என் மலர்
நீங்கள் தேடியது "jailer2"
- இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
- ‘ஜெயிலர்2’ படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது.
இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து பிற நடிகர்களின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் 'ஜெயில் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, 'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், இத்தகவல் தொடர்பாக விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 'ஜெயிலர் 2 ' படத்தில் விஜய்சேதுபதி இணைவது உண்மையானால், கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக இது இருக்கும்.
- இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என ரஜினி தெரிவித்தார்.
- ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.
'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் 'ஜெயிலர்2' படப்பிடிப்பிற்காக சந்தானம் அடுத்த மாதம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன்.
- 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.
விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். இந்த படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்றார்.
தொடர்ந்து ரஜினிகாந்திடம் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக பயணிகள் தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் படுகர் இன நடனமாடி, பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடனமாடிய மாணவிகள், ரஜினியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் நெல்சன் திலிப்குமார்.
- கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தை இயக்கினார்.
நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் நெல்சன் திலிப்குமார்.
படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சிவக்கார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார். டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் நெல்சன் திலிப்குமாரின் புகழ் உச்சிற்கு சென்றது.
அடுத்ததாக விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார். இதற்கடுத்து கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தை இயக்கினார். படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டானது. படம் மிகப் பெரிய வசூலை குவித்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.இதனிடையே இயக்குநர் நெல்சன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை வைத்து ரசிகர்கள் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கமென்ட் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தைப் போல் இப்பாகமும் மிகப் பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






