என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"

    • ரஜினி உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமான டயட்டையும் பின்பற்றுகிறார்.
    • தினசரி உடற்பயிற்சிகள், தியான பயிற்சியையும் எடுத்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் 75 வயதிலும் மாஸ் குறையாத நடிகராக இருந்து வருகிறார். இந்த ஆளுமையை அவர் தக்கவைத்து கொள்வதற்கு காரணம் ரஜினியின் உணவு பழக்கம் மற்றும் ஒழுக்கம்தான் என சென்னையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரீத்தி மிருணாளினி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ரஜினி உடல் தகுதிக்கு மூல காரணம் 5 வெள்ளை உணவுகள்.

    5 வெள்ளை உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உடலில் வீக்கம், இன்சுலின் அதிகரிப்பு, அமிலத்தன்மை மற்றும் குடல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

    * வெள்ளை சர்க்கரை தொப்பை, கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிக பசிக்கு வழி வகுக்கும்.

    * 2-வது வெள்ளை உப்பு, மிதமாக உட்கொள்ளாவிட்டால் அது வீக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    * 3-வது வெள்ளை அரிசி, எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக காய்கறிகளுடன் சேர்த்து உணவு சாப்பிடுவது நல்லது.

    * 4-வது மைதா, அரிசியில் எடை அதிகரிக்கும்.

    * அடுத்ததாக பால், தயிர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

    காரணம் 40 வயதிற்கு மேல் வளர்சிதை மாற்றம் மெதுவாக தொடங்குகிறது. இவற்றை அதிகமாக சாப்பிடுவது எடை பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

    ரஜினி உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமான டயட்டையும் பின்பற்றுகிறார். தினசரி உடற்பயிற்சிகள், தியான பயிற்சியையும் எடுத்து வருகிறார். இந்த ஒழுக்கமான வாழ்க்கை முறைதான் ரஜினி முதுமையை ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் அனுபவித்து வருவதற்கு காரணம் என்று கூறினார். 

    • கூலி படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது.
    • எதிர்மறை விமர்சனங்களால் கூலி படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.500 கோடி வசூலை மட்டுமே குவித்து ஏமாற்றம் தந்தது.

    இந்நிலையில், கூலி படம் நன்றாக தான் இருந்தது என்று சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்தார்.

    அந்த நேர்காணலில் பேசிய அஸ்வின், "கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகப்படியாக வந்தது. அந்தப் படம் ஓடிடியில் வந்த பின்பு நான் பார்த்தேன். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என பார்ப்பேன். என்னால் 'கூலி' படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது.

    அதனை பார்த்து முடித்த பின் ஒரே ஒரு கேள்வி தான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். 'இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேனா?'. ஒரு விமர்சகராக அந்தப் படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவு அந்தப் படம் மோசமில்லை" என்று தெரிவித்தார்.

    • படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
    • பராசக்தி பொங்கலுக்கு வெளியாக உள்ளது

    நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

    ரஜினிகாந்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் இணை தயாரிப்பாளர் கலையரசன் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம், பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.  


    • இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை.
    • இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.

    காட்சிகளால் கட்டமைக்கப்படுபவையே படம். ஆனால் இதிலிருந்து சற்று வேறுபட்டது இந்திய திரைப்பாணி. இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை. அதிலும் தென்னிந்திய திரைப்படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதேபோல் பாடல்களுக்கு. இப்போது ஒருசில படங்கள் பாடல்கள் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. ஆனால் அப்படங்கள் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றன. பாடல்கள் இல்லாமல் படமா? என்று. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரையுலகம் நூற்றாண்டு காலமாக இந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது.

    இங்கு திரைப்படத்திற்கு உயிரோட்டத்தை கொடுப்பது பின்னணி இசையும், பாடல்களாகவுமே உள்ளது. திரைப்படம் சரியான முறையில் எடுக்கப்படாமல் இருந்தாலும் கூட அதன் இசைக்காக படம் சில நாட்கள் ஓடி லாபத்தை ஈட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. ஒரு வலியை, உணர்வை இல்லை ஒட்டுமொத்த கதையையும் காட்சியிலேயே கொடுக்க முடியும்.

    ஆனால் அதை இசையாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்தது தென்னிந்திய சினிமா. காட்சிக்கு ஏற்றவாறு அமையும் பாடல் வரிகளும், அவைகளுக்காக இசைக்கப்படும் இசையும்தான் படத்தை இன்னும் தனித்து காட்டும். அதனால்தான் இப்போதைய பாடல்களைவிட, 90ஸ், 80ஸ் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தனித்து நிற்கின்றன. அவை பலருக்கு இப்போது துணையாக உள்ளன.


    இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்

    ஆனால் இந்த தோணி இப்போது முற்றிலுமாக மாறிவருகிறது. அதாவது ஒரு படம் வணிகரீதியாக வெற்றிப்பெற உணர்ச்சிகளை தாண்டி, கவர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.  கவர்ச்சி பாடல்கள் ஒரு விளம்பர நோக்கம் என அனைவரும் அறிவோம். ஆனால் எதற்கு தென்னிந்திய சினிமா இப்படி கீழ் இறங்கிறது என்று தெரியவில்லை? உச்ச நட்சத்திரங்களும் இந்த செயல்முறைக்கு துணை நிற்கின்றனர். 

    இந்த வரிசையில் சமீபமாக வெளிவந்த முக்கியப் படம்தான் கூலி. கூலியின் வணிகரீதியாக வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒரு பாடல்தான் 'மோனிகா பெலூச்சி'. மோனிகா பெலூச்சி பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்க, 'நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ, கவர்மண்டுக்கு கேட்ருச்சி' எனும் வடிவேலு காமெடிபோல, கேட்கவேண்டிய மோனிகா பெலூச்சிக்கு கேட்டுச்சி. அவர்களே வியந்து இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இதில் கூலி படம் புகழ்பெற்றதோ இல்லையோ, மோனிகா பெலூச்சி இந்திய ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். 

    அதாவது கூலி பாடலுக்கு முன்புவரை மோனிகா பெலூச்சியை அறியாதவர்கள் பலர். அவர்கள் அனைவரும் யாருடா அது என  கூகுளில் தேட இணையம் முழுவதும் நிறைந்தார் மோனிகா பெலூச்சி. ஜூலையிலிருந்து ஆகஸ்ட் வரை இவர்தான் வைரல். மோனிகா பெலூச்சி சுனாமி உண்டாச்சு என்பதுபோல இரண்டுமாதம் மோனிகா அலைதான்.


    மோனிகா பெலூச்சி

    யார் மோனிகா பெலூச்சி?

    மோனிகா. இந்த பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று ''தனித்துவம்''. பெயரைப் போலவே தனித்துவமான அழகி. அட்டகாசமான மாடல். இத்தாலி நடிகையான, இவர், ஹாலிவுட் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, பிரான்ஸ் மொழி படங்களிலும் நடித்தவர், The Raffle என்கிற இத்தாலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் Bram Stoker"s Dracule மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இவர் புகழ் பாடினால் நீளும். சுருக்கமாக சொன்னால் இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.

    • படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது.
    • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக பேசப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரது நடிப்பில் 1999-ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'படையப்பா' மீண்டும் கடந்த 12-ந்தேதி ரிலீசுக்கு வந்தது.

    திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூடுதலாக இப்படம் திரையிடப்பட்டது.

    படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக பேசப்படுகிறது.

    நடிகர் விஜய்யின் 'கில்லி' படம் தான் இதுவரை 'ரீ-ரிலீஸ்' செய்யப்பட்டு அதிக வசூல் (ரூ.10 கோடி) குவித்த படம் என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளது. அந்த சாதனையை ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்னும் ஓரிரு நாளில் முறியடிக்கலாம் என்றே சினிமா வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    • ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
    • பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில் அவர்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

    மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்றார்.

    இதேபோல், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்றார்.

    • ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். மேலும் நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் 'ஜெயிலர்-2' படப்பிடிப்பு தளத்தில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.



    இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • முப்பெரும் விழா கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
    • சிறப்பு பாடல் வீடியோ வெளியீடு

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் படையப்பா ரீரிலீஸ் என முப்பெரும் விழாவாக, மகிழ்ச்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    "உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே... நண்பனே... ஊர் போற்றும் இன்பனே... இன்பனே... இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே" எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 


    • திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
    • நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது.
    • திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    புதுடெல்லி:

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:-

    ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

    அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.



    • மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
    • உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள் பதிவில்,

    ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

    மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று கூறியுள்ளார். 

    • படையப்பா படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
    • படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    இந்நிலையில் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாளான நாளை படையப்பா படம் ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

    இதனை முன்னிட்டு படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், படையப்பா திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு நேர்காணலின் BTS காட்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

    ×