என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijaysethupathi"

    வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் "விடாமுயற்சி". இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், விமாமுயற்சி படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, மகிழ் திருமேனி தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படம் குறித்த மேற்கொண்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.

    இயக்குநர் மணிரத்னம் தக்லைஃப் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் தனது கதையை சிம்பு, விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், சிம்பு அரசன் மற்றும் அஷ்வத்தின் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்.

    விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ரேஜ் திரைப்படத்தை டைரக்டர் சிவனேசன் இயக்கியுள்ளார்.
    • நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம், ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

    சென்னை:

    நடிகர் ஷான் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கும் 'ரேஜ்' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேஜ்' திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பவித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    எம்.எஸ்.நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்தப் படத்தின் டைட்டில் லுக்கில் 'இயல்புக்கு மீறிய காதல் கதை' என்ற டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
    • 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.

    படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.

    இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.

    மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11.11க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
    • விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.

    படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடபட்டது.

    இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.

    மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    அதன்படி, தலைவன் தலைவி திரைப்படத்தின் முதல் பாடலான 'பொட்டல முட்டயே' பாடல் வெளியானது.

    • விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. வெளியிட்ட போஸ்டரில் விஜய் சேதுபதி கடும் கோபத்துடன் கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கி பின்னால் சீட்டுக்கட்டு இடம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.


    விடுதலை

    இந்நிலையில், 'வட சென்னை' படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்தமாக கூறியுள்ளார். 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு, கதை அருமையாக இருக்கிறது விரைவில் வரும்.


    விஜய் சேதுபதி - வெற்றிமாறன்

    யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தியிருக்கிறேன். அதனால் படத்தை பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன் என்று அந்தப் படத்தை நான் பார்க்கல. பாட்டு மட்டும்தான் பார்த்தேன். இதப்பத்தி வெற்றிமாறான் சார்கிட்டையும் கூறியுள்ளேன்" என்று பேசினார்.

    • இயக்குனர் மிஷ்கின் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். 'ட்ரெயின்'(Train) என தலைப்பிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.


    இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின்' திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


    இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • இப்படக்குழு மும்முரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தை இயக்கி இருந்தார். 'அந்தாதூன்' படம் தற்போது தமிழில் 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது. 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.

    பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 'மெர்ரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு மும்முரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி பேசியதாவது, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான முதல் படம் 'ஏக் ஹசீனா தி'. அது 2004-ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார். நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன். அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான 'பட்லாபூர்' எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.

    அதன் பிறகு என்னை சந்தித்து 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.


    அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது, அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விஷயங்களை உரையாடியது, அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சவுகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

    கத்ரீனா கைப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட். இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார் என்ற பயமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சவுகரியமாக மாற்றினார்.


    நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'ஃபார்ஸி' படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.

    பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை. இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

    • 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
    • சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

    கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார். கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தை 24 IIRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

    இப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நீது சந்த்ரா மற்றும் விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
    • இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது.

    இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

    இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார்.

    பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.

    இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என, இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என விளையாட்டு களை கட்டியது.

    இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது.

    புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.

    முழுக்க முழுக்க சுவாரஸ்யங்களை அள்ளித்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, உங்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் 24/7 டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.



    திரைப்பட தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று விஜய் சேதுபதி 'உலகாயுதா' நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
    திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகாயுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.

    இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.



    அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



    பின்னர் பேசிய விஜய் சேதுபதி, "எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்" என்றார்.



    கடைசியில், "எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவருககும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி. 
    ×