என் மலர்

  நீங்கள் தேடியது "TVS"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
  • கூட்டணியின் அங்கமாக ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தனது டெலிவரி பணிகளுக்காக பயன்படுத்த இருக்கிறது.

  அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே புது கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமேசான் இந்தியா நிறுவனம் டிவிஎஸ் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த இருக்கிறது.

  இந்திய சாலைகளில் 2025 வாக்கில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் மூலம் திட்டத்தை செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. எனினும், டெலிவரிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் ஐகியூப் மாடல்களின் சரியான வேரியண்ட் எது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

  டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் அமேசான் நிறுவனம் எண்ட்ரி லெவல் ஐகியூப் மாடலை வாங்கலாம் என கூறப்படுகிறது. டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஸ்கூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் பயன்தராது. எனினும், இவ்வாறு செய்யும் போது ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்டவை கவலை அளிக்கும் பிரச்சினையாக இருக்கும்.

  இதனை எதிர்கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அமேசானுக்காக அதிக ரேன்ஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் ஐகியூப் வேரியண்டை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யும் என்றே தெரிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரை டிரம் பிரேக்குடன் அறிமுகம் செய்திருக்கிறது. #TVS  டி.வி.எஸ். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.58,252 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிரம் பிரேக் வேரியண்ட் விலை டாப் எண்ட் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை விட ரூ.1,648 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  டி.வி.எஸ். என்டார்க் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. கவர்ச்சிகர வடிவமைப்பு மற்றும் சிறப்பான நிறங்களில் கிடைக்கும் என்டார்க் மாடலின் முக்கிய அம்சங்களாக சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் என்ஜின் இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் பயணிகளுக்கு சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது.  என்ஜின் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் முன்புறம் பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்டிருந்தது. இதே ஸ்கூட்டர் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடனும் கிடைக்கிறது. புதிய ஸ்கூட்டர் பிரேக்கிங் திறன் குறைக்கப்பட்டிருக்கிறது. டிரம் பிரேக் என்டார்க் ஸ்கூட்டரில் என்ஜின் கில் ஸ்விட்ச் நீக்கப்பட்டுள்ளது.

  இதேபோன்று புதிய என்டார்க் ஸ்கூட்டரில் இருக்கையின் கீழ் எல்.இ.டி. லைட், யு.எஸ்.பி. மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவையும் நீக்கப்படுகிறது. மற்றபடி ஸ்கூட்டரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட்டுள்ளது. #Apache #motorcycle  டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 ஸ்டான்டர்டு மாடலின் விலை ரூ.84,578 என்றும், ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ.95,392 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  புதிய மோட்டார்சைக்கிளில் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ், புதிய கன்சோல், சிறப்பான கிராஷ் பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

  இந்தியாவில் அபாச்சி சீரிஸ் முப்பது லட்சம் விற்பனையை கடந்திருப்பதை கொண்டாடும் வகையில், இந்த மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

  புதிய 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மாடலில் ரேஸ் இன்ஸ்பையர் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ், கிராஷ் கார்டு, இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபிரேம் ஸ்லைடர்கள், அல்கான்ட்ரா போன்ற சீட்கள், ஹேன்டில்பார் வழங்கப்பட்டுள்ளது.  புதிய மோட்டார்சைக்கிள் பியல் வைட், கிளாஸ் பிளாக், டி கிரே, மேட் புளு மற்றும் மேட் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய மாற்றங்களுடன் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மாடலில் 177.4 சிசி, 2-வால்வ், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

  இந்த என்ஜின் 16 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். மற்றும் 15.5 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மாடல் அதிகபட்சமாக மணிக்கு 114 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என டி.வி.எஸ். அறிவித்துள்ளது.

  புதிய பைக்கின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட டூயல் ஷாக் அப்சார்பர்கள், பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை டிஸ்க் பிரேக் மற்றும் ஏ.பி.எஸ். ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
  ×