search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்"

    • சித்தார்த்‌ தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் (வயது19). இவர் தனது பைக்கை புதிய ரகத்தில் வடிவமைப்பு செய்து திருப்பத்தூர் டவுன் பகுதியில் வண்டியை ஓட்டி வந்தார்.

    பைக்கின் நிறத்தை மாற்றி, புதிய தோற்றத்தை உருவாக்கியதோடு முகப்பு விளக்கு மற்றும் வாகன எண்ணில் (நம்பர் பிளேட்) மண்டை ஓடு இருப்பது போல புதிய உருவ தோற்றத்தை உருவாக்கி இருந்தார். இந்த பைக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து சித்தார்த் தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சிறுவனுக்கு, திருக்குறளை எழுத்துப்பிழை இல்லாமல் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு நூதன தண்டனை கொடுத்தார். அதன்படி சித்தார்த் திருக்குறளை போலீசாரிடம் ஒப்புவித்தார்.

    பின்னர் போலீசார் சிறுவனை, இனிமேல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டக்கூடாது. இது போன்ற வடிவமைப்புகளில் வாகனங்களை மாற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் மனிதர்களை யானைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • வயநாடு மாவட்டத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் பைக்கில் சென்றுள்ளனர்.

    கேரளாவில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால் அங்கு யானைகளின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கேரளாவில் யானைகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி அவை மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    அவ்வகையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி பகுதியில் குழந்தையுடன் பைக்கில் சென்ற ஒரு தம்பதியை காட்டு யானை துரத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் நல்வாய்ப்பாக குழந்தையுடன் பைக்கில் சென்ற அந்த தம்பதி யானையிடம் சிக்காமல் பத்திரமாக தப்பித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • சந்தோஷ் குமார் (20) சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
    • அதில், தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 20 வயதான இவர் சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்களை கொண்டுள்ளார்.

    இந்நிலையில், சந்தோஷ் தனது நண்பரான கவின் (19) உடன் சேர்ந்து கேடிஎம் டியூக் பைக்கில் கோவாவிற்கு பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வந்தார்.

    கோவை பயணத்தை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே யூடியூபர் சந்தோஷ் அதிவேகமாக வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் எதிரே பைக் ஓட்டி வந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் யூடியூபர் சந்தோஷ் அவரது நண்பர் கவின் மற்றும் சதீஷ்குமாருடன் வந்த சந்தோஷ் (36) ஆகியோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மூவரும் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    அண்மை காலங்களில் யூடியூப் , இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது 3 பைக்குகளின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    பஜாஜ் நிறுவனத்தில் Platina 110 ABS, CT125X, Pulsar F250 ஆகிய மூன்று பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

    Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.72,224 ஆக நிர்ணயிக்கப்பட்டது. CT125X பைக்கின் விலை ரூ.71,354 - ரூ.74,554 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.

    தற்போது இந்த பைக்குகளின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் பஜாஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

    • எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது.
    • இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள குசைகுடா-நகரம் சாலையில் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சாலையில் சென்ற எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது. இந்த எரிபொருளால் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த சாலையில் மரத்தூள் மற்றும் மணலைத் தெளித்து போக்குவரத்து போலீசார் சாலையை சீர்செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குசைகுடா-நகரம் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு ரூ.150 கோடி போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 10 லட்சம் இருசக்கர வாகனங்கள், 1.5 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி மட்டுமின்றி, பிற மாநிலங்களின் சாலைகளில் இயங்குகின்றன.

    இருசக்கர வாகனங்களை பொருத்தவரை என்ஜின் சி.சி., அடிப்படையில் வாகன பதிவு வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. 170 சி.சி., வரையுள்ள பைக்குகளுக்கு ரூ.850, 170 சி.சி., மேல் உள்ள டூவீலர்களுக்கு ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது. சராசரியாக 1 சதவீதம் என்ற இந்த வரி, இருசக்கர வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது. இந்த என்ஜின் சி.சி., அடிப்படையிலான பதிவு வரியை கைவிட போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இனி வாகன மதிப்பில் வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. எனவே தற்போதுள்ள 1 சதவீதத்திற்கு பதிலாக 2 சதவிகிதமாக வாகன பதிவு வரியை வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் கார்களுக்கு இணையாக பல லட்சம் மதிப்பில் சொகுசு டூவீலர்கள் சாலையில் ஓடுகின்றன. இந்த பைக்குகளுக்கு ரூ.1,200 தான் பதிவு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே சொகுசு பைக்குகளுக்கு பதிவு வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.40 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் 7 சதவீத வாகன பதிவு வரியை, 8 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ரூ.150 கோடி போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து துறை, 156 கோடியாக வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு ரூ.171 கோடியாக போக்குவரத்து துறை இலக்கு நிர்ணயித்துள்ள சூழ்நிலையில் இதுவரை ரூ.155 கோடியாக வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விசாகப்பட்டினத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் அதிகரித்து வந்தன.
    • போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.

    அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன

    இதனையயடுத்து தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பிய 181 பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • டெஸ்ட் ட்ரைவ் செய்யவேண்டும் என்று கூறி ஷோருமில் இருந்து பைக்கை இளைஞர் ஒருவர் திருடியுள்ளார்.
    • பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் இருந்து டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சாஹல் என்ற இளைஞர் நவம்பர் 3-ம் தேதி ரூ.1 லட்சம் விலையுள்ள செகண்ட் ஹேண்ட் ரேஸிங் பைக்கை வாங்குவதற்காக பைக் ஷோரூமிற்கு வந்துள்ளார். அப்போது தனது அப்பா என்றுகூறி ஒரு முதியவரை அவர் கூட்டி வந்துள்ளார்.

    பைக்கை வாங்குவதற்கு முன்பு டெஸ்ட் ட்ரைவ் செய்யவேண்டும் என்று கூறி தனது அப்பாவை ஷோரூம் ஊழியர்களிடம் விட்டுவிட்டு பைக்கை எடுத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சாஹல் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த முதியவர் நான் சாஹலின் தந்தை இல்லை என்றும் டீ விற்பவர் என்று கூறியுள்ளார்.

    சாஹல் அடிக்கடி தனது கடைக்கு டீ குடிக்க வருவார், ஒரு முக்கிய வேலையாக தன்னுடன் வரும்படி அவர் கூறியதாக ஊழியர்களிடம் அந்த முதியவர் தெரிவித்தார்.

    பின்னர் பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சாஹலை தீவிரமாக தேடிவந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடு போன பைக்கையும் போலீசார் கைப்பற்றினர்.

    சாஹலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "தனக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைமைகளால் பைக் வாங்க முடியவில்லை. ஆதலால் அதிவேக மோட்டார் சைக்கிளை திருடினேன்" என்று அவர் தெரிவித்தார்.

    • வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
    • இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக மெதுவாக ஒரு கார் திரும்பியுள்ளது. அப்போது அவ்வழியே வேகமாக ஒரு பைக் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து பைக்கில் வந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் பைக்கில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து அக்டோபர் 11 அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹூக்ளியில் உள்ள போல்பார் ராஜ்காட் சந்திப்பில் நடந்துள்ளது.

    இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையிலான ரேஸ் போட்டியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் காருக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    • மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.
    • இந்த பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் 2024 எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி RR 310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.

    அதன்படி இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் அப்படியே உள்ளது. இத்துடன் புதிய அபாச்சி ஸ்டிக்கர்கள் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகின்றன. இந்த பைக்கின் ரேசிங் ரெட் நிறத்தின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    இதன் பைக்கின் குயிக்ஷிப்டர் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 92 ஆயிரமும், பாம்பர் கிரே நிறத்திற்கான விலை ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பைக்கின் விங்லெட்கள் 3 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் உறுவாக்கும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அபாச்சி பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்இடி லைட்கள், டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது. 

    • மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய R15M மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

    யமஹா நிறுவனத்தின் 2024 R15M மோட்டார்சைக்கிள் புது வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 2024 யமஹா R15M மோட்டோ ஜிபி எடிஷன் பெயரில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக் யமஹாவின் மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள பெயிண்ட் YZR-M1 MotoGP மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பிரதான நிறம் கருப்பாகவும், ஆங்காங்கே புளூ மற்றும் சில்வர் நிற அக்சென்ட்கள் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி லோகோ ஃபேரிங்கில் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோஜிபி ரசிகர்கள் தங்களது பைக்கில் ஃபேக்டரி ரேசிங் அணி நிறம் இருப்பதை நிச்சயம் விரும்புவர்.

    யமஹாவின் புதிய R15 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 18 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2024 யமஹா R15M மான்ஸ்டர் எனர்ஜி எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார்.
    • தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ட்ரிப் கிளம்பி விடுவார் அஜித்.

    அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார். அப்போது தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

    தல அஜித்தின் எளிமையை பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×