தனுஷின் 'ராயன்' வைப்ஸ்.. 'ஓ ராயா' பாடல் லிரிக் வீடியோ அப்டேட்!

கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானதுபடத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.
தனுஷின் 'ராயன்' வைப்ஸ்..  'ஓ ராயா' பாடல் லிரிக் வீடியோ  அப்டேட்!
Published on

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளபடத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஓ ராயா பாடலின் லிரிக் வீடியோ இன்று [ஜூலை 19]மாலை 6 மணிக்கு வெளியாகும் என  சன் பிக்சர்ஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் தனுஷ் மற்றும் கனவ்யா துரைசாமி ஆகியோர் இந்த படலை இணைந்து பாடியுள்ளனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com