என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் சீசன் 9.. வீட்டிற்குள் நுழைந்ததும் வேலைய ஆரம்பிச்ச வாட்டர் மெலன் ஸ்டார்
    X

    பிக்பாஸ் சீசன் 9.. வீட்டிற்குள் நுழைந்ததும் வேலைய ஆரம்பிச்ச வாட்டர் மெலன் ஸ்டார்

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் நாளை முதல் தொடங்கும் நிலையில், இன்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும், சமீப காலமாகவே அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×