என் மலர்
நீங்கள் தேடியது "Diwakar"
- பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.
- கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார்.
30 வயதை தாண்டியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவர் திவாகர் தொடர்ச்சியாக நேர்காணல்களில் கூறி வருகிறார். இந்நிலையில், திவாகருக்கு திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அப்புகைப்படத்தில் திவாகர், கோட் சூட் போட்டுக்கொண்டு, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கிறார். அவர்களுக்கு பின்னால் திருமண மேடை பேக்-கிரவுண்டில் 2018ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதே சமயம் இந்த புகைப்படம் உண்மையா என்று தெரியவில்லை. இதுகுறித்து திவாகரின் பதில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 9 தமிழில் நாளை முதல் தொடங்கும் நிலையில், இன்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

இதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும், சமீப காலமாகவே அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- “வாட்டர் மெலன் ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்,
- நடிகை ஷகிலா அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் சமீபத்திய பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால், நடிகை ஷகிலா அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
"வாட்டர் மெலன் ஸ்டார்" என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர், நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். இந்த காட்சி மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே "வாட்டர் மெலன் ஸ்டார்" என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூரியை விட தான் உயர்ந்தவன் ,எந்த விதத்தில் நான் அவரை விட தகுதி இல்லாதவன் என அவர் பேசிய பேச்சு சர்சைக்குரியானது. அதனை தொடர்ந்து வந்த நேர்காணல் மற்றும் பேட்டியில் சர்சைக்குரிய பதில்களை கூறியதால் மேலும் பிரச்சனைகளும் அதிகமானது. இதனால் திவாகரை நெட்டிசன்கள் திட்டியும் அவர் செய்த தவறை புரிந்துக் கொள்ளும்படி வீடியோக்களும் கமெண்டுகளும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் திவாகர் அதனையெல்லாம் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.
சமீபத்தில் நடந்த ஆணவக்கொலையை மையப்படுத்தி அது சரிதான் என்ற கருத்தை முன்வைத்து கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனை கண்டித்து மற்றும் தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருவதால் திவாகர் மீது நடிகை ஷகீலா புகார் கொடுத்துள்ளார்.






