என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `குமாரசம்பவம் படத்தின் திரைவிமர்சனம்!
    X

    `குமாரசம்பவம்' படத்தின் திரைவிமர்சனம்!

    சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று நாயகன் குமரன் தங்கராஜ் முயற்சி செய்து வருகிறார்.

    கதைக்களம்

    சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று நாயகன் குமரன் தங்கராஜ் முயற்சி செய்து வருகிறார். இவரது இலட்சியம் திரைவேறாமல் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் வருத்தம் அடைகிறார். ஒரு கட்டத்தில் தன் தாத்தா ஜி.என்.குமாரை படம் தயாரிக்க சொல்லி கேட்கிறார்.

    சரி என்று சொல்லும் ஜி.என்.குமார், திடீரென்று இறந்து விடுகிறார். அவர் இறந்த பிறகு ரூபாய் 20 கோடி மதிப்புள்ள வீட்டின் உயிலை நான்கு பங்காக பிரித்து வைத்து இருப்பது குமரனுக்கு தெரிய வருகிறது. நான்கு பங்காக இருப்பது குமரனுக்கு பிடிக்கவில்லை.

    இறுதியில் ஜி.என்.குமார் எழுதி வைத்த உயிலில் நான்கு பங்கு யாருக்கு? ஏன் குமரனுக்கு பிடிக்கவில்லை? இறுதியில் இயக்குனராகும் லட்சியம் குமரனுக்கு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் குமரன், சின்னத்திரையில் இருந்து முதல் முறையாக வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார். காமெடி, சென்டிமென்ட் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணாவிற்கு அதிகம் வேலை இல்லை.

    சமூக போராளி எழுத்தாளராக வரும் குமரவேல் அலட்டல் இல்லாத அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஜி.என். குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், தாரணி ஆகியோரின் நடிப்பு படத்தின் கதைக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    நாயகனின் இலட்சியத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். முதல் பாதி திரைக்கதை தெளிவில்லாமல், காமெடி காட்சிகள் ஒர்க்கவுட் ஆகாமல் செல்கிறது. இரண்டாம் பாதி தெளிவாகவும், காமெடியாகவும் நகர்த்தி இருக்கிறார். குறிப்பாக பால சரவணனின் காமெடி கைகொடுத்து இருக்கிறது.

    இசை

    அச்சு ராஜாணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஜெகதீஷ் சுந்திரமூர்த்தி ஒளிப்பதிவு கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.

    தயாரிப்பு

    Venus Infotainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங் - 2.5/5

    Next Story
    ×