search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb Threat"

    • ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    பெரும்பாக்கத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தபால் ஒன்று வந்தது. அதில் ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரையை சேர்ந்த மேகநாதன் என்று முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் பா.ம.க. கட்சியை தறக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க. கட்சிக்கு பாடமாக வெடி குண்டு வைத்து உள்ளேன். என் சமுதாயத்துக்காக பல ஆஸ்பத்திரிகளில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் என்ற பரபரப்பு கடிதமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினார்கள்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, மயிலப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை 1.55 மணிக்கு இ-மெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    இதையடுத்து உடனடியாக போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பள்ளிகளுக்கு விரைந்து சென்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினார்கள். மேலும் மோப்பநாய் மூலமும் பள்ளி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    ஆனால் இந்த சோதனையின் போது வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரியவந்தது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? இ-மெயில் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர்.
    • போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இதனால் இந்த படங்கள் கோடிக்க ணக்கில் வசூலை குவித்தன. இந்த படங்களின் வரிசையில் நடிகர் பகத் பாசில் நடித்த 'ஆவேசம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.

    ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பகத் பாசில் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் நடித்திருந்தது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடிக்குள் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் 'ஆவேசம்' படத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சி பிரபலமாக பேசப்பட்டது.

    மிகவும் பிரமாண்டமாக நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது போன்று எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சியை பார்க்கும் போதே நமக்குள் ஒருவித உற்சாகம் பிறப்பதை உணர முடியும் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் 'ஆவேசம்' படத்தில் இடம்பெற்றுள்ள பிறந்தநாள் பார்ட்டியை போன்று பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கும்பலை போலீஸ் படை சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலின் தலைவன் தீக்கட்டு சஜன். இவரது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி 'ஆவேசம்' படத்தில் வருவது போன்று பிறந்தநாளை மதுவிருந்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி திருச்சூர் அருகே உள்ள தேக்கிங்காடு மைதானத்தில் தீக்கட்டு சஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்க இருந்தது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், கூட்டாளிகள் என ஏராளமானோர் தேக்கிங்காடு மைதானத்தில் திரண்டனர். 'ஆவேசம்' பட பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருந்தது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு திரண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களை போலீசார் தப்பிச்செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.

    பின்பு அவர்களில் 32 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியதால் தீக்கட்டு சஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் தங்களது திட்டத்தை முறியடித்ததால் ஆத்திரமடைந்த தீக்கட்டு சஜன் திருச்சூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், கிழக்கு மற்றும் மேற்கு போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீக்கட்டு சஜன் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்தனர். தலை மறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் இ-மெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.
    • கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காந்திஜி சாலை - பட்டமங்கலம் சாலை சந்திப்பில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்து உள்ளது. இந்த மணிகூண்டு கோபுரம் மயிலாடுதுறையின் பழமையும் நினைவு கோபுர தூணாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசிய மர்மநபர் மயிலாடுதுறை மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் நாகை மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மணிக்கூண்டு கோபுரத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முடிவில் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது.

    வெடிகுண்டு உள்ளதாக புரளியை பரப்பியவர் யார்? என போலீசார் விசாரித்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மணிக்கூண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தற்போது 7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய ஆணையத்தின் இ-மெயில் முகவரிக்கு இன்று காலை வந்த தகவலில், சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வு அறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை, புரளி என்பது தெரிந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்கு தொலை பேசி மற்றும் இ-மெயிலில் மிரட்டல்கள் வந்தபடி உள்ளது. தற்போது 7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கோவை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலையும் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்களை வழி அனுப்பி வைக்கவும், ஊர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விமானநிலைய ஊழியர்களும் தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இன்று காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது. அதில் விமான நிலையத்தின் குளியலறை தண்ணீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாரும் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    குளியலறை மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆனாலும் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மிரட்டல் எங்கிருந்து வந்தது. எந்த மின்னஞ்சல் முகவரியில் வந்தது. மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு 2முறை வெடிகுண்டு மெட்டல் வந்தது. தற்போது 3-வது முறையாகவும் மிரட்டல் வந்துள்ளது.

    இதற்கிடையே கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • மும்பையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
    • விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வீண் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல் தெரிவித்த இண்டிகோ, "சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம் 6E 5149-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன."

    "முதற்கட்டமாக விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தினர். சோதனை முழுமை பெற்றதும், விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்," என்று தெரிவித்தது.

    கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பயணிகள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

    • சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
    • சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று காலை 8.50 மணியளவில் வந்த இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    வாகனங்கள் நிறுத்தும் இடம், எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என தெரிய வந்துள்ளது.

    இதேபோல் கோயமுத்தூர், ஜெய்ப்பூர், பாட்னா, குஜராத் மாநிலத்தின் வதோதரா விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் விமான சேவைகள் தாமதமாகின.

    • டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
    • சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை 9:35 மணிக்கு மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சல் வந்தது. அதில் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    டெல்லி-துபாய் விமானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரிய வந்துள்ளது.

    • தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப் ஏற்பட்டுள்ளது.

    சென்னை மாநகர போலீஸ் கிழக்கு கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    அதில், சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு மர்ம நபர் இணைப்பை துண்டித்துள்ளார்.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூடுதல் கண்காணிப்பு அங்கு போடப்பட்டுள்ளது.

    மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×