என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய அப்டேட்"

    • திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
    • 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.

    படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.

    இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.

    மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11.11க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது.
    • படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

    இந்த நிலையில் , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று பாடல் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    ×