என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.ஜே.பாலாஜி"

    • சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியானது.
    • கருப்பு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    :ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டனர். அப்போது அவரது வீட்டின் பால்கனியில் இருந்து வெளியே வந்த சூர்யா கையசைத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

    • நேற்று கருப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
    • சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    நேற்று இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. அதில், சூர்யா சிவப்பு மற்றும் கருப்பு உடையில் மாஸ் லுக்கில் இருந்தார்.

    இந்நிலையில், சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியானது. 

    • நேற்று கருப்பு படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
    • கருப்பு படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும்

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    நேற்று இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், சூர்யா கருப்பு உடையில் மாஸ் லுக்கில் இருந்தார். மேலும் இப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார்.

    இதனையடுத்து கருப்பு படத்தின் செகண்ட் லுக்கை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஆர்ஜே பாலாஜி வெளியிட்டார். அதில் சிவப்பு நிற சட்டையுடன் செம லுக்கில் சூர்யா உள்ளார். இந்த புகைப்படங்கள் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
    • ஆனால் படக்குழு அறிவித்த நேரத்தில் டீசர் வெளியாகவில்லை.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனையடுத்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.

    அவர்களை மேலும் காத்திருக்கும் வகையில் சூர்யா கருப்பு உடை அணிந்திருந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என ஆர்ஜே பாலாஜி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை பெரிதும் ஏமாற்றும் வகையில் இருந்தது.

    • ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

    படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

    டீசர் நாளை வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் ஒரு கருப்பு கண்ணாடி மற்றும் நெருப்பில் குதிரை ஓடுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    • ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
    • இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வடகறி, நானும் ரவுடி தான், தேவி, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அதன்பின்னர் எல்கேஜி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களில் கதாநாயகனாக நடித்து இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

    சிங்கப்பூர் சலூன்

    சிங்கப்பூர் சலூன்

    இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

    ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

    ஆர்.ஜே.பாலாஜி

    ஆர்.ஜே.பாலாஜி

    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாடி, மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.

    • ஆர்.ஜே.பாலாஜி தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

    ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது. ''எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காக வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன்.

    ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் ரன் பேபி ரன் வேறு களம். இந்த படம் இருக்கை நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம். எனக்கு நீண்ட தூரம் ஓடவேண்டும். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பேன். புதிதாக சிங்கப்பூர் சலூன் உள்பட 3 படங்களில் நடிக்கிறேன். ஊரடங்கில் எல்லோரும் திரில்லர் படம் பார்த்து பழகி விட்டனர். அதனால் இப்போது விதவிதமான திரில்லர் படங்கள் வருகின்றன. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை உள்ளது" என்றார்.

    • ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
    • இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

    லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜுடன், ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
    • சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை. வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதனால் வாடிவாசல் தொடங்க இன்னும் காலாவகாசம் தேவைப்படுகிறது.

    சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வாடிவாசல் அதிக கால அவகாசம் எடுப்பதனால் சூர்யா அதற்குள் வேறொரு திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 45- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார் என தகவல் பரவி வருகின்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார்.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் அருவாள், குதிரை என இடம் பெற்றுள்ளதால். திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய மற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×