என் மலர்
நீங்கள் தேடியது "படுகொலைகள்"
- மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.
- காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வெலிங்டன்:
நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் ஹக்கி யுங் லீ (45). அவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர். அவரது கணவர் 2018-ம் ஆண்டு திடீரென இறந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.
காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஆனால் ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசுக்கு பயந்து ஒரு சூட்கேசில் தனது மகள்களின் உடல்களை அடைத்து வைத்தார். அதன்பின் அவர் அங்கிருந்து தென் கொரியா தப்பி ஓடினார். 2022-ல் அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பிறகே இந்தச் சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து தென் கொரியா சென்று ஹக்கி யுங்கை கைதுசெய்த போலீசார் நியூசிலாந்துக்கு நாடு கடத்தினர். ஆக்லாந்து கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்நிலையில் ஹக்கி யுங் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
- 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர்.
- அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.
மே 31, 1921 அன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் துல்சாவில், வெள்ளையர்களின் ஒரு கும்பல் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றது. இதுவே துல்சா படுகொலை என அழைக்கப்படுகிறது.
17 வயதுடைய வெள்ளையின லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை ஷூ பாலிஷ் தொழில் செய்த 19 வயது கறுப்பின இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரவிய தகவலை அடுத்து கறுப்பினத்தவர்களின் வீடுகள் மட்டும் கதைகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வெள்ளியாயினத்தவர் இந்த படுகொலைகளை அரங்கேற்றினர்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட பொய் செய்தியால் நிற வெறி தூண்டப்பட்டு இந்த படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்தது.
சுமார் 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக தீவைக்கப்ட்டு நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகினர்.

இந்நிலையில் துல்சா படுகொலையில் உயிர்த்தியவர்களில் தற்போது மூத்தரவாக அறியப்படும் 111 வயதுடைய வயோலா பிளெட்சர் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.
படுகொலைக்குப் பிறகு வீடற்றவராக மாறிய பிளெட்சர் தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வெள்ளையர் குடும்பங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், அவர்களின் உடல்கள் தெருக்களில் கிடப்பதையும், அவர்களின் கடைகள் எரிக்கப்படுவதையும் இன்னும் என்னால் பார்க்க முடிகிறது," என்று விவரித்தார்.
- திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது.
அதாவது ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொடூரக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வினா எழுப்பும் போதெல்லாம் தமிழ்நாட்டில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றும், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது.
2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டில் 1686, 2022-ம் ஆண்டில் 1690, 2023-ம் ஆண்டில் 1681, 2024-ம் ஆண்டில் 1540 என கடந்த 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. முதலமைச்சரின் கூற்றுக்கு மாறாக முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2016-ம் ஆண்டில் 1603, 2017-ம் ஆண்டில் 1560, 2018-ம் ஆண்டில் 1569, 2019-ம் ஆண்டில் 1745 என 6477 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததை விட திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 30 படுகொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன. விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளை விட, திமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2% கொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன.
திமுக ஆட்சியில் உண்மையிலேயே சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு திமுக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும்.
கொலை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக அரசு கூறுகிறது. அதிலும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை படுகொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான் முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.
கொலைகளை தடுப்பதிலும், துப்புதுலக்குவதிலும் தமிழக காவல்துறை மிக மோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இதற்கு காரணம் திமுக அரசின் செயல்திறனற்ற தன்மை தான். தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர்.
- ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை.
சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
- திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த 20 பயங்கரவாதிகள் படுகொலைகளுக்கு இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தான் காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியானது.
காலிஸ்தான் இயக்கத்தில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை குறி வைத்து வெளிநாட்டு மண்ணில் இந்த படுகொலைகளை இந்திய உளவுத்துறையின் சிலீப்பர் செல்கள் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்றது. இது திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம் என தெரிவித்துள்ளது.






