என் மலர்
நீங்கள் தேடியது "கோவை கோர்ட்"
- கோவை ரேஸ்கோர்சில் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை:
கோவை ரேஸ்கோர்சில் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல் இ-மெயில் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு இ-மெயிலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடித்து சிதற உள்ளது என கூறப்பட்டிருந்தது.
உடனே இதுகுறித்து ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை கோர்ட்டு வளாகத்திற்கு சென்றனர்.
அங்கு அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். நீண்ட நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே வாலிபர் தான் கோவை கோர்ட்டுக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக ரூபேஷ் திருச்சூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
சைனா ஜாமீனில் வெளியே இருப்பதால் அவர் கோர்ட்டுக்கு வந்தார். விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி சக்திவேல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ரூபேஷ் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
மாவோயிஸ்டுகள் 5 பேரும் தங்கள் வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால் ரூபேஷ் மனு மீதான விசாரணையையும் நீதிபதி ஒத்திவைப்பதாக கூறினார்.
கோர்ட்டில் ஆஜராக அழைத்து வந்த போது மாவோயிஸ்டுகள் வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோஷம் எழுப்பினார்கள். இந்துத்வாவை வேரறுப்போம் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.






