என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • 163சிசி 4-ஸ்டிரோக் ஏர் மற்றும் ஆயில் கூல்டு 4 வால்வு என்ஜின் உள்ளது.
    • எக்ஸ்ட்ரீம் 250 R-ல் உள்ளதை போன்ற கலர் எல்.சி.டி. டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.

    ஹீ ரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்ட்ரீம் 160R 4V காம்பேட் எடிஷன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஜூம் 110 மற்றும் கரிஸ்மா XMR காம்பேட் எடிஷன்களை போன்றே இந்த மோட்டார்சைக்கிளில் கிரே மற்றும் எல்லோ நிற கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளது.

    இதில் 163சிசி 4-ஸ்டிரோக் ஏர் மற்றும் ஆயில் கூல்டு 4 வால்வு என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 12.4 கிலோவாட் பவரையும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுதவிர ரைடு பை வயர் தொழில்நுட்பம், குரூயிஸ் கண்ட்ரோல், ரெயின், ரோடு, ஸ்போர்ட் என 3 டிரைவிங் மோட்கள் உள்ளன.

    எக்ஸ்ட்ரீம் 250 R-ல் உள்ளதை போன்ற கலர் எல்.சி.டி. டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பழைய விலையை விட, ரூ.12 ஆயிரம் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் எக்ஸ்ட்ரீம் 160R 4V விலை ரூ.1.3 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    • BE6 கார் 6 வேரியண்ட்களும், XEV 9E கார் 5 வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன.
    • பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை அடங்கும்.

    மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9E, BE6 ஆகிய மின்சார கார்கள், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கார்களின் ஓராண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இந்த மாதத்துக்கான தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தக் கார்களுக்கு ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 7.2 கிலோ வாட் ஏசி பாஸ்ட் சார்ஜர், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.25 ஆயிரம், எக்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்பில், பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை இதில் அடங்கும். எனினும், குறிப்பிட்ட டீலர்கள் தரப்பில் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். அதிலும் முதல் 5 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை எனவும், டிசம்பர் 20-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம் எனவும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    BE6 கார் 6 வேரியண்ட்களும், XEV 9E கார் 5 வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன. BE6 ஆரம்பவிலை சுமார் ரூ.18.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் விலை ரூ.26.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். XEV 9E காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.21.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டாப் எண்ட் மாடல் ரூ.30.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    இந்த எலெக்ட்ரிக் கார்களை முழுமையாக சார்ஜ் செய்தால், வேரியண்ட்களுக்கு ஏற்ப 556 கிலோமீட்டர் (59 கிலோவாட் ஹவர் பேட்டரி) முதல் 682 கிலோமீட்டர் தூரம் (79 கிலோவாட் ஹவர் பேட்டரி) வரை செல்லலாம் என `ARAI' அமைப்பு சான்றளித்துள்ளது.

    • 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம்.
    • என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதி (அதாவது இன்று) விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாடா சியரா மாடலின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் என்றும் அடுத்த மாதம் 16ந்தேதி முதல் முன்பதிவு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் டாடா சியரா டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.

    வெளிப்புறத்தில், 2025 டாடா சியரா மாடலில், மேல்புறத்தில் சியரா எழுத்துக்களுடன் கூடிய முழு கருப்பு கிரில், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஃபேசியாவில் லைட் பார், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இத்துடன் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், முன் கதவுகளில் சியரா எழுத்துக்கள், பெரிய அலாய் வீல்கள், கனெக்ட்டெட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பின்புற பம்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.

    உள்புறம், இந்த மாடல் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஒளிரும் டாடா லோகோ, டேஷ்போர்டில் மூன்று-திரை அமைப்பு, ஏசி கண்ட்ரோல்களுக்கான டச் செயல்பாடு, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    • இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும்.
    • இரண்டு மாடல்களும் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் கொண்டுள்ளன.

    போர்ஷே நிறுவனம் தனது மின்சார கார் சீரிசை விரிவுபடுத்தியுள்ளது. போர்ஷே கயென் எலெக்ட்ரிக், சில தசாப்தங்களுக்கு முன்பு வந்த முதல் கயென் காரைப் போலவே மிகவும் கவர்ச்சிகரமானது. டெய்கான் மற்றும் மக்கான் EV போலவே, கயென் EVயும் எண்ணிக்கையில் மிகையானது.

    இந்தியாவில் புதிய போர்ஷே எலெக்ட்ரிக் கார் விலை ரூ.1.75 கோடி மற்றும் டர்போ வெர்ஷன் ரூ.2.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த டர்போ டியூனில், இது 1156hp பவர் மற்றும் 1500 Nm டார்க் உருவாக்குகிறது. மேலும் பூஸ்ட் மோடில் 2.5 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை எட்டும். ஸ்டான்டர்டு வேரியண்ட் 440hp பவர், 835Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும்.



    இரண்டு மாடல்களும் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் கொண்டுள்ளன. மேலும், அளவில் பெரிய 113kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகின்றன. இது முழு சார்ஜ் செய்தால் 642 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும். மேலும் 400 kW வரை ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது. இது "வயர்லெஸ் சார்ஜிங்" உடன் வரும் முதல் போர்ஷே கார் ஆகும்.

    • அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையங்களில் மட்டுமே மாற்றம்.
    • தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை கேடிஎம் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

    பெட்ரோல் டேங் மூடியின் சீல்தரம் குறைபாடு காரணமாக பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான KTM அதன் 125, 250, 390 மற்றும் 990 டியூக் மாடல் பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சீல் குறைபாட்டால் மூடியில் விரிசல் விழுந்து, எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அறிவிப்பை பைக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    2024ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் பைக்குகளை அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றால், சேதத்தை தவிர்க்கும் விதமாக மூடியின் சீல் பகுதியை இலவசமாக சரிசெய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களால் மட்டுமே செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தங்கள் பைக்குகளில் இந்த சீல் குறைபாடு இருக்கிறதா என்பதை வலைத்தளத்தில் சென்று பார்த்து அறிந்துகொள்ளலாம் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று, சேவை பிரிவில் தங்கள் VIN எண்ணை உள்ளிடுவதன்மூலம், உரிமையாளர்கள் தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    இந்தியாவில் 990 டியூக் விற்பனை செய்யப்படவில்லை. ஆகையால் 125, 250, 390 டியூக் மாடல் உரிமையாளர்கள் கூடுதல் விளக்கங்களுக்கு தங்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • XUV 700 மாடல் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • புதிய XUV 700 மாடல் காரில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும்

    மஹிந்திரா நிறுவனம் XUV 700 மாடல் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையொட்டி XUV700 Facelift காரை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த புதிய XUV 700 மாடல் காரில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், XUV700 என்ற பெயரை XUV7XO என மாற்றி வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் இருக்கும் என்றும் இந்த என்ஜின் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    டாடா மோட்டார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 120 எச்.பி. பவரையும், 170 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 118 எச்.பி. பவரையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

    டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் ஹவர் பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இவை முறையே 150 எச்.பி. பவரையும், 167 எச்.பி. பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு வேரியண்டும் 210 என்.எம். வரையிலான டார்க்கை வெளிப்படுத்தும்.

    புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. கர்வ் EV-யில் குரல் மூலம் செயல்படுத்தக்கூடிய பனோரமிக் சன்ரூப், சைகை மூலம் இயக்கக்கூடிய டெயில்கேட், 12.3 அங்குல டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    விலையை பொருத்தவரை புதிய டாடா கர்வ் ரூ.14.55 லட்சம் என்றும் கர்வ் EV சுமார் ரூ.18.49 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    • கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
    • 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    ஆடி இந்தியா நிறுவனம், சிக்னேச்சர் வரிசையில் கியூ3, கியூ3 ஸ்போர்ட் பேக் மற்றும் கியூ5 ஆகிய லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 கார்களிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது.

    இந்த என்ஜின் கியூ3, கியூ3 ஸ்போர்ட்பேக் ஆகியவற்றில் அதிகபட்சமாக 190 பி.எஸ். பவரையும், 320 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.

    புதிய கியூ3 மாடலில் 18 இன்ச் வி-ஸ்போக் அலாய் வீல்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    கியூ5 மாடலில் 19 இன்ச் அலாய் வீல்கள், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பி யன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    • வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
    • உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள்- மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை 2026ஆம் ஆண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது சப்-4 மீட்டர் மாடல் வரிசையை விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் மாருதி சுசுகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட Fronx-ஐ ADAS சூட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய சப்-காம்பாக்ட் SUV (ஸ்கார்லெட் என்ற குறியீட்டுப் பெயர்) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    மஹிந்திரா & மஹிந்திரா விஷன் S கான்செப்ட்டின் உற்பத்திக்குத் தயாரான மாடலை அறிமுகப்படுத்தலாம். இது ஸ்கார்பியோ குடும்பத்திற்குள் நிலைநிறுத்தப்பட்ட ஒரு சப்-காம்பாக்ட் எஸ்யூவி-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் பேயோன் காம்பாக்ட் கிராஸ்ஓவர் வெளியீடும் 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாருதி Fronx ஃபேஸ்லிஃப்ட்

    புதுப்பிக்கப்பட்ட மாருதி Fronx பலமுறை சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்த காம்பாக்ட் கிராஸ்ஓவர் ADAS ஆப்ஷனுடன் வரும் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. இது சுசுகியின் அடுத்த தலைமுறை 48V சூப்பர் எனி-சார்ஜ் (SEC) ஹைப்ரிட் பவர்டிரெயினைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மாடலாகவும் இருக்கலாம்.



    டாடா ஸ்கார்லெட்

    வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், டாடா ஸ்கார்லெட் ஒரு மோனோ-கோக் சேசிஸை அடிப்படையாகக் கொண்டதாகவும், சியரா எஸ்யூவி-இல் இருந்து பல வடிவமைப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றன. ஸ்கார்லெட் மாடலில் டாடா கர்வ்-இல் உள்ள 1.2L மற்றும் நெக்சானின் 1.2L டர்போ பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படலாம்.

    மஹிந்திரா பேபி ஸ்கார்பியோ

    உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 2027 இல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும். இறுதி மாடல் அப்சைடு டவுன் L-வடிவ ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் அப்சைடு டவுன் L-வடிவ டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸ்கிரீன், 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்படலாம்.



    ஹூண்டாய் பேயோன்

    மாருதி Fronx மற்றும் டாடா பன்ச் ஆகியவற்றிற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பதிலாக பேயோன் காம்பாக்ட் கிராஸ்-ஓவர் இருக்கும். இது முற்றிலும் புதிய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1.2L TGDi பெட்ரோல் என்ஜினைக் கொண்ட முதல் ஹூண்டாய் கார் ஆக இருக்கும். இது கிரெட்டாவின் 1.5L டர்போ பெட்ரோல் என்ஜினை விட மிகவும் கச்சிதமான மற்றும் எரிபொருள் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    • இரு பைக்குகளும் ஒரே 399 சிசி, எல்சி4 என்ஜினை பயன்படுத்துகின்றன.
    • அதிகபட்சமாக 45.4 hp பவர் மற்றும் 39nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

    கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சத்தமின்றி உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் X ஆகியவற்றின் விலை ரூ. 27,000 வரை உயர்ந்துள்ளது. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான விலைகள் தற்போது ரூ. 3.26 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.

    அட்வென்ச்சர் X உடன் தொடங்கி, 390 அட்வென்ச்சர் சீரிசின் என்ட்ரி லெவல் மாடலின் விலை தற்போது ரூ. 3.26 லட்சமாக உள்ளது. இது ரூ. 3.03 லட்சத்தில் இருந்து அதிகரித்துள்ளது. இது மாடலுக்கு சுமார் ரூ.23,000 அதிகம் ஆகும். கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை தற்போது ரூ. 3.68 லட்சத்தில் இருந்து ரூ.27,000 அதிகரித்து ரூ.3.96 லட்சமாக உயர்ந்துள்ளது.



    ஹார்டுவேரை மையமாக கொண்டு, இரண்டு பைக்குகளிலும் WP Apex USD ஃபோர்க் முன்புறத்திலும், WP Apex மோனோ ஷாக் பின்புறத்திலும் உள்ளது. அட்வென்ச்சர் X இன் அலாய் யூனிட்டுகளுக்கு ஸ்போக் வீல்களையும், X இன் 19-இன்ச்க்கு பெரிய 21-இன்ச் முன் சக்கரத்தையும் பெறுகிறது. இரண்டும் 17-இன்ச் பின்புற சக்கரத்தைப் பெறுகின்றன. அட்வென்ச்சர் X நிலையான அட்வென்ச்சரை விட குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 5 மிமீ குறைந்த இருக்கை உயரத்தையும் பெறுகிறது.

    அம்சங்களைப் பொறுத்தவரை, இரண்டு பைக்குகளும் 4.5-இன்ச் TFT டிஸ்ப்ளே, ரைடு-பை-வயர், LED லைட்டிங், ஒரு குயிக் ஷிஃப்டர் மற்றும் ஆஃப்-ரோடு ஏபிஎஸ் ஆகியவற்றைப் பெறுகின்றன. இருப்பினும், அட்வென்ச்சர், குரூயிஸ் கண்ட்ரோல், ரைடு மோட்கள், கார்னரிங் ABS மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் என கூடுதல் மின்னணுவியல் அம்சங்களைப் பெறுகிறது.

    இரு பைக்குகளும் ஒரே 399 சிசி, எல்சி4 என்ஜினை பயன்படுத்துகின்றன. இது அதிகபட்சமாக 45.4 hp பவர் மற்றும் 39nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

    • புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 25ஆம் தேதி திட்டமிடப்பட்ட விலை அறிவிப்புக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் புத்தம் புதிய சியராவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக ICE வேரியண்ட் அறிமுகமான நிலையில், இதன் எலெக்ட்ரிக் வேரியண்ட் விரைவில் வெளியிடப்படும்.

    வெளிப்புறத்தில், 2025 டாடா சியரா மாடலில், மேல்புறத்தில் சியரா எழுத்துக்களுடன் கூடிய முழு கருப்பு கிரில், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஃபேசியாவில் லைட் பார், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இத்துடன் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், முன் கதவுகளில் சியரா எழுத்துக்கள், பெரிய அலாய் வீல்கள், கனெக்ட்டெட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பின்புற பம்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.

    உள்புறம், இந்த மாடல் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஒளிரும் டாடா லோகோ, டேஷ்போர்டில் மூன்று-திரை அமைப்பு, ஏசி கண்ட்ரோல்களுக்கான டச் செயல்பாடு, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.

    • மாருதியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி 10,409 யூனிட்கள் விற்பனையான நிலையில் கிராண்ட் விட்டாராவை 13,496 யூனிட்களை விற்பனையானது.
    • மாருதி அடுத்த மாதம் இந்தியாவில் இ விட்டாரா மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது எஸ்யூவி மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகன உற்பத்தியாளர்களும் எஸ்யூவி மாடல்கள் மீது தனி கவனம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், மாருதி நிறுவனம் கடந்த அக்டோபர் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அதில், அக்டோபர் 2025 இல் அதிகம் விற்பனையான மாருதி சுசுகி மாடல் டிசையர் காம்பாக்ட் செடான் ஆகும். இதில் 20,791 யூனிட்கள் விற்பனையாகின. இது 20,087 யூனிட்கள் விற்பனையான எர்டிகாவையும், 18,381 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த வேகன்ஆர் காரையும் முந்தியுள்ளது.

    உண்மையில், இரண்டாவது மாதமாக டிசையர் மாடல் மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கிறது.

    அதன்படி 15,547 யூனிட்களை விற்பனை செய்த ஸ்விஃப்ட் மாடலுடுடன் ஒப்பிடும்போது இது 20,038 யூனிட்களை விற்றது. மாருதியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி 10,409 யூனிட்கள் விற்பனையான நிலையில் கிராண்ட் விட்டாராவை 13,496 யூனிட்களை விற்பனையானது.



    புதிய மாதம் தொடங்கிய அதே நேரத்தில் மூன்று கோடி விற்பனை மைல்கல்லை எட்டியதால், அக்டோபர் மாதம் மாருதி சுசுகிக்கு ஒரு பெரிய மாதமாக அமைந்தது. ஜிம்னிக்கு ஏற்றுமதி மைல்கல்லையும் எட்டியுள்ளது, ஜப்பான் மொபிலிட்டி எக்ஸ்போவில் எட்டு புதிய எஸ்யூவிகளை அறிவித்தது. மேலும் Fronx FFV மற்றும் விக்டோரிஸ் பயோகியாஸ் வேரியண்ட் என இரண்டையும் காட்சிப்படுத்தியது.

    மாருதி அடுத்த மாதம் இந்தியாவில் இ விட்டாரா மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. இ விட்டாரா மாடல் மூன்று வேரியண்ட்கள், இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் ஒரே ஒரு FWD ஆப்ஷனில் வழங்கப்படும்.

    ×