என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"

    • அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
    • குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர்.

    அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார். 



    • கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
    • ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

    இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    • வித் லவ் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

    இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, 'வித் லவ்' படத்துக்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    அந்த சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று...

    அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு திரைப்பயணத்தில் நான் அடைந்த முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் அது அமைந்தது. அனஸ்வரா ராஜனை பார்த்து, 'இத்தனை நாள் எங்கங்க இருந்தீங்க...' என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். அபிஷனையும் பாராட்டி தீர்த்துவிட்டார். இந்த குழு மீண்டும் இணைந்தாலும் நான் ரெடி. ஓகே சொல்லட்டும். பட்டறையை போட்டுடலாம், என்றார்.

    • படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து வெளியாகி வரும் தகவல் ரஜினி, கமல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

    இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கிடையே ரஜினி-கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தின் முதன்மை தயாரிப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி மற்றும் ஐஸ்வர்யா ரஜினி, சுருதிஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

    இதற்கு முன்னதாக ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக படத்தின் புரோமோ பணிகளை முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
    • அவர் யதார்த்தமாகவே இருக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் "ஜெயிலர் 2" திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.

    ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் இருந்ததை விட அதிக நேரம் திரையில் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியிருந்தார். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த பலர், இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாகப் பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாகக் பேசுவார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் உறவினர்கள் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்."

    "அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை நான் மெட்ராசில் பார்த்து வளர்ந்தேன். வெற்றி பெற்றாலும், அவர் யதார்த்தமாகவே இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். பெங்களூரு வருகைதரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்," என்றார்.

    • அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
    • இப்படத்தின் டீசர் மற்றும் தலைப்பை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.

    சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், படம் பிப்.6ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோவை சத்யம் திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.  

    மேலும் ப்ரீமியர் ஷோ பார்த்த பலரும், அபிஷன் நடிப்பையும், படத்தையும் பாராட்டி வருகின்றனர்.


    • பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மையாளர் கடந்த 11-ந்தேதி தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார். இதை அடுத்து அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் ஒப்படைத்தார்.

    ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் செயலை பாராட்டிய ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினை பரிசாக அளித்தார். மேலும் பத்மாவுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது திடீர் விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும், இது 70 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்றும் பேசப்படுகிறது.

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

    • ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார்.
    • இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

    மதுரையில் தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

    இந்நிலையில், தன்னுடைய ரசிகர் ஒருவர் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருவதை அறிந்தரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார். அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

    ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

    குறிப்பாக 1980, 90களில் ரஜினி, சல் பஸ், ஹும் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருந்தார்.

    அந்த வகையில் ரஜினி நடித்த "ஹம் மே ஷாஹென்ஷா கவுன்" (உங்களில் யார் ராஜா) என்ற இந்தி படம் 1989 இல் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை.

    மறைந்த இயக்குனர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இதனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

    படத்தின் தயாரிப்பாளரான ராஜா ராய் உடைய மகன் இறந்தது, இயக்குனரின் மறைவு ஆகியவற்றால் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படம் ஏப்ரல் 2026-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் 4K தரத்திற்கு மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. 

    • நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
    • ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.

    சென்னை:

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், 2026, ஜூன் மாதம் 12-ம் தேதி 'ஜெயிலர் 2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர்.

    அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது

    இதற்கிடையே, 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அதனால்தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.

    கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இன்னொரு ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையிலே பாக்யராஜை மறக்க முடியாது. இங்க வந்ததுக்கு முக்கிய காரணம் கூட இதை சொல்லணும். 1995-ல் சிவாஜி சாருக்கு மலேசியாவில் விருது கொடுத்தார்கள்.

    அதற்காக அவரை தமிழ் திரைப்படத்துறை பாராட்டணும், அது அரசும் சேர்ந்து பாராட்டணும் என்று சொல்லி சேப்பாக்கத்தில் மிகப்பெரிய விழா வைத்திருந்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் தான் அவர் தலைமையில் தான் விழா.

    விழாவில் நன்றி தெரிவித்து நான் பேசுகையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். எப்பவுமே இந்த கோபத்துக்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்ந்த வார்த்தைக்கு ஆயுள் ரொம்ப அதிகம். இதனால் தான் கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை அளந்து, அளந்து பேசணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு. விழாவில் சிவாஜி சார் இருந்தாலும் கூட நான் ஏதோ பேசிட்டேன். அதன்பிறகு என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதேவி ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டார்கள்.

    ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் என்னை நிறைய பேர் சூழ்ந்து தலையில் அடிக்கிறாங்க, திட்டுறாங்க... எனக்கு ஒன்னும் புரியவில்லை.

    அந்த இடத்தில் எஸ்.ஐ. எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்க எதுவும் செய்யவில்லை. அப்போ பாக்யராஜ் ஓடி வந்து அவர்களை பார்த்து கத்தி என்னை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கூட ஒன்றும் கிடையாது. அருமையான மனிதர், நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×