என் மலர்

  நீங்கள் தேடியது "Pakistan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்க வைத்தனர்.
  • தற்கொலை தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

  பெஷாவர்:

  பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணம், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

  பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் 2 பேர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

  இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

  தெஹ்ரீக்-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டபோதிலும், பழங்குடியின மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
  • அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இஸ்லாமாபாத் :

  பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்டபோது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேரது ராஜினாமாவை பாராளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

  இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் பெண்களுக்கானவை.

  9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியின் துணைத்தலைவர் பவாத் சவுத்ரி உறுதி செய்தார்.

  9 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையில், "9 தொகுதிகளில் பொருத்தமான வேட்பாளர் கிடைக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.

  2018 பொதுத்தேர்தலில் இம்ரான்கான், 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

  இப்படி பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதின் மூலம் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் பிரபலத்தை நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டாடினர்.
  • இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது.

  லாகூர் :

  பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது.

  கோவில் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், இதை எதிர்த்து போராடி வந்த பாகிஸ்தானின் சிறுபான்மை வழிபாட்டு இடங்களை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பு ஒன்று, கடந்த மாதம் இந்த கோவிலை மீட்டது.

  இதைத்தொடர்ந்து இந்த கோவில் நேற்று மீண்டும் இந்துக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து திறப்பு விழாவை கொண்டாடினர்.

  1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது லாகூர் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 27ம் தேதி தொடங்குகிறது.
  • சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடக்கிறது.

  புதுடெல்லி:

  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும்.

  ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

  ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி 6-வதாக தகுதி அடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

  சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆய்வு செய்தார்.

  கராச்சி:

  பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

  இதுவரை அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அந்நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

  பலுசிஸ்தானில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 60 பேரும், பஞ்சாபில் 50 பேரும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய மற்றும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

  வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகுப்பு உள்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார்.
  • ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  இஸ்லாமாபாத் :

  பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  இதற்கிடையில்,பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 20 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கானின் '(பிடிஐ)பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சி' அதிக இடங்களை கைப்பற்றி 15 இடங்களில் வெற்றிபெற்றது. நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (பிஎம்எல்-என்) - நவாஸ் கட்சி 4 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

  பிடிஐ மற்றும் பிஎம்எல்-கியூ கட்சிகளின் பொது வேட்பாளர் பர்வைஸ் இலாஹி 186 வாக்குகளையும், எதிர்த்து களமிறங்கிய பிஎம்எல்-என் கட்சியின் ஹம்சா ஷாபாஸ் 179 வாக்குகளையும் பெற்றனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பிஎம்எல்-கியூ கட்சி வாக்குகள் பஞ்சாப் சட்டமன்ற துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

  ஆகவே குறைந்த வாக்குகள் பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஹம்சா ஷாபாஸ் மீண்டும் பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

  பஞ்சாப் முதல்-மந்திரி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பஞ்சாபில் முழுமையான கேலிக்கூத்து இது. ஆனால் ஆட்சியில் நீடிக்க எந்த எல்லைக்கும் செல்லும் இந்த ஊழல் அரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

  இன்று இவ்வாறு நடப்பதால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும். இன்று என் தேசம் இந்த செயலுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அனைவரின் பார்வையும் சுப்ரீம் கோர்ட்டின் மீது உள்ளது, அரசியல் பிரிவு 63 தெளிவாக உள்ளது" என்றார்.

  பஞ்சாப் சட்டசபையில் பெரும்பான்மையானவர்களின் வாக்குரிமையை, சட்ட விரோதமாக அரசு தடுத்ததை எதிர்த்து நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
  • பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.

  லாகூர் :

  பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  இதற்கிடையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 20 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.

  இம்ரான்கான் கட்சி 15 இடங்களில் வெற்றிபெற்றது. நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி 4 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

  இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் வெற்றியை தொடர்ந்து நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைத்தன்மையின்மையில் இருந்து விடுபட நியாயமான பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தபடவேண்டும்.

  என்னை ஆட்சியில் இருந்து நீக்கியபோது பொதுத்தேர்தல் நடத்தவேண்டுமென நான் அறிவித்தேன். ஆனால், என் முடிவை கோர்ட்டு நிராகரித்துவிட்டது. ஆனால், என் முடிவு சரியானது தான் என நான் இன்னும் நம்புகிறேன்' என்றார். பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென இம்ரான்கான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
  • விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

  புதுடெல்லி:

  இன்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது.

  அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். 2-வது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி விமானி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

  இதை தொடர்ந்து இந்தியாவின் இன்டிகோ விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானம் பாகிஸ்தானில் தரை இறங்கியது. இதனால் விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பத்திரமாக அங்கு இறங்கினர்.

  இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரி கூறும்போது, "ஜார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை விமானி அறிந்ததும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரை இறக்கம் செய்யப்பட்டது" என்றார்.

  அந்த விமானத்தில் இருந்த பயணிகளை ஐதராபாத் நகருக்கு அழைத்து வருவதற்காக கூடுதல் விமானம் ஒன்றும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

  விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் கராச்சியில் தரை இறக்கப்பட்ட 2-வது இந்திய விமானம் இதுவாகும்.

  இந்த மாதம் தொடக்கத்தில் டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இம்ரான்கான் ஆட்சியில் சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது.
  • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

  இஸ்லாமாபாத் :

  பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார்.

  சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது அரசு சிக்கலில் விழுமாறு செய்தது என்றும் குற்றம்சாட்டினார்.

  தனது புதிய அரசு பதவி ஏற்று, கனத்த இதயத்துடன்தான் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஏற்ப தாங்களும் விலையை உயர்த்தியதாக குறிப்பிட்டார்.

  ஆனாலும் தற்போது கடவுளின் ஆசியுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாகவும், கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

  இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுவதாக அறிவித்து மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். இது நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா என தெரியவந்துள்ளது.
  • பூஞ்சில் உள்ள சக்ரா தா பாக் என்ற இடத்தில் ரோசினா எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் கைது.

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நேற்று இரவு கடந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  அந்த பெண் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா (49) என அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

  பூஞ்சில் உள்ள சக்ரா தா பாக் என்ற இடத்தில் ரோசினா எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
  • கராச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அங்கு விமானத்தை தரை இறக்கினர்.

  கராச்சி:

  டெல்லியில் இருந்து துபாய்க்கு நேற்று ஸ்பெஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. போயிங் 737 மேக்ஸ் ரக விமானமான அதில் 138 பயணிகள் இருந்தனர்.

  விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இடது புற டாங்கில் எரி பொருள் குறைந்திருப்பதாக காட்டியது.

  இதையடுத்து விமானத்தை பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அங்கு விமானத்தை தரை இறக்கினர்.

  உடனே விமானத்தை என்ஜினீயர்கள் ஆய்வு செய்ததில் டாங்கில் இருந்து எரிபொருள் கசிவு இல்லை என்பது தெரிந்தது. இந்திய விமானத்தில் இருந்து பயணிகளை மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாற்று விமானம் மும்பையில் இருந்து கரர்ச்சி விமான நிலையத்தை சென்றடைந்தது.

  கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்த 138 பயணிகளும் மாற்று விமானத்தில் ஏற்றப்பட்டு துபாய் புறப்பட்டு சென்றனர்.

  விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் இந்திய பயணிகள் 11 மணி நேரம் தவித்தப்படி இருந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

  கடந்த 17 நாட்களில் ஸ்பெஸ்ஜெட் விமானங்களில் 7-வது முறையாக கோளாறு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo