என் மலர்
ஆட்டோமொபைல்
- பஜாஜ் பல்சர் N150 மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் உள்ளது.
- பல்சர் N150 மாடல் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் N150 மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாவது 150சிசி பைக் ஆகும். இதுதவிர பஜாஜ் பல்சர் P150 மற்றும் பல்சர் 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
பல்சர் N150 மாடலின் தோற்றம் N160 மாடலில் உள்ளதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர், இரண்டு எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்.சி.டி. செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பல்சர் மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த என்ஜின் 14.5 ஹெச்.பி. பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260mm டிஸ்க், பின்புறம் 130mm டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 134, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பஜாஜ் பல்சர் N150 மாடல் ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் மெட்டாலிக் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V, சுசுகி ஜிக்சர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட் உள்ளது.
- இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கரிஸ்மா XMR விலையை உயர்த்துகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் கரிஸ்மா XMR விலை ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கரிஸ்மா XMR அடுத்த மாதம் முதல் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
- டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலின் CNG வேரியண்ட் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த எம்.பி.வி. மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இந்த காருக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
தற்போது CNG வேரியண்ட் முன்பதிவு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ருமியன் பெட்ரோல் வேரியண்ட் வாங்க விரும்புவோர், முன்பதிவு செய்ய முடியும். டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் டொயோட்டா ருமியன் மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ஐகானிக் கிரே மற்றும் ரஸ்டிக் பிரவுன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில், புதிய i20 காரின் N லைன் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹூண்டாய் i20 N லைன் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
2023 ஹூண்டாய் i20 N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காரில் போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், 127 எம்பெட் செய்யப்பட்ட வி.ஆர். கமாண்ட்கள், ஓ.டி.ஏ. அப்டேட்கள், வாய்ஸ் கமாண்ட், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அபைஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே, தண்டர் புளூ மற்றும் ஸ்டேரி நைட் உள்ளிட்டவை மோனோ-டோன் ஆப்ஷனிலும், அட்லஸ் வைட் மற்றும் தண்டர் புளூ இரண்டு நிறங்களுடன் அபைஸ் பிளாக் ரூஃப் டூயல்-டோன் ஆப்ஷனில் கிடைக்கின்றன.
ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் 2023 ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்கும் நிலையில், இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
- நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

"உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்," என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.
"ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரவித்தார்.
- ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உள்ளது.
- காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 23 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் 9 ஸ்பீடு யூனிட் உள்ளது. இதே யூனிட் தான் 4WD AT மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.8 நொடிகளில் எட்டிவிடும். அந்த வகையில், இந்த பிரிவில் அதிவேக மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இத்துடன் பிளாக் ஷார்க் பேக்கேஜ் காரின் வெளிப்புறம் 18-இன்ச் பிளாக்டு-அவுட் வீல்கள், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் லிட்டருக்கு 16.2 கிலோமீட்டர்கள் வரையிலான மேலைஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.
- இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ்-இன் நான்காவது எலெக்ட்ரிக் கார் இது.
- புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQE ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய EQE எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1 கோடியே 39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கிய நிலையில், இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய EQE அறிமுகமாகி இருக்கிறது. 2020 ஆண்டு முதலே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

புதிய EQE மாடல் மெர்சிடிஸ் GLE எஸ்.யு.வி.-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த மாடல் EQB மற்றும் EQS மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் EQS போன்றே காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் முன்புற கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், 20 இன்ச் அளவில் ஏரோ அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
இந்த எஸ்.யு.வி. மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன்கள்- இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் MBUX சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வயர்லெல் சார்ஜர், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQE மாடல் முழுமையாக லோட்-செய்யப்பட்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இது EQE 500 பிளஸ் 4 மேடிக் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 90.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 408 ஹெச்.பி. பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- 2023 ஹோண்டா CB200X மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ஹோண்டா CB200X மாடலில் 184.4சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 CB200X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 CB200X மாடல் தற்போது OBD-2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி 2023 ஹோண்டா CB200X மாடலின் தோற்றம் மற்றும் டிசைன் 2022 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி இந்த மாடல் மஸ்குலர் தோற்றம், சிங்கில்-பீஸ் ஹெட்லைட், பிகினி ஃபேரிங், ஸ்மோக்டு வைசர், ஸ்ப்லிட் சீட் செட்டப், 2-பீஸ் கிராப் ரெயில், நியூட்ரல் ரைடர் டிரை-ஆங்கில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

டிசைன் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்ற போதிலும், 2023 ஹோண்டா CB200X மாடல் புதிதாக டிசெண்ட் புளூ மெட்டாலிக் மற்றும் பியல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் OBD-2 விதிகளுக்கு பொருந்தும், 184.4சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. இலுமினேஷன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், ஃபியூவல் லெவல், நேரம் மற்றும் பல்வேறு விவரங்கள் காண்பிக்கப்படுகிறது.
புதிய CB200X மாடலில் ஹோண்டா நிறுவனம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகளையும், மோனோஷாக் யூனிட்டையும் வழங்கி இருக்கிறது. இதன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய 2023 ஹோண்டா CB200X மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 999. எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
- டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான இந்திய விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் புதிய நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 74 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அதிகாரப்பூர்வ ஷோரூம் மற்றும் ஆன்லைன் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிரியேடிவ் பிளஸ், ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் பிளஸ், ஃபியர்லெஸ் பிளஸ் எஸ், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 12.3 இன்ச் அளவு கொண்ட டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பேடில் ஷிஃப்டர்கள், 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூல்டு குளோவ் பாக்ஸ், 360 டிகிரி கேமரா, ஜெ.பி.எல். பிராண்டின் 9-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டசம், வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது.
டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவைகளில் முறையே 30 கிலோவாட் ஹவர் மற்றும் 40.5 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 325 கிலோமீட்டர்கள் மற்றும் 465 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
புதிய டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
- டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் என்று துவங்குகிறது.
- நெக்சான் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு செப்டம்பர் 4-ம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். நெக்சான் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், தற்போது இதன் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் என்று துவங்குகிறது. இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 11 வேரியண்ட்கள் மற்றும் ஆறு வித்தியாசமான நிறங்களிலும் கிடைக்கிறது.

புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லேம்ப், சீக்வன்ஷூவல் இண்டிகேட்டர்கள் பொனெட்டின் இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள், முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான கிரவுண்ட் கிளியரன்ஸ் 208mm ஆக இருக்கிறது. காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை முழுமையாக கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் இருக்கைகள் (ஓட்டுனர் மற்றும் அவரின் அருகில் இருப்பவைக்கு மட்டும்) வழங்கப்பட்டு இருக்கிறது.
2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.