என் மலர்
நீங்கள் தேடியது "Review"
- கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும்.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு அரசு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான கட்டுமான பணிகளை தாராபுரம் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். அதன் முதற்கட்ட பணி தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும். நீங்கள் கட்டும் கல்லூரி கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஆர்.டி.ஓ.செந்தில் அரசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தாராபுரம் தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான எஸ்.வி.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
- திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.
கோவை:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், அஸ்வின், சரவண குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஒரே பந்துக்கு இரு முறை ரிவ்யூ கேட்ட அரிய நிகழ்வு நடந்துள்ளது. திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார். உடனே ராஜ்குமார் ரிவ்யூ எடுத்தார். அதில் அவுட் இல்லை என 3-வது நடுவர் தெரிவித்தார். 3-வது நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த அஸ்வின் மீண்டும் ரிவ்யூ எடுத்தார். அப்போதும் நாட் அவுட் என தீர்ப்பு வந்தது.
Uno Reverse card in real life! Ashwin reviews a review ?
— FanCode (@FanCode) June 14, 2023
.
.#TNPLonFanCode pic.twitter.com/CkC8FOxKd9
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
- தொண்டியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் செவ்வாய்க்கிழமையும், இறுதி வார செவ்வாய்க்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் நாளாக முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த குறை தீர்க்கும் முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்களது பகுதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி பேரூராட்சி மன்ற தலைவரிடம் மனுக்களாக அளித்தனர்.
இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.
- நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன், ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வீதம் வழங்கப்பட உள்ளது.
- 5 மாணவிகள் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
வேதாரண்யம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 13 மாணவிகள் வெற்றி பெற்றனர். இதில்
11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி அபிநயாவுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மாணவிக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினர்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி, அறிவியல் ஆசிரியர் செந்தில் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொது–மக்கள் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வீதம் வழங்கப்பட உள்ளது.
மேலும் கடந்த நீட் தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த 5 மாணவிகள் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குமாரபாளையம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார், உமேஷ் பூபாலன் ஆகியோர் நேற்று நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது வந்துள்ள நோய் ஒருவகை வைரஸ் நோய், அம்மை வகையை சேர்ந்தது. தடுப்பூசியால் நோய் குணமாகி, வட்டமான தடிப்பு மறைந்து விடும். இல்லாவிடில் அது காய்ந்து தானே விழுந்து விடும். கால்நடைகளுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பகுதிகளுக்கும் சென்று நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டு வருகிறோம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறோம். கால்நடைகள் வளர்ப்போர் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் 174 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆடுகள் வழங்கினர்.
பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலையும் பார்வையிட்டார். அதில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டையும் பார்வையிட்டார்.
அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோபி நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜரின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெறும். காமராஜருக்கு புகழ்சேர்க்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
காமராஜரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய தலைவர்கள் அத்தனை பேருக்கும் புகழ் சேர்க்கின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூய்மை பாரதம் இந்தியா என்றாலும் கூட தமிழகம் தான் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும். பொறுத்திருந்து பாருங்கள். நல்ல பதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam

இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:-
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.
விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இதன் நோக்கம். அதாவது, விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.
இதற்கு முன்பு, 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.
புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.
குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.
இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார். #Agriculture #farmers #CentralGovernment