் தேடியது "Harassment case"
- பள்ளி படிக்கும் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
- மசாஜ் செய்வதாக கூறி இளைஞர்கள் பலரை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தி வந்தது தெரிய வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஏனமக்கல் பகுதியை சேர்ந்தவர் அனில்(வயது52). இவர் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு பயிற்சி முகாம் நடத்தி வந்திருக்கிறார். மேலும் தனது வீட்டில் சிறுவர்களுக்கு பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இவர் தனது வீடு வழியாக சென்ற ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பள்ளி படிக்கும் அந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற பொதுமக்கள், அனிலை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பயிற்சி என்ற பெயரில் ஏராளமான சிறுவர்களை தனது வீட்டில் சிறைபிடித்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் மசாஜ் செய்வதாக கூறி இளைஞர்கள் பலரை இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தி வந்ததும் தெரிந்தது. அனில் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மட்டுமே புகார் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அனில், சிறையில் அடைக்கப்பட்டார்.
- மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன். (வயது 30). கூலித் தொழிலாளி. 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் படி வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து திண்டுக்கல் சிறையில் சிறையில் அடைத்தனர்.
- கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார்.
- தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
போரூர்:
சென்னை அசோக் நகர், அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். அதே பகுதி 3-வது அவென்யூவில் பிளாட்பாரத்தில் "சிக்கன் பக்கோடா" கடை நடத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி இரவு இவரது கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
அசோக் நகர் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் டைமண்ட் பாபுவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த நிலையில் டைமண்ட் பாபுவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
- பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது மாணவிக்கு, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெபக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ராயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
ராயபுரம்:
ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெபக்குமார் (வயது 55). இவர் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குடியிருப்பில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது மாணவிக்கு, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெபக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். மேலும் அவர் மாணவிக்கு தொடர்ந்து இதுபோல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக ராயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில் ஜெபக்குமார், மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு வின்சென்ட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- பஸ்சில் சென்ற மற்ற பயணிகள் வின்சென்ட்டை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மேக்காட்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 48). சம்பவத்தன்று இவர், குன்னம்குளம்-பாவரட்டி வழித்தடத்தில் சென்ற தனியார் பஸ்சில் பயணித்துள்ளார்.
அப்போது அதே பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை அந்த பஸ்சில் சென்ற மற்ற பயணிகள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்பு வின்சென்டை குருவாயூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
- வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
- விசாரணையில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் ராமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்கள் ரங்கநாதன்(24), கருப்பசாமி(21). இவர்கள் 2 பேரும் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றனர். அப்போது சில நாட்கள் அங்கேயே தங்கினர்.
உறவினரின் 9 மற்றும் 5 வயது மகள்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் 2 பள்ளி குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் சிறுமிகள் உடல் சோர்ந்து காணப்பட்டனர்.
இதைஅறிந்ததும் அவர்களின் தாயார் 2 சிறுமிகளையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது டாக்டர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார்.
வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.
- விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்தூர்:
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் நீட் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் விவேக் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்கு படித்து வரும் 17 வயது மாணவியை படிப்புக்கு உதவுகிறேன் என கூறி காபி சாப்பிட அழைத்தார். இதை நம்பி அந்த மாணவியும் அவருடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். விவேக்குடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினார்.
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் விவேக்கை பிடித்து அவர் அணிந்து இருந்த ஆடையை களைந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக ரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து அவனை அவனது தாய், தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார்.
அங்கு புறநோயாளிகள் பிரிவில் சிறுவனை அமர வைத்துவிட்டு, ஆதார் தொடர்பான விவரங்கள் கொடுக்க சென்றிருந்தார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அவர், சிறுவனுக்கு கழிவறையில் வைத்து பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். ஆனால் கழிவறையை விட்டு வெளியே வந்த சிறுவன், ஆஸ்பத்திரி ஊழியர் ரமீஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அழுதபடியே தனது தாயிடம் தெரிவித்தார்.
இதனை சிறுவனின் தாய் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் குற்றம் சுமத்திய ஊழியர் ரமீசை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம், மத்தூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் சிலர் தங்களது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக கிடைக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவு நேரம் ஆகிவிடுவதால், தனியாக நடந்து வர அஞ்சி வந்தனர்.
இந்த நிலையில் ஊத்தங்கரையை அடுத்த அனுமந்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று சாமல்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (வயது23) என்பவர் அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.
இதுகுறித்து வெண்ணிலா சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தலைமறைவான வாலிபரை பிடிக்க உஷார்படுத்தினர். மேலும், சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் 2 இடங்களில் பெண்களை வழிமறித்து பாலியல் சில்மிஷ சம்பவங்களில் ஈடுபட்டவர் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபரை நேற்று ஊத்தங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதான வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) என்பதும் இவர் தான் 2 பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்ததன் மூலம் ஊத்தங்கரை, மத்தூர், சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.
- கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார்.
- பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
சென்னை:
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கு தேனாம்பேட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.