என் மலர்
பைக்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான என்டார்க் 150... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
- டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் ஏராளமான உபகரணங்களை வழங்கியுள்ளது.
- இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் என்று டிவிஎஸ் கூறுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட என்டார்க் 150 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய என்டார்க் 150 மாடலின் விலை ரூ. 1.19 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடலில் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற சில சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. அந்த வேரியண்ட் விலை ரூ. 1.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது.
இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஸ்டைலிங்கில் தொடங்கி, குறிப்பிடத்தக்க வகையில் புதியதாகவும் தனித்துவமாகவும் தெரிகிறது. இதில் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் இன்டிகேட்டர்கள், குவாட் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட பாடி பேனல்கள் உள்ளன. டெயில் லைட்கள் கூட ஸ்கூட்டருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்கும் பிளவு அமைப்பைக் கொண்டுள்ளன.
பாடிவொர்க்கைப் பொறுத்தவரை, ஸ்கூட்டரில் என்டார்க் 125-இன் அதே சேசிஸ் உள்ளது. ஸ்கூட்டரின் இரு முனைகளிலும் 12 இன்ச் சக்கரங்கள் உள்ளன. இதற்கிடையில், பிரேக்கிங்கை முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை-சேனல் ABS ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரில் 149.7cc, ஏர்-கூல்டு, மூன்று-வால்வுகள் கொண்ட ஒற்றை-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 13bhp பவர் மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் CVT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் என்று டிவிஎஸ் கூறுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் ஏராளமான உபகரணங்களை வழங்கியுள்ளது. ஃபுல் எல்இடி லைட்களைத் தவிர, இந்த ஸ்கூட்டரின் டாப்-வேரியண்டில் ஃபுல் TFT டிஸ்ப்ளே உள்ளது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்ட்ரீட், ரேஸ் என இரு ரைட் மோட்கள் உள்ளன.
டிவிஎஸ் என்டார்க் 150 இந்த பிரிவில் முதன்முறையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லீவர்களையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் என்டார்க் மாடலுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன, விரைவில் டெலிவரிகளும் தொடங்கும்.






