என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைவிமர்சனம்"

    என்.டி.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    செல்வந்தரான நாயகி ஆஷ்னா சவேரி தற்கொலை செய்து கொள்ள விஷத்துடன் தயாராகிறாள். அந்த நேரமாகப் பார்த்து ஒரு திருடன் முனீஷ்காந்த் வீட்டுக்குள் நுழைகிறார். அவரைப் பார்த்த அதிர்ச்சியில் விஷம் இருக்கிற பாட்டில் உடைந்து சிதறிவிட, தன் கையிலிருக்கும் துப்பாக்கியைக் கொடுத்து கொல்ல சொல்கிறார் ஆஷ்னா சவேரி.

    பதட்டமடையும் முனீஷ்காந்த், நான் திருடத்தான் வந்தேன், கொலை செய்கிற அளவுக்கு எனக்கு தைரியமில்லை, என்னை விட்டு விடுங்கள் என்கிறார். என்னை கொல்லாவிட்டால், திருட வந்த குற்றத்துக்காக உன்னை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன் என்று ஆஷ்னா சவேரி, முனீஷ்காந்த்தை மிரட்டுகிறார்.

    இறுதியில் முனிஷ்காந்த், ஆஷ்னா சவேரியை கொலை செய்தாரா? எதற்காக ஆஷ்னா சவேரி தற்கொலை முயற்சி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி, தற்கொலைக்கு முயற்சிப்பது, திருடன் வந்ததும் அவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுட சொல்வது, மறுக்கும்போது மிரட்டி சம்மதிக்க வைப்பது, தற்கொலை முடிவுக்கான காரணத்தை விளக்குவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    ஆஷ்னாவின் கணவராக நடித்து இருக்கும் அசோக், மனைவியைக் கொடுமைப்படுத்துபவர், மனைவியால் கொடுமைகளை அனுபவிப்பவர் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    திருடனாக வரும் முனீஷ்காந்த், ஆஷ்னா சவேரியிடம் மாட்டிக்கொண்டு, தவிக்கும் காட்சியில் சிரிக்க வைத்து இருக்கிறார். நிழல்கள் ரவி, வினோத் சாகர், ஷரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், ஆர்.எஸ். நித்தீஷ், அஸ்மிதா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.

    இயக்கம்

    சூழ்நிலைகள்தான் மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறுவதற்கு காரணமாக அமைகிறது என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்தி தட்சிணாமூர்த்தி. திரில்லர் பாணியில் படத்தை கொடுக்க நினைத்து இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் ரசித்து இருக்கலாம்.

    இசை

    என்.டி.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    ஔிப்பதிவு

    ஒரு வீட்டுக்குள்ளேயே கேமரா கோணங்களை அமைத்திருக்கும் ஆர்.அதிசயராஜின் ஒளிப்பதிவு சிறப்பு.

    ரேட்டிங்-2/5

    செல்லையா பாண்டியனின் பின்னணி இசை ஹாரர் உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    லண்டனில் இருந்து கிராமத்திருக்கு திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், தங்கள் மூதாதையர் வீட்டிற்குள் நுழையும் போது மயக்கமடைந்த ஒரு மர்மமான, வயதான வடிவுக்கரசியை காண்கிறார்கள். அவள் யார் என்று தெரியாமல் அவர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். சில நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. மேலும் அந்த தொழில் அதிபரின் இளம் குழந்தைகள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.

    இறுதியில் வீட்டில் அமானுஷ்ய விஷயம் நடக்க காரணம் என்ன? வடிவுக்கரசி யார்? குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவுக்கரசி, குறைந்த வசனங்களிலேயே பார்வை, உடல் மொழி மூலம் பயத்தை உருவாக்குகிறார். அவரது அமைதியான நடிப்பு தான் படத்தின் முக்கிய பலம். பல காட்சிகளில் அவர் தோன்றும் விதமே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

    இளம் தம்பதியினராக நடித்துள்ள ஆனந்த் நாக், அபர்ணா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் தவிக்கும் பெற்றோரின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகள் தொடர்பான காட்சிகள் கதைக்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. மற்ற கதாபாத்திரங்களான திலீபன், சிங்கம் புலி, கஜா ராஜா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    இயக்குனர் விஜய குமரன், அதிக ஜம்ப் ஸ்கேர் இல்லாமல் சூழல் ஹாரரை தேர்வு செய்துள்ளார். மெதுவாக நகரும் திரைக்கதை மூலம் பயத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார். முதல் பாதி நன்றாக அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் எதிர்பார்க்கக்கூடிய வகையில் நகரவில்லை.

    இசை

    செல்லையா பாண்டியனின் பின்னணி இசை ஹாரர் உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சில இடங்களில் இசை அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், மொத்தத்தில் படத்திற்கு உதவியாக இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    மணிகண்டனின் ஒளிப்பதிவு, பழைய வீட்டின் இருண்ட சூழலை அழகாக பதிவு செய்துள்ளது.

    ரேட்டிங்- 2/5

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர்.

    மும்பையில் ஒரு சாதாரண மனிதனாக விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் தொடர்ந்து சந்திக்கும் இழப்புகள், பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே அவர் பயணம் தொடங்குகிறது. மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.

    இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்களின் நிலைமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி, முகபாவனை மூலம் கவர்ந்து இருக்கிறார். எந்த டயலாக் இல்லாமலும் ஒரு மனிதனின் வலி, கோபம், குழப்பம், அமைதி ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு தான் முக்கிய பலம்.

    அரவிந்த் சுவாமி, குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறார். அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை கொடுத்துள்ளார். அனைவருமே வசனம் இல்லாத இந்த உலகத்துக்குள் நன்றாக பொருந்தி நடித்துள்ளனர்.

    காந்தி டாக்ஸ் வழக்கமான வணிகப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முயற்சி. வசனமே இல்லாமல், காட்சிகள், முகபாவனைகள், இசை மூலமாக மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

    இயக்கம்

    இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.

    எல்லாவற்றையும் பார்வையாளரே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு படம் நகர்கிறது. காந்தி டாக்ஸ் எல்லோருக்குமான படம் அல்ல. வசனம், மாஸ் காட்சிகள், வேகமான திரைக்கதை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முயற்சி, நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

    இசை

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர். இவர் இசை இல்லாமல் இந்த படம் முழுமை பெறாது. ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான உணர்வை இசை மூலம் கொண்டு வந்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக பதிவு செய்துள்ளது.

    ரேட்டிங்-3/5

    பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர். மனைவி, மகன், மகள் என அன்பான குடும்பத்துடன் வாழந்த வருகிறார். இசை மீது தீராத ஆசைக்கொண்ட கிஷோருக்கு எப்படியாவது பாடகராக வேண்டும் என்பது கனவு. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போகிறது.

    ஆனால், அவரது மகள் தனது தந்தை எப்படியாவது பாடகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக பல மேடைகளை ஏறுகிறார். அதன் மூலம், வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டு வரும் கிஷோருக்கு மீண்டும் சறுக்கல் ஏற்படுகிறது. இதனால், மனமுடைந்து போகிறார்.

    இந்த சூழலில் இருந்து கிஷோர் எப்படி வெளியே வருகிறார்? அவரது வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர், ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், இயல்பாக நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    மகன் மற்றும மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    குடும்பத்தாரின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சரிந்து போகும், சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் திரவ். சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருக்கிறார்.

    இசை

    பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி கதைக்களத்திற்கு அதிகமான வலிமையை சேர்த்திருக்கிறது.

    ரேட்டிங்-3/5

    இன்பாவின் இசை படத்திற்கு பலம்.

    மிடில் க்ளாஸ் வாலிபரான அட்டகத்தி தினேஷ், ஆர்ஓ ப்யூரிபையர் வாட்டர் சப்ளை செய்து வருகிறார். திருமணத்திற்காக, மணமகள் தேவை என மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்கிறார்.

    அப்படி, ரேஷ்மாவை சந்திக்கும் தினேஷ்க்கு அவரை பிடித்துப்போகவே இருவரும் பழகுகிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள்.

    காதலிக்கும்போது, தன்னிடம் கருப்பு நிற பல்சர் இருப்பதாக தினேஷ் கூற, அந்த பைக்கில் தன்னை அழைத்து செல்லும்படி ரேஷ்மா ஆசையாக கூறுகிறார்.

    இதனால், தினேஷ் வேறு வழியின்றி பழைய கருப்பு பல்சர் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். ஆனால் அந்த பைக்கை வாங்கியதில் இருந்து தினேஷூக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. தன்னை சுற்றி அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.

    அப்போது, இந்த பைக்கில் ஆவி புகுந்து இருப்பது தெரியவருகிறது. இதன்பிறகு, பைக்கில் அமானுஷ்ய சக்தி புகுந்தது எப்படி? தினேஷை துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    பட்ஜெட் போட்டு வாழும் இளைஞராக வரும் அட்டகத்தி தினேஷ், தனது வழக்கமான எதார்த்த நடிப்பில் இரு வேடங்களில் கலக்கி இருக்கிறார். அழகாக வந்து தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரேஷ்மா. மன்சூர் அலிகான், மதுநிகா, சரவண சுப்பையா, கலையரன் கண்ணுசாமி உள்ளிட்டோரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    வழக்கமான கதை என்றாலும் திரைக்கதை எடுத்திருக்கும் விதத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். பைக்கில் காளையின் ஆவி புகுந்தது வித்தியாசமான முயற்சி.

    இசை

    இன்பாவின் இசை படத்திற்கு பலம்

    ஒளிப்பதிவு

    பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.

    ரேட்டிங்- 1.5/5

    லாக்டவுன் காலத்தில் நம் கண்ட காட்சிகளை கண் முன்னே நிறுத்தி இருக்கிறது.

    நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், அம்மா, அப்பா, தங்கை என வாழ்ந்து வருகிறார். படித்து முடித்து விட்டு வேலை தேடி வரும் அனுபமா, தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர்.

    அனுபமா குடித்துவிட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழ, அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக்கொள்ளும் முகம் தெரியாத நபர் ஒருவர், அவரை கர்ப்பமாக்கி விடுகிறார்.

    தான் கர்ப்பமானது தெரியாமலேயே நாட்களைக் கடத்தும் அனுபமா பரமேஸ்வரன், அது தெரிய வரும்போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதனிடையே, பாதுகாப்பான கருக்கலைப்பு சாத்தியமில்லாமல் போகிறது.

    இறுதியில் அனுபமா பரமேஸ்வரன் வாழ்க்கை என்ன ஆனது? மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அனிதா என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்துள்ளார். குற்ற உணர்ச்சி, செய்வதறியாது திகைத்து நிற்பது, தனிமை, வெறுப்பு, இயலாமை, மன அழுத்தம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனிமையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்ச்சியை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

    மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் மற்றும் லிவிங்ஸ்டன் போன்றோர் படத்திற்கு ஆதரவான நடிப்பை வழங்குகின்றனர். சில துணை கதாபாத்திரங்கள் படத்தில் கதை ஓட்டத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

    இயக்கம்

    லாக்டவுன் காலத்தில் ஒரு பெண் சந்தித்த மனிதர்களையும், அவர்களை எதிர்கொண்ட விஷயத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா. பிள்ளைகள் தங்களது பிரச்சனை குறித்து பெற்றோர்களை அணுகுவதும், போதை கலாச்சார உலகில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியங்கள் குறித்து பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது.

    இசை

    சித்தார்த் விபின் மற்றும் என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோரின் இசை, படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பல இடங்களில் இவர்களின் இசை காட்சியின் கணத்தை மேலும் கூட்டுகிறது.

    ஒளிப்பதிவு

    சக்திவேலின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. லாக்டவுன் காலத்தில் நம் கண்ட காட்சிகளை கண் முன்னே நிறுத்தி இருக்கிறது.

    ரேட்டிங்: 3.5/5

    இசையமைப்பாளர் நந்தாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே கடலூர் சிறைச்சாலையில் கைதியாக மருத்துவ கல்லூரி மாணவன் ஜீவா (ஆகாஷ்) அறிமுகமாகிறார். பின்னர், சிறையில் ஏற்படும் இன்னல்களுக்கு நடுவே சிறை மருத்துவர் அவரை காப்பாற்றுகிறார்.

    பின்னர், 2005ம் ஆண்டு பிளாஷ்பேக் தொடங்குகிறது. ஜீவா தாய், தந்தை, அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மருத்துவம் படிக்கும் ஜீவா, விடுமுறை நாட்களில் அவனின் நண்பர்களுடன் பொழுதை கழிப்பதே வாடிக்கை.

    ஆனால், ஜீவாவின் நண்பர்களில் ஒருவனான மோகன் பெண்கள் குறித்தும் அவர்களை எப்படி ஏமாற்றி தங்களின் வலைக்குள் விழ வைப்பது போன்ற சிந்தனையில் இருப்பவன்.

    இந்நிலையில், ஜீவா பேருந்து பயணத்தின்போது சுமதியை (ஜானகி) எதிர்ச்சியாக சந்திக்கிறார். ஜீவாவிற்கு சுமதியை பிடித்துப்போகவே, அவரை பின்தொடர்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட, ஜீவா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சுமதி நர்ஸாக பணிபுரிய, ஜீவாவிற்கு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

    ஒரு நாள், நண்பன் மோகனின் பேச்சை கேட்டு சுமதியை தனது அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறார் ஜீவா. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி அங்கிருந்து அழுதுக்கொண்டே வெளியேற, தான் செய்தது தவறு என்று உணர்ந்த ஜீவா உடனே சுமதியை தேடிச் செல்கிறார்.

    ஆனால், சுமதி வேலையைவிட்டு நின்றுவிட்டதாக தகவல் தெரியவே, ஜீவா சுமதியை தேதி அலைகிறார்.

    இறுதியில், ஜீவா சுமதியை கண்டுபிடித்தாரா? ஜீவா சிறைக்கு செல்ல என்ன காரணம் என்பது படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    நாயகன் ஆகாஷ் பிரபு மருத்துவ மாணவன் ஜீவாவாக நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். சிறைவாசம் காட்சிகளில் அழுத்தத்துடன் உணர்ச்சி பொங்க நடித்துள்ளார். காதலி சுமதியாக ஜானகி எளிமையான மற்றும் தத்ரூபமான நடிப்பில் கண் கலங்க செய்து விடுகிறார்.

    இயக்கம்

    நடுத்தர குடும்பத்தில் நடக்கும் காதல் கதையை 2005ஆம் ஆண்டிற்கேற்ற காட்சிகளுடன் திரைக்கதையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜே.சுரேந்தர். முதல் பாதியில் சிறையில் இருக்கும் இளைஞனின் நினைவலைகளில் தொடங்கும் படம் குடும்பம், நட்பு, காதல் என்ற கலகலப்புடன் செல்ல, இரண்டாம் பாதி நண்பர்களின் மேலோட்டமான கண்ணோட்டங்கள், காமம் மற்றும் காதலை வேறுபடுத்தி காட்டி உணர்வுகளின் வெளிப்பாட்டை அழுத்தமான காட்சிகளுடன் மனதை தொடும் அளவிற்கு கொடுத்து தடம் பதித்துள்ளார் இயக்குனர் கே.ஜே.சுரேந்தர்.

    இசை

    இசையமைப்பாளர் நந்தாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் எட்வினின் ஒளிப்பதிவு அருமை.

    ரேட்டிங்- 2.5/5

    கிடா சண்டையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ஜாக்கி.

    நாயகன் யுவன் கிருஷ்ணா ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு. மற்றொரு நாயகனான ரிதன் கிருஷ்ணா, ஆண்டு தோறும் கிடா சண்டையில் வெற்றி பெற்று வருகிறார்.

    இந்நிலையில், யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை ஒரு முறை வீழ்த்தி விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி நடந்துக் கொண்டிருக்கிறது.

    கிடா போட்டி நடுவரான மதுசூதனராவ், இருவரையும் களத்தில் இறங்கி கிடாவுடன் மோதி பகையை முடித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரது கிடாக்களும் போட்டிக்கு தயாராகின்றன.

    இறுதியில் கிடா போட்டியில் வெற்றி பெற்றது யார்? இருவரின் பகை முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருபக்கம் அடிதடி, மறுபக்கம் காதல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ரிதன் கிருஷ்ணா. மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கிடா சண்டையை மையமாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகபல். காட்சிகளை உணர்வு பூர்வமாகவும் விறுவிறுப்போடும் நகர்த்தி இருக்கிறார். கிடா சண்டைக்கான வரலாறுகளை ஆராய்ந்து, படத்தை உருவாக்கி இருப்பது சிறப்பு.

    இசை

    போட்டிக்கு பின்னணியில் ஒலிக்கும் சக்தி பாலாஜி இசை அதிரடி காட்டுகிறது.

    ஒளிப்பதிவு

    கிடா மோதல் காட்சிகளை நேரில் பார்ப்பது போல் பளிச்சென என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

    ரேட்டிங்- 3/5

    ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

    திரௌபதி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. நாயகன் ரிச்சர்ட் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஊரில் வக்பு வாரியம் மூலம் கோவில் நிலம் பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார். அப்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நாயகி ரக்ஷனா, கோவிலை பராமரிக்க முன் வருகிறார். கோவிலுக்கு செல்லும் ரக்ஷனா உடம்பில் அமானுஷ்ய சக்தி ஊடுருவி வினோதமாக நடந்து கொள்கிறார்.

    இறுதியில் ரக்ஷனா உடம்பில் ஊடுருவிய அமானுஷ்ய சக்தி யார்? எதற்காக வந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். வீரம், ஆக்ரோஷமான காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக நடித்து இருக்கும் ரக்ஷனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டி நட்ராஜின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    வல்லாள மகாராஜா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவிற்கும் சுல்தான் அரசர்களுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கி இருக்கிறார். இந்து, இஸ்லாம் மதத்திற்கு இடையே நடந்த பிரச்சனையை திரைக்கதையாக வைத்து இருக்கிறார். படத்தில் அழுத்தமான மற்றும் சுவாரசியமான காட்சிகள் இல்லாதது வருத்தம்.

    இசை

    ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    ரேட்டிங்-2/5

    அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    அஜித் குமாரின் 50-வது படமான 'மங்காத்தா', தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த 'ஹெய்ஸ்ட் த்ரில்லர்' (Heist Thriller) படங்களில் ஒன்று. வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ல் வெளியான இந்தப் படம், அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    "Money, Money, Money!" என்று சொல்லிக்கொண்டு, முழுக்க முழுக்க வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டியிருப்பார். அவரது 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் மற்றும் ஸ்டைலான நடிப்பு படத்திற்குப் மிகப்பெரிய பலம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    இந்நிலையில், மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஜனவரி மாதம் 23-ம் தேதி(இன்று) படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அஜித்தின் மங்காத்தா படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    சதீஷ் ரகுநாதனின் இசையும், ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

    ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக ஹாட் ஸ்பாட் 2 மச் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் இணைத்து சொல்ல முயற்சி செய்துள்ளார்.

    பிரபல சினிமா நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களின் உறவினர்களை கடத்திச் செல்லும் எம்.எஸ். பாஸ்கர், அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார். அந்த நிபந்தனைகள் என்ன? உறவினர்கள் என்ன ஆனார்கள்? என்பதே முதல் கதை..

    வெளிநாட்டில் படித்து வளர்ந்த தம்பி ராமையாவின் மகள் சஞ்சனா திவாரி, நாகரீகம் என்ற பெயரில் மிகவும் மாடர்னாக நடந்துக் கொள்கிறார். இதனால், தந்தை, மகள் பிரச்சனை ஏற்படுவது இரண்டாவது கதை.

    2025-ம் ஆண்டில் வாழும் அஸ்வின் குமாருக்கு, 2050-ல் வாழும் பவானிஸ்ரீயுடன் காதல் உருவாகிறது. டைம் டிராவல் மூலம் அஸ்வின் குமாரை சந்திக்கும் பவானிஸ்ரீக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இது மூன்றாவது கதை.

    நடிகர்கள்

    மாஸ் ஹீரோக்களுக்கு தீவிர ரசிகர்களாக நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் கதாபாத்திரங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வை தரும் வகையில் அமைந்துள்ளது. எம்.எஸ். பாஸ்கர் வழக்கம்போல் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

    நாகரீகம் என்ற பெயரில் ஆடை அணிவதில் தாராளம் காட்டும் சஞ்சனா திவாரி, கவர்ச்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறார். அதே நேரத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள், இன்றைய இளம் தலைமுறை பெண்களை நோக்கி கடுமையாக அமைந்துள்ளன.

    அஸ்வின் குமார் – பவானிஸ்ரீ இணையும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றது. கதையைக் கேட்கும் தயாரிப்பாளராக பாலமணி மார்பன், அவரிடம் கதை சொல்ல வரும் பிரியா பவானி சங்கர் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பிரிகிடா சகா அழகான தோற்றத்துடன் வந்து தனது நடிப்பால் கவனம் ஈர்க்குகிறார்.

    இயக்கம்

    ஹாட் ஸ்பாட் 2 மச் சுவாரஸ்யத்தில் பெரிய ஆச்சரியம் இல்லாவிட்டாலும், இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் காமெடியை கலந்து, ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் கதை பெரியதாக ஈர்க்க வில்லை. இரண்டாம், மூன்றாம் கதைகளை ரசிக்க முடிகிறது.

    இசை மற்றும் ஒளிப்பதிவு

    சதீஷ் ரகுநாதனின் இசையும், ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

    ரேட்டிங்- 3/5


    டெக்னிக்கல் அம்சங்களைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலம்.

    நாயகன் கார்த்தியின் தாத்தா ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் போதே அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி ராஜ்கிரணுக்கு வருகிறது. அதிர்ச்சியுடன் அந்த இடத்திலிருந்து வெளியே வரும்போது, அவருக்கு பேரனாக கார்த்தி பிறக்கிறார்.

    பேரன் பிறந்ததால், "இவன்தான் அடுத்த எம்.ஜி.ஆர்" என்ற நம்பிக்கையுடன், கார்த்தி நேர்மையான மனிதனாக வளர வேண்டும் என ராஜ்கிரண் நினைக்கிறார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் மாதிரியான நல்ல பழக்கங்களுடன் கார்த்தி வளர்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நம்பியார் இன்ஸ்பிரேஷனில், தவறான வேலைகளில் ஈடுபட்டு போலீசாக மாறுகிறார்.

    இதற்கிடையில், "மஞ்சள்முகம்" என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. அவர்களை பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கார்த்தி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக நெகட்டிவ் ஷேட்ஸ் உள்ள கதாபாத்திரங்களில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.

    நம்பியார் இன்ஸ்பிரேஷனில் அவர் செய்யும் செயல்கள் கலாட்டாவாக இருக்க, பின்னர் எம்.ஜி.ஆர் போன்று மாறும் தருணங்களில் அவரது மேனரிசங்கள் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

    படத்தின் முதல் பாதி, கார்த்தி தனது தாத்தாவுக்கு தெரியாமல் பல கோல்மால் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பதை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு ராஜ்கிரண் இறப்பதும், அதன் பின்னர் "எம்.ஜி.ஆர் மீண்டும் வருகிறார்" என்ற கான்செப்ட் படத்திற்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.

    கார்த்தியை தவிர, படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நன்றாக செய்துள்ளனர். கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாதது வருத்தம். அதுபோல், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஆகியோருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை.

    இயக்கம்

    நலன் குமாரசாமி இயக்கத்தில் வழக்கமாக இருக்கும் ஒன்-லைனர் காமெடி இந்த படத்தில் குறைவு. அந்த காமெடியும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் வந்து கார்த்தியின் தவறுகளை தட்டி கேட்கும் காட்சிகள் மட்டும் ஆறுதல்.

    இரண்டாம் பாதியில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போல திரைக்கதை அமைந்து இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்கள் முன்கூட்டியே உணர முடிவது பலவீனம்.

    இசை மற்றும் ஒளிப்பதிவு

    டெக்னிக்கல் அம்சங்களைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.

    குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை 60-களின் இசையை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் வழங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் பாடல்களின் ரீமிக்ஸ் அவரின் பங்கிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

    ரேட்டிங்-2/5

    ×