search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Bigg Boss"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
  • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை:

  நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

  அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

  அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

  ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

  காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

  நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

  வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

  சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

  இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

  பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ளன.
  • பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் அறிவிப்பு.

  தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருப்பதை அடுத்து ஏழாவது சீசன் தொடங்கப்படட்டது. இன்று ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

   

  பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு..,

  சரவணா விக்ரம்

  மாயா எஸ் கிருஷ்ணா

  விஷ்னு விஜய்

  ஐஷூ

  ஜோவிகா விஜயகுமார்

  அக்ஷயா உதயகுமார்

  மணிசந்திரா

  வினுஷா தேவி

  நிக்சென்

  பிரதீப் அந்தோனி

  ரவீனா தாஹா

  பூர்ணிமா ரவி

  கூல் சுரேஷ்

  யுகேந்திரன் வாசுதேவன்

  விசித்ரா

  இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை போன்றே ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
  • ஆறாவது சீசனில் நடிகர் அசீம் டைட்டிலை வென்றார்.

  தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்நிலையில், பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார்.
  • இரண்டாவது இடம் விக்ரமனுக்கு வழங்கப்பட்டது.

  சென்னை:

  பிக்பாஸ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த சீசனில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.

  பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கு இடையே போட்டி தீவிரமானது.

  தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

  அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.


  பிக்பாஸ் சீசன் 6

  இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், ரக்ஷிதா இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று அசீம் கேட்கிறார். அதற்கு எந்த டாஸ்க்லையும் நான் பண்ணுனத நீங்க பாத்ததே இல்லையா. ரீல் முகம் ரியல் முகம் எல்லாம் நான் நடிச்சிட்டேன் அசீம் இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்ல என்று வாதிடுகிறார். இதற்கு சரி இங்க வந்து ஸ்டார்ட் கேமரா இல்லாம நடிச்சிட்டு இருக்கீங்களா என்று வெளுத்து வாங்குகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இப்போது பிக்பாஸ் வீட்டில் ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர்.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 78 நாட்களை நெருங்கியுள்ளது.


  பிக்பாஸ் சீசன் 6

  இதில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், இந்த வாரம் நாமினேஷனுக்கு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு அசீம் இந்த வீட்டில் பெரிதாக எதும் செய்தது போல் எனக்கு தெரியவில்லை என்று சிவினை நாமினேட் செய்கிறார். பதிலுக்கு சிவின் எந்த திருத்தமும் நடக்காத மாதிரி நான் உணர்கிறேன் என்று அசீமை நாமினேட் செய்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் 74 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 74-வது நாட்களை நெருங்கியுள்ளது.


  பிக்பாஸ் சீசன் 6

  இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு 1980-களில் இருக்கும் கலை கல்லூரியாக மாறியுள்ளது. இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் நீங்கள் விரும்பும் நபரை அழைத்து நேர்காணல் செய்யலாம் என்று விக்ரமன் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, ஏடிகே, அசீமை நேர்காணல் செய்கிறார்.


  பிக்பாஸ், சீசன் 6

  அப்போது இந்த வீட்டை பற்றிய புரிதல் உங்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஏடிகே, அசீமிடம் கூறுகிறார். இதற்கு அசீம் நான் நானாக இருக்கிறேன் என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ அவர்கள் அவர்களாக இல்லை என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் 6-வது சீசன் 33 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இன்று வெளியான புரோமோவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 33-வது நாட்களை நெருங்கியுள்ளது.


  பிக்பாஸ் சீசன் 6

  இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் இந்த வார போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத ஒரு நபரை தேர்வு செய்ய சொல்லி பிக்பாஸ் விக்ரமனிடம் கூறுகிறார். இதற்கு ஜனனி என்று விக்ரமன் சொல்லவே அமுதவாணன் வாதிடுகிறார். இதனால் கடுப்பான ஜனனி, அமுதவாணனை நீங்கள் எல்லாத்தும் இப்படி தான் பிரச்சினை பண்றீங்க என்று கதறி அழுகிறார். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் 6-வது சீசன் தற்போது 32-நாட்களை எட்டியுள்ளது.
  • இதன் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 32-வது நாட்களை நெருங்கியுள்ளது.


  பிக்பாஸ் சீசன் 6

  இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஏ.டி.கே. என்று ஜனனி பதிலளிக்க இருவருக்குள்ளும் முட்டிக் கொள்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற ஏ.டி.கே. ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் நான் ஏன் உன்னை கூப்பிட்டு அறிவுரை கூறுகிறேன் உன்னிடம் ஒரு தனிப்பட்ட அன்பு இருப்பதால் தான்.


  பிக்பாஸ் சீசன் 6

  அந்த அன்பை கொச்சப்படுத்திட்டீங்க. நான் ஒரு தங்கச்சி மாதிரி அந்த அவளை பார்த்தேன். அவள் மீது வைத்த பாசம் போல் இந்த வீட்டில் யாரின் மேலும் நான் வைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் சென்று அவளிடன் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்பேன். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 26 நாட்களை எட்டியுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 26-வது நாளை நெருங்கியுள்ளது.


  பிக்பாஸ் சீசன் 6

  இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் என்னை மதிக்காத டீம் இருந்தா என்ன? இல்லைனா என்ன? என்று அசீம் மகேஸ்வரியிடம் கத்துகிறார். அதற்கு பதிலளித்த மகேஸ்வரி நீங்க ரொம்ப நல்ல பேசுறிங்க அசீம் என்று கூறுகிறார். தொடர்ந்து அசீம் உங்கள மாதிரி எல்லாம் எனக்கு பேசத் தெரியாது மா என்று சொல்கிறார். இதற்கு மகேஸ்வரி உங்களுக்கு அறிவு இருக்குதுல அப்ப ஏன் பிரேக்கிங் நியூஸ் எப்படி இருக்கனும்னு முதல்ல யோசிக்கல என்று கூறுகிறார். இறுதியில் அசீம் நீங்கள் ஜட்ஜிங்கில் பூஜ்ஜியம் என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் பெரும் பூகம்பம் கிளம்பியுள்ளது.