படப்பிடிப்பை நிறைவு செய்த ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி
Published on

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாடி, மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com