Bigg Boss Season 9: சான்ட்ராவை கீழே தள்ளிவிட்ட பாரு, கம்ருதீனுக்கு ரெட் கார்டு? - வெளியான தகவல்

பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
Bigg Boss Season 9: சான்ட்ராவை கீழே தள்ளிவிட்ட பாரு, கம்ருதீனுக்கு ரெட் கார்டு? - வெளியான தகவல்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதாக நம்மதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் சந்தாஷமாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com