வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன் - விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’.இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடுதலை

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

விடுதலை

இந்நிலையில், 'வட சென்னை' படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்தமாக கூறியுள்ளார். 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு, கதை அருமையாக இருக்கிறது விரைவில் வரும்.

விஜய் சேதுபதி - வெற்றிமாறன்

யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தியிருக்கிறேன். அதனால் படத்தை பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன் என்று அந்தப் படத்தை நான் பார்க்கல. பாட்டு மட்டும்தான் பார்த்தேன். இதப்பத்தி வெற்றிமாறான் சார்கிட்டையும் கூறியுள்ளேன்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com