search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fans"

    • கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது
    • இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார்

    கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் 4 நாட்கள் படப்பிடிப்புக்காக 9 வருடங்களுக்கு பிறகு கேரளா சென்றார்.

    கேரளாவில் அவர் இறங்கியதில் இருந்து ரசிகர்கள் அவரை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்த் வண்ணம் உள்ளனர்.

    கிடைக்கும் நேரத்தில் எல்லாம் விஜய் ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டு இருக்கிறார்.

    கேரள ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாசலிலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் மணிக்கணக்காக இரவு பகல் பாராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ரசிகரின் குழந்தையை விஜய் தூக்கி கொஞ்சும் வீடியோ வைரலானது, மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலாகியது.

    இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார். கிளம்பும் முன் கேரள ரசிகர்களை சந்தித்து பேசினார். அவரைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். அவர் ரசிகர்களுடன் பேசும் பொழுது தமிழ்நாடும் கேரளாவும் என் இரு கண்கள் மாதிரி என குறிப்பிட்டுள்ளார். பின் கேரள ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி என வணங்கி கூறினார்.

    பின் அவர் ரசிகர்களை சந்திக்கும் பொழுது போது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.
    • பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் படம் GOAT. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

    தற்பொழுது படக்குழுவினர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். கேரள படப்பிடிப்பை அடுத்து ரஷ்யாவின் தலை நகரமான மாஸ்கோ நகரத்தில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர்.

    9 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரள மண்ணில் படப்பிடிபிற்காக காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேரள விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்தே ரசிகர்கள் அவரின் காரை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்தினர். அவர் படப்பிடிப்புத்தளம் செல்லும் வரை அவர் காரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

    நேற்று ரசிகர்களை காண சென்ற விஜையை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டனர். பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். விஜய் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் மாற்றுதிறனாளி ரசிகருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்
    • தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

    நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

    இந்நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் "ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை வினவினார் .

    சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி நீங்கள் ஐஷுவுக்காக செய்தீர்களோ அதே போல் எனக்கும் உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்" என்ற கமண்ட்டை அப்புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கம்மண்டிற்கு "ஊப்ஸ், நாட் அலோவ்டு" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

    என். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் சில்லுனு ஒரு காதல். {ஐஷூ} என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருப்பார். சூர்யா அவரின் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து இருப்பார், ஆனால் அக்காதல் கைக்கூடாமல் போய்விடும். அடுத்து வேண்டா வெறுப்பாக ஜோதிகாவை மணம் முடிப்பார். அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

    இப்படத்தில் தன் பழைய காதலியான பூமிகாவை ஒரு நாள் சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் சூர்யாவுக்கு. இதை மையப்படுத்தியே அந்த ரசிகை கமண்ட் செய்து இருக்கிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.
    • விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். முதுமை தோற்றம், இளமைத் தோற்றம் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.

    இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக, 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் நேற்று கேரளா சென்றார். கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.

    நேற்று விஜய் ஏறிய காரில் மக்கள் அலை போல திரண்டு தங்கள் அன்பை பொழிந்தனர். விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.

    விஜய் அனைவரிடமும் சிரித்தபடியே ரசிகர்களின் அன்பை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இண்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் காட்சியை படமாக்கவுள்ளனர். ஸ்டேடியத்தை சுற்றி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணியின் போஸ்டர்களையும் தோனி பட போஸ்டர்கலையும் ஒட்டி இருக்கின்றனர் படக்குழுவினர். ஆதலால், படத்தில் தோனி கேமியோ ரோல் செய்வதாக தகவல் பரவி வருகிறது.

    இருப்பினும், ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தி வரும் தோனி, GOAT படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
    • ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.

    இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

    2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.

    படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

    • திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பொங்கல் தினத்தில் படம் வெளியாக உள்ளது. கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிக பார்வையளர்களை கடந்தது.

    இதனையடுத்து லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான 'தேர் திருவிழா' நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகும் இந்த தேர் திருவிழா பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

    • வித்தியாசமான போஸ்டரை செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்தனர்.
    • சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

    செங்கல்பட்டு:

    நடிகர் விஜய் நடித்த லியோ படம் இன்று வெளியாவதை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நகரங்களில் லியோ படத்தை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்த வாசகங் கள் நடிகர் விஜய்யை வித விதமாக புகழும் வகையில் அமைந்திருந்தன. பெரும்பாலான ஊர்களில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பிரதிபலிக்கும் வகையில் போஸ்டர் வாசகங்கள் இருந்தன.

    செங்கல்பட்டு நகரில் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் வித்தியாசமான போஸ்டரை செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்தனர். அந்த போஸ்டரில் ஜோசப் விஜய் என்னும் நான் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

    மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. பரவாயில்லை. சிறப்பு விருந்தினராக உங்களை அழைப்போம். எங்கள் தளபதியின் பதவி ஏற்பு விழாவுக்கு என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோன்று தான் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லியோ பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டி இருந்த போஸ்டர் வாசகங்கள் வைரலாக பரவின. சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

    இதன் காரணமாக நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    • உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது.
    • கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 2-வது போட்டி யில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.

    நேற்று 2 போட்டி நடைபெற்றது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தின.

    உலக கோப்பை போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் வெற்றியுடன் தொடங்குவது அவசியமாகும்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

    மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி உற்சாகத்துடன் மைதானத்துக்குள் சென்றனர். இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.

    மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    • உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.


    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியை காண குறைவான ரசிகர்கள் கூட்டமே வந்துள்ளது. உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் குறைவான ரசிகர்களே வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டமும் இப்படி இருந்ததில்லை.

    வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று இருக்கும் மூன்றெழுத்து நடிகை ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தாராம். பின்னர் வயதாக, வயதாக பட வாய்ப்புகள் குறையவே நடிகை கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தாராம். பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினாலும் நான் ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாராம்.

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அவ்வப்போது ரசிகர்களை காண நேரலையில் வருகிறாராம். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் 40 வயதிலும் ஹீரோயினாக நடிக்கும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்களாம். இதனால் குஷியான நடிகை நடித்தால் ஹீரோயின் தான் இல்லையென்றால் எனக்கு வாய்ப்பே தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.

    சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.

    காத்திருந்து.. காத்திருந்து கண்கள் பூத்த நடிகை திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்தாராம். பெரிய இயக்குனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் வாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை சமூக வலைதளத்தையும் விட்டு வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்தாராம்.

    இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இந்த நடிகை இப்படி பண்றாங்க என்று வசைபாடி வருகிறார்களாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை நான் செய்வதை தான் செய்வேன் என்று படு கவர்ச்சியாக உலா வருகிறாராம்.

    • மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
    • 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.

    இஸ்தான்புல்:

    கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.

    முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.

    இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×