என் மலர்
சினிமா செய்திகள்

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு கல்யாணம் ஆயிருச்சா! - வைரலாக பரவும் புகைப்படம்
- பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.
- கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார்.
30 வயதை தாண்டியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவர் திவாகர் தொடர்ச்சியாக நேர்காணல்களில் கூறி வருகிறார். இந்நிலையில், திவாகருக்கு திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அப்புகைப்படத்தில் திவாகர், கோட் சூட் போட்டுக்கொண்டு, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கிறார். அவர்களுக்கு பின்னால் திருமண மேடை பேக்-கிரவுண்டில் 2018ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதே சமயம் இந்த புகைப்படம் உண்மையா என்று தெரியவில்லை. இதுகுறித்து திவாகரின் பதில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






