என் மலர்

    நீங்கள் தேடியது "song"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
    • சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக (வரலாற்று) திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் ரிக் யஜூர் சாம அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ற தாகவும் பின்பு இங்கு வந்த திருநாவுக்கரச சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் தேவார பதிகம் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

    அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.

    இந்த ஐதீக திருவிழா ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைப்பெற்று வருகிறது.

    இதையெட்டி இந்த ஆண்டு நடைபெற்ற ஐதீக வரலாற்று திருவிழாவில் மகரதோரண வாயிலில் அப்பர் சம்மந்தர் எழுந்தருளினர்.

    பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும் ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர். ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி விளக்கி பேசினார்.

    அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில்; வேதாரண்யம் விளக்கழகு என்பதற்குகேற்ப வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு அப்பர் சம்மந்தர் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரனிஆதினம் செவ்வந்தநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வேதபாராயணன் ஓதப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.
    • மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக நாகை செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வு நேரங்களில் சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதிலும், இவர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல், பொதுசுகாதாரத்துறை விழிப்புணர்வு பாடல், நாகை மாவட்டத்தை பற்றிய பாடல் மக்களை வெகுவாய் கவர்ந்தது.

    இந்நிலையில், மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நாகை செல்வன் பாடிய பாடல் நாகை மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலாக வெளியிடப்பட்டது. அப்போது சமூக விழிப்புணர்வு பாடல் பாடி வருவதற்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேது பகவானுக்கு உரிய பாடல் இது.
    • தினமும் இந்த பாடலை பாடினால் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    கேதுவிற்குரிய கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபடுவதன் மூலம் சோதனைகள் அகன்று சாதனைகளை நிகழ்த்த இயலும்.

    ஞானம் வழங்கும் நல்லதோர் கேதுவே!

    காணும் தொழில்களில் கனதனம் தருவாய்!

    அல்லியில் சிகப்பும், அழகு வைடூர்யமும்

    உள்ளம் மகிழ உந்தனுக் களிப்பார்!

    கொள்ளாம் தான்யம் குணமுடன் வழங்கினால்

    எல்லா நலங்களும் ஏற்றிடச் செய்வாய்!

    வல்லமை பெற்றிட வாழ்வில் சுகம்பெற

    நல்லவன் கேது நலமெலாம் தருக!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார்.
    • அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் புதுமைமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் இயேசுநாதர் பிறந்தது குறிக்கும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கிறிஸ்துமஸ் விழா நள்ளிரவு சிறப்பு திருப்பலி 11.45 மணிக்குதொடங்கியது. பேராலய மேடையில் பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் பங்கு கொண்டனர்.

    .சரியாக 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக பேராலயஅதிபர் சாம்சன் குழந்தை இயேசு சுரூபத்தை உயர்த்தி காண்பித்தார். அதன் பின்னர் குழந்தை இயேசு சுரூபத்தை துணை அதிபர் பெற்று அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு சுரூபத்தை வைத்து புனிதம் செய்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசுநாதரின் சிறப்புகளையும் இயேசுநாதர் பிறப்பால் உலகம் பெற்ற நன்மைகளையும் பேராலய அதிபர் சாம்சன் திருப்பலியின் போது எடுத்துக் கூறி அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    இன்று கிறிஸ்துமஸ் திருப்பலிகள் காலை, மதியம், மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்று நாள் முழுவதும் பூண்டி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து அருள் தந்தையரிடம் ஆசி பெற்று சென்றனர். விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
    • பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வேதாரண்யம்:

    பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

    அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குருவின் சந்நிதியில் மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம்.
    • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

    குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்த ட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல். நடவு பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரை நூற்றாண்டு காலம் சீரழிவு நடைபெற்றுள்ளது என்று மக்கள் நீதி மய்ய பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ என்ற கட்சி பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கவிஞர் சினேகன் பாடல்களை எழுத, தாஜ்நூர் இசை அமைத்திருந்தார். இந்த பாடல் குறுந்தகட்டை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு பேசியதாவது:-

    நாம் ஒரு மாற்றத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இனிவரும் விழாக்களில் நாம் மாலைகள், பொன்னாடைகளை தவிர்ப்போம். வரும் வழியில் சில பேனர்கள் பார்த்தேன். நம் சாலைகளில் வழிமறிக்காமல், எங்கு அனுமதி இருக்கிறதோ, அங்கு மட்டுமே வைக்க வேண்டும்.

    முன்பு எல்லாமே நன்றாக இருந்தது. இப்போது எல்லாமே கெட்டுவிட்டது. மாற்றத்தை நீங்கள் தான் செய்யப்போகிறீர்கள். நான் செய்துவிடுவேன் என்று நம்பி மல்லாந்து சாய்ந்துவிடாதீர்கள். இந்த நாட்டை மாற்றும் வலிமை உங்கள் கையில் இருக்கிறது.

    ‘எப்படி சார் நீங்களெல்லாம் தாக்குப்பிடிக்க போறீங்க?, இங்கு ஓட்டுகளை மொத்தமாக பணத்தை கொடுத்து வாங்கும் விளையாட்டு நடக்கிறதே... எப்படி ஜெயிக்கப் போறீங்க’ என்று கேட்கலாம்.

    நாங்கள் பணம் வாங்கமாட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது. வாங்குபவர்களுக்கு அதனால் என்னென்ன நஷ்டம் உண்டாகிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். 5 ஆயிரத்துக்கும், 10 ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு நம் உரிமைகளை விட்டுத்தருவது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை நாம் உணரவேண்டும்.

    இந்த பாடல்களே உங்கள் உற்சாகத்துக்கு தான். என் உற்சாகம் நீங்கள் சொல்லும் சேதிகளில், படும் கவலைகளில் இருந்துவரும். உங்கள் கோபம் அதில் எனக்கு தெரியவேண்டும். எனக்கும் அந்த கோபம் உண்டு. இரண்டையும் கலந்து புதிய சமையல் செய்வோம்.

    மாற்றத்தை நோக்கி என்று என்னை மட்டும் சுட்டிக்காட்டிவிடாதீர்கள். ஒரு ஆள் தேரை இழுக்கமுடியாது. மக்கள் நீதி மய்யமே நான் தான் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நான் சோர்ந்து படுத்துவிட்டால் இயக்கம் என்னாவது? என்ற பதற்றம் உங்களுக்கு வரவேண்டும்.

    இந்த கட்சி மக்களுக்காகவும், ஒரு காரணத்துக்காகவும் தொடங்கப்பட்டது. அது என்ன காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். அந்த காரணம், அந்த குறை நீங்கும் வகையில் இந்த கட்சி இருந்தாக வேண்டும். அரை நூற்றாண்டு காலம் நடந்திருக்கிறது இந்த சீரழிவு. இன்னும் அரை நூற்றாண்டு காலம் இந்த மக்கள் நீதி மய்யம் செழிப்புடன் இருந்தால் தான் இந்த மாற்றம் ஏற்படும். அந்த அதிசய மரம் காய்க்கும் பழத்தை திண்பது எப்போது? என்று தெரியாது. ஆனால் விதை நாம் போட்டது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் கட்சி நிதி பெறுவோம். அதற்கான கணக்கையும் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கமல்ஹாசனிடம் கட்சி நிதியாக 2 பேர் தலா ரூ.50 ஆயிரம் வழங்கினர். கட்சி உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சி.கே.குமரவேல், கமீலா நாசர், ஸ்ரீபிரியா, தங்கவேலு, சுகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #KamalHaasan #MakkalNeethiMaiyam
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஜினியின் காலா படத்தில் அனல் தெறிக்கும் வரிகள் இடம் பெற்றிருப்பது அரசியல் களத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. #Rajinikanth #Kaala
    சென்னை:

    ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் காலா என்பதால் அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று வெளியிடப்பட்ட காலா பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளன. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் காலா பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வருகிறார்கள்.

    உரிமையை மீட்போம், தெருவிளக்கு என தொடங்கும் பாடல்களில் அரசியல் வரிகள் அதிகம் உள்ளன. தெருவிளக்கு பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

    சமூத்துவம் பிறந்திட... விடுதலை கிடைத்திட... தோழா இணைந்து போராடு. உணவு, ஆடை, வீடு போல வீடு போல கல்வியும் உனது அடிப்படை தேவை போன்ற வரிகள் கவனம் ஈர்க்கின்றன.

    உரிமையை மீட்போம் பாடலில் இனியும் பயந்தால் ஆகாது என்பது போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. நிலமே எங்கள் உரிமை, யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா, இங்கே வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா, ‘அடங்கி வாழ்ந் தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா’ என்பது போன்ற வரிகள் ரஜினியின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை ஊர்ஜித படுத்துவது போல உள்ளது.

    போராடுவோம் பாடலில் தமிழகத்தில் சிலை வடிவமைப்பதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த கருத்துகளும் காரசாரமாக இடம் பெற்றுள்ளன.

    ‘காணிக்கை என்ற பெயரில் கல் சிலைக்கு லஞ்சம் கோடி, கோடியா குமியுது உண்டியலில். நாட்டில் ஆனா பஞ்சம். நிறத்தாலும் மதத்தாலும் பிரிந்துவிட்டோம். மனிதாபிமானத்தை மறந்து விட்டோம். உரிமை இழந்து விட்டோம். ஏழை உயிர் என்றால் அலட்சியம். பணம் தான் நோயின் மருத்துவம். நிலம், நீர் எங்கள் உரிமை. போராடுவோம், எங்கள் வறுமை ஒழிய போராடுவோம். புது புரட்சி உருவாக போராடுவோம்’ என்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் காலா பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது பாடல்கள் மூலம் கலகத்தை ஏற்படுத்த நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது காலா படம் வெளியாகும் முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Rajinikanth #Kaala
    ×