என் மலர்
நீங்கள் தேடியது "Life sentence"
- பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
- 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
அவர்கள் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த பிறகு, தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.
அவர்களுக்கான தண்டனைக்குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதையடுத்து, இவ்விஷயம் தொடர்பாக பரிசீலிக்க பஞ்ச்மகால் மாவட்ட கலெக்டர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது.
அந்த குழு, குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையைக் குறைப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
அதன் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவ்விவகாராம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
- மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
கரூர்:
குளித்தலை அருகே பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்த தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது30). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நச்சலூர் மேலநந்தவனக்காட்டை சேர்ந்த வேலு என்ற வேலுசாமி (38), நச்சலூர் விஆர்ஓ காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), நச்சலூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த சங்கர் (24) ஆகிய 3 பேர் வடிவேலுவிடம் விசாரித்து அவரை ஆபாசமாக திட்டி, கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர் இதில் வடிவேலு படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கவேண்டாம். நாங்களே அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் என வடிவேலு குடும்பனத்தினரிடம் கூறிவிட்டு மேற்கண்ட 3 பேரும் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்ததாகக்கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று வழங்கிய தீர்ப்பில், வடிவேலுவை ஆபாசமாக திட்டியதற்காக 3 பேருக்கும் 15 நாள் சிறைத்தண்டனை, ரூ.100 அபராதம் அதை கட்டத்தவறினால் 7 நாள் சிறையும், கொலை செய்த குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம், அதை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறை, அடித்து காயப்படுத்திவிட்டு அதனை விபத்தில் சிக்கி காயமடைந்ததாகக்கூறி தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
- கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவரை அவரது மகன் செல்வராஜ் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
- இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகம் ஊத்தன்குளத்தை சேர்ந்தவர் மாடப்ப தேவர் (வயது 65). விவசாயி.
இவரது மகன் செல்வராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது தந்தையிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவர் ஊர் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை தொழுவத்தில் அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கி கொலை செய்தார்.
இச்சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார். அப்போது செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.
- ரூ.25 ஆயிரம் அபராதம்
- திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அடுத்த வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி பரிமளா, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களது இளைய மகன் வினோத்குமார் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றவர் திடீரென மாயமானார். அவரை பல இடத்தில் தேடியும் கிடைக்காததால் அது குறித்து ராமகிருஷ்ணன் கலசபாக்கம் போலீசில் தனது மகனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு மர்ம நபர்கள் பேசி வினோத்குமாரை கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாயமான வினோத்குமாருடன் பள்ளியில் படித்து வந்த வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் ராமசந்திரன் என்பவர் தான் வினோத்குமாரை பள்ளியில் இருந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராமசந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது தாயார் சாந்தி தான் அழைத்து வர சொன்னதாக அவர் கூறினார்.
பின்னர் போலீசார் சாந்தியிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் வினோத்குமாரை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தியதும், போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்ததும் போலீசில் மாட்டி கொள்ளக் கூடாது என்று அச்சிறுவனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து சாந்தியையும், அவரது மகன் ராமசந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் சாந்தியின் உறவினர் நண்பர்கள் சென்னையை சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் வினோத்குமார் கொலை சம்பவத்தின் போது ராமசந்திரனுக்கு 15 வயது என்பதால் அவரது வழக்கு விசாரணை திருவண்ணாமலை சிறார் நீதிமனறத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுவன் வினோத்குமாரை கடத்தில் கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சுபாஷ் மற்றும் பசுபதி மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாந்தி பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கணவர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
- காயத்ரிதேவிக்கு தொடர்பு ஏற்பட்டது.
கரூர்:
கணவர் கொலையில் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த திருகோரணத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் மனைவி காயத்ரிதேவி என்கிற காயத்ரி (25). இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிழக்கூரை சேர்ந்த கமலக்கண்ணன் (25) என்ற உறவினருடன் காயத்ரிதேவிக்கு தொடர்பு ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காயத்ரிதேவியின் தூண்டுதலின்பேரில் மணிகண்டனை கமலக்கண்ணன் மணல்மேடு டாஸ்மாக் மதுகடைக்கு அழைத்த வந்து மது வாங்கிக் கொடுத்து, அவரது நண்பரான மேலஒரத்தையைச் சேர்ந்த ரூபன்குமாருடன் (24) சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார்.இந்த வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கிய தீர்ப்பில் காயத்ரிதேவி, கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் தலா ஒரு ஆயுள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும், போதிய சாட்சியம் இல்லாததால் ரூபன்குமாரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.
- முதியவரை கொன்ற கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
- தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கடலுார்:
கடலுார் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே டி. பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன், (வயது60.) இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கனகராஜ், என்பவருக்கும்வீட்டின் அருகே உள்ள மினிடேங்க் தண்ணீர் விவகாரத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
கடந்த 14.3.2020 அன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கனகராஜ் மற்றும் அவரது மனைவியான செல்வி, ஆகியோர் தாமரைச்செல்வன் மற்றும் அவரது மனைவி ஞானமணி மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்து மயங்கி விழுந்த தாமரைச்செல்வனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததை உறுதி செய்தனர்.இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த2 ஆண்டுகளாக விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15,000 விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
- கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.
- வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், அத்தியூர் கிராமம் பள்ளி கூடதெருவை சேர்ந்தவர் மலையன் மகன் நடராஜன் (வயது60). இவரது மனைவி அஞ்சலை. அஞ்சாலை வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இது குறித்து அவரது கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.
இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குபதிந்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நடராஜன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
இந்த கொலை வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் தொடரப்பட்டு நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார்.
நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் குற்றவாளி நடராஜனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள மொரசப்பள்ளி ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2009-ம் ஆண்டு வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்தது. இதற்காக சிவா அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தார்.
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சிவா கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். சிறுமியை பார்த்த சிவா பின்தொடர்ந்து சென்று திடீரென மடக்கி பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். காப்பாற்றுங்கள்... எனச் கூச்சல் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, சிறுமியின் வாயை பொத்தி, அப்பகுதியில் கிடந்த கல்லில் தலையை மோதினார். பலத்த அடியால் மயக்கமடைந்த சிறுமியின் கழுத்தைப் பிளேடால் அறுத்துக் கொலை செய்து விட்டு, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்குள்ள விவசாயக் கிணற்றில் உடலை வீசினார். களைந்த சிறுமியின் உடைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கொலை செய்தது சிவா என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக சிவாவுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியின் உடைகளை களைந்து தீ வைத்து எரித்து, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிவா, பலத்த காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கலிபோர்னியா:
அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர்.
இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வெளியே தப்பி வந்து போலீசில் புகார் செய்தாள். அதைத் தொடர்ந்து போலீசார் வீட்டுக்கு சென்று சிறை வைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளையும் மீட்டனர்.
வீட்டில் அடைத்து வைத்திருந்த குழந்தையின் பெற்றோர் டேவிட் ஆலன் டர்பின், லூயிஸ் அன்னா டர்பின் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சிறை தண்டனை அனுபவித்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. #Court
நாகர்கோவிலை அடுத்த தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32).
செல்வகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே கோவில் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜை, செல்வகுமார் தாக்கினார். இது பற்றி செல்வராஜ், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே செல்வராஜ், தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன்கள் பாபு (26), அய்யப்பன் (24), மணி கண்டன் (23) ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் தம்மத்து கோணம் பகுதியில் நடந்து சென்ற செல்வகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். கடந்த 9-6-2011-ல் இந்த சம்பவம் நடந்தது.
செல்வகுமார் கொலை செய்யப்பட்டது பற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜின் மகன்கள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.
செல்வகுமார் கொலை தொடர்பாக நடந்த வழக்கில் இன்று கூடுதல் மாவட்ட கோர்ட்டு நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு கூறினார்.
இதில் செல்வகுமாரை கொலை செய்தது தொடர்பாக அண்ணன், தம்பிகள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், செல்வகுமாரை தடுத்து நிறுத்தி மிரட்டியது தொடர்பாக 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
கொலை வழக்கின் தீர்ப்பை கேட்க இன்று மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ஞானசேகர் வாதாடினார்.