என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto"

    • ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது.
    • கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாவது உண்டு.

    அவ்வகையில் பெங்களூருவில் மழைக்காலங்களில் ஆட்டோ பயணங்களுக்கு அதிக பணம் வசூலிப்பதாக இணையத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

    அந்த பதிவில், ""நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, என் நண்பர் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்ய முயன்றார். அப்போது ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது. அதே நேரத்தில் கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது. இது குறுகிய கால பயணத்திற்கு மிகவும் விலை உயர்ந்தது. இதை பார்த்தவுடன் அவர் உடனடியாக, அவர் ஒரு குடையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்" என்று தெரிவித்தார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக அதிகப்படியான ஆட்டோ கட்டணங்கள் தொடர்பான விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

    • இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியை ஆட்டோவில் 120 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .

    பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி, ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்தார். ஆனால் ஓட்டுநர் ஆட்டோவை நிற்காமல் வேகமாக இயக்கியுள்ளார். அப்போது ஆட்டோவில் பின்னால் சிக்கி பெண் போலீஸ் அதிகாரி இழுத்து செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீஸ் அதிகாரியை மீட்டனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது காயமடைந்து பாக்யஸ்ரீ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது.
    • விபத்துக்குள்ளான ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ நசுங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வீடியோவில், ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது. இதனால் ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது. அப்போது இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி ஆட்டோ நசுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

    • சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார்.
    • சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.

    மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்றிருந்த ஆட்டோவில் 11 வயது சிறுவன் ஹம்சா தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டி ருந்தான்.

    அப்போது சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார். நாயை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தப்பித்து ஓட சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.

    முதலில் நாயோடு விளையாட வற்புறுத்திய அந்த நபர் பின்பு அந்த நாயை அவிழ்த்துவிட்டார். நாய் அவனை கடிக்க தொடங்கியது. ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடிய அந்த சிறுவனை நாய் துரத்திச் சென்று பல இடங்களில் கடித்தது. இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த யாரும் தட்டிக் கேட்கவில்லை. நாயை அழைத்து வந்தவரும் நாய் சிறுவனை கடிப்பதை பார்த்து சிரித்துக் கொண்டி ருந்தார்.

    பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை சோஹைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு.
    • தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு.

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு.
    • தமிழ்நாட்டில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு.

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் "No Work, No Pay" என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

    • நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது.
    • காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

    சென்னை:

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த 'இந்தியா தொழிலாளர் மாநாடு' 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை.

    இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் முழுமையாக தொழிலாளர்களுக்கு பயன்தரவில்லை என்றாலும், அந்தச் சட்டங்களை முன்வைத்து, தங்கள் உரிமைகளை பெற்று வந்தனர். அத்தகைய 44 சட்டங்களில் 29 சட்டங்கள 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டு உள்ளன.

    இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால், 80 சதவீதமான தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்கிற அபாயமும், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயமும் உள்ளது.

    மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

    ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் நாளை இயக்கப்படாது என்று தெரிகிறது.

    அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

    சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

    அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்தார்.

    மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

    • LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.
    • இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17 ஆட்டோக்களை வாங்கி விடலாம்.

    பிரபல ஃபேஷன் பிராண்டான LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17 ஆட்டோக்களை வாங்கி விடலாம் என இந்த பையை இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

    • அந்த ஆட்டோவில் ஓட்டுனருடன் அவரின் 3 நண்பர்களும் இருந்தனர்.
    • ஆட்டோவை இருண்ட, வெறிச்சோடிய பாதையில் செலுத்தினர்.

    உத்தரப் பிரதேசத்தில் பாலியல் தொல்லையில்  இருந்து தப்பிக்க கல்லூரி மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    லக்னோவில் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்கும் நர்சிங் மாணவி கடந்த திங்கள்கிழமை மாலை பர்லிங்டன் பகுதியில் உள்ள தனது மாமாவின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    தகவல்களின்படி, அந்தப் பெண் டெதி புலியாவை அடையும் நோக்கில் பர்லிங்டன் கிராசிங்கிலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் ஓட்டுனருடன் அவரின் 3 நண்பர்களும் இருந்தனர்.

    ஆட்டோ தனது சேருமிடத்திற்கு செல்லாமல் குர்சி சாலையை நோக்கி வேகமாகச் சென்றபோது அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அந்தப் பெண் ஓட்டுநரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு பலமுறை கேட்டார். ஆனால் இதன் பின் அவர்கள் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொள்ளத் தொடங்கினர்.

    மாணவி எதிர்த்து கத்தியபோது, அவரின் வாயை வலுக்கட்டாயமாக மூடி, ஆட்டோவை இருண்ட, வெறிச்சோடிய பாதையில் செலுத்தினர்.

    அப்போது அந்தப் பெண் தனது உயிருக்கு பயந்து, ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். இதில் அவரது தலை, கைகள் மற்றும் முழங்கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

    பெண் ஒருவர் ஆட்டோவில் இருந்து குதிப்பதைப் பார்த்த ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், ஆட்டோ செல்லும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, ஓட்டுநர் சத்யம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அனுஜ் குப்தா என்ற ஆகாஷ், ரஞ்சித் சவுகான் மற்றும் அனில் சின்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

    • இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

     பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

    சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார். 

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாகனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.

    அதாவது, இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குறைந்தது 4 பேர் வரை பயணிக்கலாம். அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் டிரைவரை தவிர்த்து 3 பேர் பயணிக்கவும் முன் இருக்கையில் அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு உள்ளது.

    இதேபோல் மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தனக்கு இல்லை என்பது போல ஒரு ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி BKD சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பள்ளி சீருடையில் பல குழந்தைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டிரைவரின் முன்பக்க இருக்கையில் குறைந்தது 3 பள்ளி குழந்தைகள், பின் இருக்கையில் 11 பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.
    • அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்க வேண்டும்.

    சென்னை:

    மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டு பரிந்துரை வழங்கியது. ஆனால், ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.

    இந்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும், அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை (ஸ்டிரைக்) அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×