search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாஸ்"

    பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. #Sendrayan
    தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.

    இவர் கயல்விழி என்பவரை காதலித்து மணந்தார். இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த போதுதான் கயல்விழி கர்ப்பமான செய்தி வெளியில் தெரிந்தது.

    சினேகாவின் ரசிகையான தனது மனைவியின் ஆசையை நிறை வேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார்.



    தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சீமந்தம் நடந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கயல்விழி, நேற்று மாலை 3.30 மணியளவில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் 90 எம்.எல். படத்தில், அவருக்கு துணிச்சலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்தது. அவர் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்த படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் பற்றி படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பிடம் கேட்டபோது,

    ‘இங்கே ஒரு ஆண் நினைப்பதுபோல வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் பெண் அப்படி வளர்வதில்லை.

    ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் பெண்கள் வளர்வதால் பல வி‌ஷயங்களை வெளியே அவர்களும் சொல்வதில்லை. அந்த மாதிரி வி‌ஷயங்களை உடைத்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் என்ன நினைக்கிறாங்க? எப்படி வாழணும்னு ஆசைப்படுறாங்க? அவங்களோட நட்பு எப்படி இருக்கணும்? காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்ட எதிர்பார்ப்பு இதையெல்லாம் கருத்தாக இல்லாமல் வெளிப்படையாக சொல்கிற களம்தான் இந்த ‘90 எம்.எல்’. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் இதுதான் நிஜம். ஓவியா அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக வருகிறார். அதுக்காக எல்லாவற்றுக்கும் சண்டைபோடும் நபர் இல்லை.



    ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கும் 4 பெண்களை அவர் சந்திக்கிறார். தினம் தினம் தங்களுடைய எண்ணங்களை அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று ஒவ்வொருவரும் பகிர்கிறார்கள். படம் முழுக்க காமெடி, துணிச்சல், சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள்கூட இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார். #90ML #Oviyaa #AnitaUdeep #STR

    அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90 எம்.எல் படத்திற்கு சிம்பு இசையமைக்கும் நிலையில், அந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்றை படக்குழு புத்தாண்டு விருந்தாக வெளியிடுகிறது. #STR #Oviya #90ML
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா `காஞ்னா-3', `களவாணி-2', `90 எம்.எல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `90 எம்.எல்' படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது. `பீர் பிரியாணி' என தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. #STR #Oviya #90ML #BeerBiryani

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு என்று கூறியிருக்கிறார். #AishwaryaDutta
    ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:- ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, நிறைய படங்களில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. கதையைத் தேர்வு செய்வதில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். படத்துல ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயின் ரோலுக்கும் முக்கியத்துவம் இருக்கணும். அதனால எனக்கு நடிக்க முக்கியத்துவம் இருக்கிற மாதிரியான கதையைத் தேர்வு செய்கிறேன். ஆரி கூட லவ் ஜானர்ல ஒரு படம் பண்றேன்.

    மகத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்த ரெண்டுமே என்னுடைய கேரியர்ல முக்கியமான படங்களாக இருக்கும். என்னைப் பார்க்க வர்ற தமிழ் ரசிகர்கள், அவங்க வீட்டுப் பொண்ணா நெனைச்சு, என்கிட்ட பேசுறாங்க. பிக்பாஸ்ல என்கூட இருந்தவங்க எல்லார்கூடவும் தொடர்புல இருக்க முடியலை. ஆனா, எங்களுக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல நிறைய அரட்டை அடிப்போம். தனிப்பட்ட முறையில யாஷிகா, மகத் கூட தொடர்ந்து பேசிட்டிருக்கேன். 

    யாஷிகா ஷூட்டிங்ல எவ்வளவு பிஸியா இருந்தாலும் என்மேல அக்கறை காட்டி விசாரிப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற ஸ்க்ரிப்ட் அமைஞ்சா செமயா இருக்கும். தேசிய விருது வாங்கணும்ங்கிறதுதான் என் கனவு. அதனால நம்ம படங்களுக்கு நம்மதான் டப்பிங் பேசணும். எனக்குத் தமிழ் தெரியாதுங்கிறதால, என்னுடைய முந்தைய படங்களுக்கு நான் டப்பிங் பேசினது இல்லை. 
    இப்போ நான் நல்லா தமிழ் கத்துகிட்டேன். இனிமேல் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன். 



    என்னுடைய ஆல் டைம் பேவரைட் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும். ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகள்ல நயன்தாரா, அதிதி பாலன், ரெண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, இந்த ரெண்டு பேருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பாங்க. பெரிய இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு, அது சீக்கிரமே நிறைவேறும்’ என்றார்.
    தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து காட்டட்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கமலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார். #ADMK #TNMinister #RajendraBalaji
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் வரும் போது ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்வர். அதற்கான சந்திப்பு தான் சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின் இடையேயானது. இது அதிசயம் கிடையாது.

    அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.

    ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் முதல்வர் ஆனார்.

    மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள்.

    குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர் கட்சிகள் சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார்.

    இந்த 2 வருடம் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி அல்ல. 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும்.


    கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கிறார். அது எடுபடாது.

    மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாட கத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் தங்கம், உள்பட கட்சி நிர் வாகிகள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #RajendraBalaji
    பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #Arav #Oviya
    பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது சர்ச்சையானது. 

    இதுபற்றி கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன். 

    ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர். 



    ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியிருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சிம்பு நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #AishwaryaDutta
    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் ரித்விகா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

    பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டபோதும் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் வரை சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பிரிக்க முடியாத தோழிகளானார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்பு அவருக்கான பட வாய்ப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 



    ஆனால், நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பிருப்பதாக நடிகர் சென்ராயன் கூறியிருந்தார். சமீபத்தில் தனது பிறந்தநாளை நடிகர் சிம்பு, அனிருத், மகத் ஆகியோருடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார் ஐஸ்வர்யா. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யாதான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்தநாளில் சிம்பு கலந்துகொண்டிருப்பது அதை உறுதி செய்வது போல் தெரிகிறது. #STR #Simbu #AishwaryaDutta

    சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் - சுஜா வருணி திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் நடத்தி வைக்க இருக்கிறார். #Kamal #SujaVarunee
    கிடாரி, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜா வருணி. இவர் கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ் என்ற சிவகுமாருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை சுஜா வருணி கமல்ஹாசனை சந்தித்து நேரில் வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ‘என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்திவைக்க உள்ளார்.

    என் தந்தை சமீபத்தில் மறைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துகொண்டு கமல் தான் என் திருமணத்தின்போது தந்தை இடத்தில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்’ என்றார்.
    பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் காதலிக்கும் அளவிற்கு சென்ற யாஷிகா, இன்னும் அவரை நினைத்து உருகி பேசியிருக்கிறார். #Yashika #Mahat
    இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் நெருக்கமானார். காதலிக்கும் அளவுக்கு போன இந்த நெருக்கம் பிக்பாஸ் முடிந்ததும் முடிந்துபோனது.

    மகத் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்தார். இதுபற்றி இதுவரை பேசாத யாஷிகா இப்போது மனம் திறந்துள்ளார். ‘என்னதான் பக்குவமான பெண் என்றாலும்கூட ரிலே‌ஷன்சிப் என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.

    மனசுக்குள் ஏராளமான அன்பு உள்ளவள். யாருக்காவது வாக்கு கொடுத்துவிட்டால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் கவலைப்பட மாட்டேன்.



    அன்பை வைத்து என்னை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல?’ என்று உருகியுள்ளார்.
    பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்திருக்கும் நடிகை ஜனனி, மாலைமலருக்கு அளித்த பேட்டியில் விஜய் பேசியது எனக்கு பொருந்தும் என்று கூறியிருக்கிறார். #Janani #Vijay
    அவன் இவன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இப்படத்தை அடுத்து ‘தெகிடி’, ‘பலூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் 2 வீட்டிற்கு சென்று வந்திருக்கும் இவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு உங்களின் முதல் ரியாக்‌ஷன்?

    பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, எப்போது வெளியில் சென்று பொது மக்களை பார்க்க போகிறோம் என்று ஏங்கினேன். வெளியில் வந்தவுடன் மக்களை பார்க்கும் போது நம்ப முடியாமல் இருந்தது. வெளியில் இருக்கும் போது நிறைய விஷயங்கள், உணவுகளை அலட்சியம் செய்திருக்கிறோம். ஆனால், அங்கு ஒரு கேக் இருந்தால் கூட அடித்துக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். ஒவ்வொன்றும் ஏங்கி ஏங்கிதான் கிடைத்திருக்கிறது. சாப்பாட்டின் அருமை பிக்பாஸ் வீட்டில்தான் தெரிந்தது.

    பாலா படத்தில் அறிமுகமான அனுபவம், பிக்பாஸ் வீட்டின் அனுபவம் இவற்றிற்கும் இடையேயான வேறுபாடு?

    பாலா படத்தில் நடித்தது எனக்கு சினிமாத்துறையில் பெரிய அறிமுகமாக இருந்தது. அதற்கு பாலா சார்தான் காரணம். அது நடிப்பு பற்றிய அனுபவம். பிக்பாஸ் வீட்டில், ஜனனி யாரு? எப்படி? என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது வேற அனுபவம்.

    சினிமாத்துறையில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள்?

    சினிமாவில் ஒவ்வொருத்தருக்கும், நேரம், என்று ஒன்று அமையும். அப்போது, அவர்களுடைய கடின உழைப்பு எல்லாம் தெரியும். அதற்கு பொறுமை தேவை. அதைத்தான் நான் கற்றுக் கொண்டேன்.

    தெகிடி 2 எப்போது?

    அப்போவே தெகிடி படத்தின் 2ம் பாகம் உருவாவது பற்றி பேச்சுகள் இருந்தது. அப்படி உருவானால், கண்டிப்பாக நடிப்பேன்.

    பலூன் படம் பற்றி?

    பலூன் படத்தில் பாவடை சட்டை போட்டு நடித்திருந்தேன். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. 



    பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நீங்கள் மிஸ் செய்தது?

    என் குடும்பத்தை நான் மிகவும் மிஸ் செய்தேன். போனை தான் மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடக்க வில்லை.

    அரசியலுக்கு வருவீர்களா?
    எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். 

    உங்களுக்கு பிடித்த ஹீரோ?
    எனக்கு அஜித் சார் (தல) ரொம்ப பிடிக்கும்.

    யார் உங்களுக்கு பெஸ்ட்?
    முதல் படத்தில் என்னுடன் நடித்த ஆர்யா, விஷால்

    பிக்பாஸ் வீட்டில் உங்கள் விஷபாட்டில் என்று பேர் வைத்தார்கள்? நீங்கள் யாருக்கு வைப்பீர்கள்?
    நான் டேனிக்கு விஷபாட்டில் என்று பெயர் வைப்பேன்.

    காதல் அனுபவம் இருக்கா?
    நான் காதலித்திருக்கிறேன். ஆனால், இப்போ யாரும் இல்லை.

    சினிமாவில் தமிழ் பெண்ணுக்கு வாய்ப்புகள் குறைவு, அதை தக்க வைக்க எடை குறைப்பு, உணவு கட்டுப்பாடு முயற்சி செய்தீர்களா?

    பெரிய முயற்சி ஒன்றும் இல்லை. உணவு கட்டுப்பாடு இல்லை. கொழுப்பு சத்து அதிகம் உள்ள பொருட்களையும் சாப்பிடுவேன். ஆனால், எடை போட மாட்டேன். அது எனக்கு இறைவன் கொடுத்த வரம். 

    மீடூ பற்றி?

    எல்லாத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. ஆனால், அதைப்பற்றி நிறையபேர் தைரியமாக சொல்கிறார்கள். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது சரியான நேரம். இப்போ பேச வில்லை என்றால், நிறைய விஷயங்கள் வெளியில் வராது.

    ஜனனிக்கு என்ன பிடிக்கும்?
    ராஜா சார் மியூசிக் கேட்டுக் கொண்டு, தனியாக காரில் நீண்ட தூரம் செல்ல பிடிக்கும்.

    சினிமாவை விட்டு போக நினைத்ததுண்டா?
    அப்படி நினைத்தது இல்லை. வீட்டில் தான் என்ஜினியரிங் படித்து விட்டு ஏன் சினிமாவில் என்று கேட்பார்கள். ஆனால், எனக்கு சினிமாவில்தான் ஆர்வம் அதிகம். வயதான பிறகும் சினிமாவில் ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பேன்.

    எப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்கள்?
    எனக்கு ஏற்ற கதையாக இருக்கவேண்டும். கிளாமர் எனக்கு செட்டாகுமானு தெரியவில்லை. வெயிட்டான ரோல். மக்கள் மனதில் நிற்கிறமாதிரியான ரோல். 



    இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கலாம் என்று நினைத்தது உண்டா?

    வரலாற்று கதைகளில் நடிக்க ஆசைப்பட்டதுண்டு. முந்தைய காலத்திற்கு நம்மால் செல்ல முடியாது. அதுமாதிரியான படங்களில் நடித்தாலாவது அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ளலாம். ஜோதா அக்பர் போல் ராணி கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    சர்கார் இசை வெளியீட்டில் விஜய் பேசியது பற்றி?
    உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்திறவன் கிட்ட கம்முனும் இருந்தால் வாழ்க்கை ஜம்முனுக்கு இருக்கும் என்று விஜய் பேசியது எனக்கு பொருந்தியது. நான் அப்படித்தான் இருப்பேன். 

    பிக்பாஸ்க்கு பிறகு?
    பிக்பாஸ்க்கு பிறகு எல்லாரும் என்னிடம் நன்றாக பேசுகிறார்கள். எங்க வீட்டு பெண் போல்தான் நாங்கள் பார்த்தோம் என்று கூறுகிறார்கள். நான் வெளியே வரும் போது நிறைய பேர் அழுதார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. 

    ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?
    இரண்டு பேரையும் பிடிக்கும். ஆனால், அஜித் படத்தில்தான் நடிப்பேன். விஜய் ரசிகர்கள் மன்னித்து விடுங்கள். 

    பிடித்த இயக்குனர்கள்?
    பாலா, மணிரத்னம்

    பிடித்த படம்?
    அலைபாயுதே

    ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
    கூடிய சீக்கிரம் நல்ல படங்களில் என்னை பார்ப்பீர்கள். தொடர்ந்து உங்கள் அன்பை கொடுங்கள். ரசிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பார்ப்பேன். 
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான விஜயலட்சுமி அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #BiggBoss #VijayaLakshmi
    வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன விஜயலட்சுமி. மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

    அதன்பின்னர் சில படங்களில் நடித்தபோதும் பெரிய அளவிலான வெற்றிகளை அப்படங்கள் பெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனின் பாதியில் வந்து திடீர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

    பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக எந்தப் படத்தில் அவர் நடிப்பார் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.



    அதில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் வெங்கட் பிரபு தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமியின் குழந்தை நிலன் நடந்து வந்ததை பார்த்து, திருமணம் செய்து கொண்டுகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்ததாக மும்தாஜ் கூறினார். #Mumtaj
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ், ஷாரிக்கிடம் ஒரு தாயைப் போல பாசம் காட்டினார். 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் மும்தாஜுக்கு தற்போது 38 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர் விஜயலட்சுமியின் மகனை பார்த்தபோது, தனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ‘பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மகனைப் பார்த்த உடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.



    விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்தது’ எனக் கூறியுள்ளார். ஆனால் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார். #Mumtaj

    ×