என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
    • படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.

    மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் வரும் ஜூன் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    • இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நட்சத்திர தம்பதியான நயந்தாரா - விக்கி அவர்களது குழந்தைகளுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்

    இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திரை உலகை சேர்ந்த பலர் அவர்களது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    அந்த வகையில் நட்சத்திர தம்பதியான நயந்தாரா - விக்கி அவர்களது குழந்தைகளுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில்  வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் விக்கி அவரது மகனுடன் பேசுகிறார் அதனை அவரது மகன் மீண்டும் அவருக்கே கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நீங்கள் எனக்காக செய்த தியாகங்களுக்கு நன்றி என்ற வார்த்தை பத்தாது. நான் இன்று இருப்பதற்கு காரணம் நீங்கள் தான். மை அப்பா மை ஹீரோ. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்"

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

    படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது திரைப்படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர்.

    இந்நிலையில், குபேரா படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

    • சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.
    • படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டனர்.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

    படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டனர்.

    இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் அபிஷன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் "நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தற்கான காரணம் இன்று நிறைவடைந்தது. அவர் என் பெயரை கூறி என்னை கட்டிபிடித்தது எனக்குள் கூஸ்பம்ஸ் ஆனது. மிக அருமையான மனிதர்" என பதிவிட்டுள்ளார்.

    • பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
    • அடுத்ததாக பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அடுத்ததாக பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் நாளை காலை 10.52 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

    இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    • அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'அஃகேனம்
    • இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு டாக்சி டிரைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகிறது.

    பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.

    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது , சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகளில் அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால் , காஜல் காட்சிகள் வருவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நாக சைத்தன்யா - சமந்தா நடிப்பில் வெளியான 'ஈ மாயா சேசாவா' ரீ-ரிலீஸ் ஆகிறது.
    • 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் தொடங்கியது.

    சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது. அவ்வகையில் ரீ ரிலீசான கிள்ளி திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

    குறிப்பாக சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீசில் 1000 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

    நாக சைத்தன்யா, சமந்தா இணைந்து நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஈ மாயா சேசாவா' படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

    தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார்.
    • என் மகன் என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார்.

    தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ராக்கி பார்த்திபன் ! என் மகன், என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

    அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிடமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
    • அனிருத்தும் காவ்யா மாறனும் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது.

    கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இசையமைப்பாளர் அனிருத்த்தை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவியது.

    34 வயதான அனிருத்தும் 32 வயதான காவ்யா மாறனும் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ரெடிட்டில் வெளியான ஒரு வைரல் பதிவைத் தொடர்ந்து இணையத்தில் இந்த தகவல்கள் தீபோல பரவின.

    இந்நிலையில், தனக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்று பரவிய தகவலை அனிருத் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "கல்யாணமா... எனக்கா? கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இப்பாடல் திரைப்படத்தில் இல்லாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

    ×