என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுள்தண்டனை"
- மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.
- காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வெலிங்டன்:
நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் ஹக்கி யுங் லீ (45). அவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர். அவரது கணவர் 2018-ம் ஆண்டு திடீரென இறந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.
காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஆனால் ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசுக்கு பயந்து ஒரு சூட்கேசில் தனது மகள்களின் உடல்களை அடைத்து வைத்தார். அதன்பின் அவர் அங்கிருந்து தென் கொரியா தப்பி ஓடினார். 2022-ல் அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பிறகே இந்தச் சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து தென் கொரியா சென்று ஹக்கி யுங்கை கைதுசெய்த போலீசார் நியூசிலாந்துக்கு நாடு கடத்தினர். ஆக்லாந்து கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்நிலையில் ஹக்கி யுங் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
- பயணிகள் ரெயிலில் கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
- அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கேரளாவில் கடந்த 2011ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சௌமியா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிந்தசாமி தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. CCTV காட்சிகளின்படி, அவருக்கு வெளியிலிருந்து உதவி கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இநநிலையில் அவர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில் தப்பியோடிய கோவிந்தசாமியை கண்ணூர் போலீசார் கைது செய்தனர்.
சௌமியா (23), பிப்ரவரி 1, 2011 அன்று எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கிச் செல்லும் ஒரு பயணிகள் ரெயிலில் தனியாகப் பயணம் செய்தபோது, தமிழகத்தின் விருதாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கோவிந்தசாமிக்கு இந்த கொடூரக் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
- நாகர். விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- வாலிபர் கொலை வழக்கு
நாகர்கோவில் :
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திடீரென டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து ராஜனும், ரமேசும், டேவிட்டை பார்த்து வேலைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வைத்தியநாதபுரம் பகுதியில் கோவில் முன்பு டேவிட் படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அவரது தாயார் சாந்தி, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் (37), ரமேஷ் (38), கண்ணன் (40),வில்சன்(37) உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட 7 பேரும் ஜாமீனில் விடுதலையான நிலையில் நாகர்கோவில் கூடுதல் விரைவு அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கண்ணன் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ராஜன், ரமேஷ், வில்சன் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜரா னார்கள்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் தீர்ப்பில் அவர் கூறி உள்ளார். பரம ராஜன், ரமேஷ், வில்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் மெலினா கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 7-மாதம் சிறை தண்டணை விதித்தது.
சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக கூறி அவருக்கு இத்தண்டணை வழங்கப்பட்டது. தண்டணை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சுக்கு செல்லவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த கோர்ட்டு ஈராக் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மெலினாவுக்கு ஆயுள் தண்டணை விதித்தது. இந்த தண்டணையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து ஆயுள் தண்டணை பெற்ற அவர் பிரெஞ்சு குடிமகன் என்ற நிலையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஏப்ரலில் ஜமிலா புடோடியூ (29) ஆயுள்தண்டனை பெற்றார்.






