என் மலர்

  நீங்கள் தேடியது "US embassy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
  • வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  பாக்தாத்:

  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது.

  இந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், கிழக்கு பாக்தாத்தில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. அந்த பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில், போர்க்கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், இந்த ராக்கெட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தற்போது பொருளாதார மோதல் நடந்து வரும் நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Turkey #US
  அங்காரா:

  அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

  ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது. இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

  இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது.

  இந்நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரில் இருந்து ஒரு கும்பல் தூதரகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  எனினும், இந்த தாக்குதலில் உயிர் சேதம் இல்லை. பக்ரீத் பண்டிகைக்காக தூதரகத்திற்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்கா இன்று தனது தூதரகத்தை அந்நகரில் கோலாகலமாக திறந்துள்ளது. #USJerusalemEmbassy #Palestine
  ஜெருசலேம்:

  இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

  இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் டிரம்பின் முக்கிய ஆலோசகரும் மருமகனுமாகிய ஜெரார்ட் குஷ்னர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை மந்திரி, உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.   அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய ஆவேச தாக்குதல் 37 பேர் கொல்லப்பட்டனர். #Gaza #USEmbassyJerusalem
  ரமல்லா:

  1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

  இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

  இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

  குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

  இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த ஆறு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   தங்கள் தாய்மண்ணை இஸ்ரேல் அபகரித்த நாளான 15-5-1948 என்ற தேதியை நினைவுகூரும் வகையில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் (நாளை) தங்களுக்கு சொந்தமான இடங்களில் குடியேறும் நோக்கத்தில் இந்த போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

  இவர்களின் போராட்டம் வன்முறையாக மாறும் வேளைகளில் இஸ்ரேல் நாட்டு படைகள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

  இந்நிலையில், இன்று கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  காஸா எல்லைப்பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என இஸ்ரேல் அரசின் சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. ஆனால், இதை பொருட்படுத்தாமல் காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று திரண்டனர்.

  கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 37 கொல்லப்பட்டதாகவும் சுமார் ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

  இஸ்ரேல் அரசின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாலஸ்தீனம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாலஸ்தீன அரசின் செய்தி தொடர்பாளர் யூசுப் அல்-மஹமூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டு மக்கள் மீது இன அழிப்பு தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  இவர்களுடன் சேர்ந்து கடந்த ஒருமாதத்துக்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெருசலேம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்படும் நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem

  ஜெருசலேம்:

  இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

  இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.

  வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறுகையில், அமெரிக்காவை தொடர்ந்து தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க விருப்பம் தெரிவித்துள்ள கவுதமாலா, பரகுவே நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோன்ற முடிவை விரைவில் சில நாடுகள் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

  இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இனி ஜெருசலேம் இருக்கும் என்பதால் உலகில் உள்ள இதர நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். #bombthreat #USEmbassy
  சென்னை:

  சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது மண்ணடியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.  #bombthreat  #USEmbassy

  ×