என் மலர்
சினிமா செய்திகள்

நடிகர் ஷான் நடிக்கும் ரேஜ் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
- ரேஜ் திரைப்படத்தை டைரக்டர் சிவனேசன் இயக்கியுள்ளார்.
- நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம், ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
சென்னை:
நடிகர் ஷான் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கும் 'ரேஜ்' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேஜ்' திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பவித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
எம்.எஸ்.நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் டைட்டில் லுக்கில் 'இயல்புக்கு மீறிய காதல் கதை' என்ற டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story






