search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokesh Kanagaraj"

    • வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • ஓணம் பண்டிகை கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

    இன்று ஓணம் பண்டிகை கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கூலிப்படக்குழு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளனர்.

    இதை லைகா தயாரிப்பு நிறுவனம் ஓணம் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ளனர். இதில் பணியாற்றியவர்களுடன் ரஜினி நடனம் ஆடியுள்ளார். இதில் ரஜினி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனுக்கு பாட்டின் ஸ்டெப் சொல்லி கொடுக்கிறார். லோகேஷ் கனகராஜை ரஜினி ஆட கூப்பிடுவது மிகவும் க்யூட்டாக இருக்கிறது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • தி கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    நாளை (செப்டம்பர் 5) வெளியாகி இருக்கும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தி கோட் படத்திற்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகியோர் கூட்டாக இணைந்து வாழ்த்து தெரிவித்து உள்ளனற்.

    இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தி கோட் படத்திற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. இந்த படம் வெற்றி பெற இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் புரொடக்ஷன், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது பாய்ஸ் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ," என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர். மேலும் படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி கையில் 1421 என்ற எண் உடைய கூலி பேட்சை கையில் வைத்துள்ளார். இப்போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கூலி படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • கூலி பட நடிகர்கள் விவரம் வெளியிடப்பட்டுகிறது.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதோடு நடிகர் நாகர்ஜூனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.
    • முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கூலி படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வரும் நிலையில், யார் யார் இப்படத்தில் நடித்துள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார்.
    • அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    இதுக் குறித்து படக்குழு தற்பொழுது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தின் கதாப்பாத்திரத்தின் அறிவிப்பு நாளை மாலை 6 மணி முதல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் யார் யார் இப்படத்தில் நடித்து இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.
    • தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.

    சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

    இந்நிலையில் விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என கூறியுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய பிரம்மாண்டமான இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது.
    • தற்போது ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' படத்தை இயக்கி வருகிறார்.

    லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது. மிகச் சிறப்பான கதைக்களத்துடன் மாநகரம் படத்தை கொடுத்து அனைத்து தரப்பினரின் புருவத்தையும் உயர்த்த செய்திருந்தார்.

     இவர் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து மாஸ்டர், விக்ரம், லியோ, கைதி-1 படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

     கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து `கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இந்த படம் வெளிவந்த போது கைதி-2 ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர்.

    ஆனால், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிசியாக இருந்ததால் கைதி-2 படம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து `பான் இந்தியா' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால் லோகேஷ் கனகராஜ் கூலி படம் முடிவடைந்த பிறகு கைதி 2-ம் பாகத்திதை தான் இயக்குவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர்.

     ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

    இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர். மற்ற நடிகர்களை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு பான் இந்தியன் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
    • இந்தியன் 3-க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

    இந்தியன் திரைப்படத்திற்கு அடுத்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "கலை மீது கமல் சார் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு 'இந்தியன் 2' சாட்சி. சிறப்பான பின்னணி இசை கொடுத்துள்ள அனிருத் மற்றும் பிரமாண்டமான படைப்பை அளித்த இயக்குநர் சங்கருக்குப் பாராட்டுகள். இந்தியன் 3-க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத் பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
    • ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ள பகத்பாசில் 'கூலி' படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

    இதையொட்டி படக்குழுவினர் பகத்பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் பகத்பாசிலின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத்பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மலையாளத்தில் தயாராகி பகத்பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார் மாஸ்டர் மகேந்திரன்.
    • 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல்.

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன்.

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்த பிறகு 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.

    இவர், சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் சிறு வயது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

    இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஆக்சன் படமாக தயாராகும் 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×