என் மலர்
நீங்கள் தேடியது "பவித்ரா"
- நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்னத்திரை நடிகை பவித்ரா, "சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் எவ்வளவோ சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்களின் திருமணம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பவித்ரா- நரேஷ் இணைந்து நடித்த 'மல்லி பெல்லி' படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இவர்களின் காதல் கதையை படமாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த படத்தில் தன்னை இழிவுப்படுத்தும் காட்சிகள் உள்ளதாகவும் ஓடிடியில் இருந்து படத்தை நீக்க வேண்டும் என்றும் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து 'மல்லி பெல்லி' திரைப்படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






