என் மலர்
நீங்கள் தேடியது "vijay"
- பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
- கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் 5-ந்தேதி ரோடு ஷோ நடத்த முடிவு செய்து காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது.
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
புதுச்சேரி மாநிலம் சென்னை ஐகோர்ட்டுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதனால் ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது.
ஆனால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி, ரோடு ஷோ நடத்த அனுமதி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக பல முறை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இருப்பினும் புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்றைய தினம் சட்டசபை வளாகத்தில் ரோடு ஷோ தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஜி. அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., த.வெ.க. பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்து, ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கட்சித் தலைவர் விஜய்யிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக த.வெ.க.வினர் கூறிச் சென்றனர். இதனிடையே டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் புதுச்சேரிக்கு 5-ந்தேதி விஜய் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் வருகையை எதிர்பார்த்திருந்த புதுச்சேரி த.வெ.க. தொண்டர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
- விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி பெற புஸ்ஸி ஆனந்த் முயற்சி மேற்கொண்டார்.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிஐஜி சத்திய சுந்தரம், "திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம். இடத்தை அவர்களே தேர்வு செய்து அனுமதி கோர வேண்டும்.
- தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை.
- குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் புதுவையில் ரோடு ஷோ நடத்த த.வெ.க.வினர் அனுமதி கேட்டு வருகின்றனர்.
தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள்தான் உள்ளது.
அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது.
- சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.
சென்னை:
கரூரில் த.வெ.க கட்சியின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இவ்விவகாரம் தொடர்பாக த.வெ.க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில்தான் சென்று கொண்டிருந்தது. எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை என்பது நடத்தப்பட்டு வந்தது. சென்னை ஐகோர்ட்டுதான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. அதுவும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது.
மேலும் அந்த விசாரணையை கோர்ட்டு கண்காணிப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேவேளையில் மாநில அரசானது தன்னுடைய சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்திருந்தது. அந்த ஆணைய விசாரணை முழு சுதந்திரமாகவும் தொடங்கி நடைபெற்று வந்திருந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது. சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.
எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் நடுநிலையான ஒரு உத்தரவை கோர்ட்டு இந்த விவகாரத்தில் பிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் சி.பி.ஐ விசாரணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்படத்தை இயக்குநர் சித்திக் இயக்கி இருந்தார்.
- இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், வடிவேலு மற்றும் ரோஜா ஆகியோர் நடித்து இருந்தனர்.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', 'ப்ரண்ட்ஸ்', இயக்குநர் சேரனின் 'ஆட்டோகிராப்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
அந்த வகையில், 2011-ம் ஆண்டு விஜய், அசின் நடிப்பில் வெளியான 'காவலன்' படம் வருகிற 5-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாடி கார்டின் ரீமேக் படமாக 'காவலன்' வெளியானது. இப்படத்தை இயக்குநர் சித்திக் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், வடிவேலு மற்றும் ரோஜா ஆகியோர் நடித்து இருந்தனர்.
'காவலன்' படம் மீண்டும் வெளியாக உள்ளதால் விஜய் ரசிர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- அனுபவம் தான் நம் எல்லோரையும் விட சிறந்த ஆசிரியர்.
- நீங்கள் கற்றுக்கொள்ளத் தகுதியானதை உங்களுக்கு அது கற்று தருகிறது.
கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் 2026 தமிழக தேர்தலுக்கு முன்னதாக விஜய், திமுகவை தனது அரசியல் எதிரி என்று எவ்வாறு அடையாளம் கண்டார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதே போல் மக்கள் நீதி மைய்யத்தின் எதிரி யார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், , "பெரும்பாலான கட்சிகள் அடையாளம் காணத் துணியும் எதிரியை விட எனது எதிரி பெரியவர். சாதிவெறி தான் எனது எதிரி. நான் அதை கொலை செய்ய நினைக்கிறன். கொலை போன்ற வன்முறை வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் சாதிவெறி அதைவிட மிகவும் வன்முறையானது" என்று தெரிவித்தார்.
கமலிடம், விஜய்க்கு ஏதாவது ஆலோசனை இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, "நான் ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. ஒருவேளை ஆலோசனை வழங்க இது சரியான தருணமாக இருக்காது. அனுபவம் தான் நம் எல்லோரையும் விட சிறந்த ஆசிரியர், ஏனென்றால் நமக்கெல்லாம் ஒரு சார்பு இருக்கிறது. ஆனால் அனுபவத்திற்கு அந்த சார்பு கிடையாது. நீங்கள் கற்றுக்கொள்ளத் தகுதியானதை உங்களுக்கு அது கற்று தருகிறது" என்று கூறினார்.
- தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
- எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுச்சேரி:
தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. உதயநிதி பிறந்த நாளில் செலுத்துகின்ற கவனம் மற்ற குழந்தைகளை பாதுகாப்பதில் இல்லை. எனவே வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு போன்றவர்கள் கூட மிகவும் தவறாக பேசுகிறார்கள். நடுநிலையாக இருக்க வேண்டிய அவர் கவர்னரை பற்றி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து வேறுபாடு இருந்தால் கருத்தை சொல்லுங்கள், அதற்கு வார்த்தைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பதை அரசியல் நகர்வாகத்தான் நான் பார்க்கின்றேன். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
செங்கோட்டையன் அனுபவமான அரசியல்வாதி, அவர் இணைந்தது தமிழக வெற்றி கழகத்துக்கு பலம் சேர்க்கும். மற்றப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். செங்கோட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கும் பா.ஜ.க. தான் காரணம் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியானால் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க. தான் காரணமா? தமிழகத்தில் எது நடந்தாலும் பா.ஜ.க. தான் காரணமா?
பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் மிரண்டு போய் உள்ளனர்.
பா.ஜ.க.-அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். அதில் பிரச்சனை வந்தால் அதற்கு பா.ஜ.க. பொறுப்பல்ல. இன்னும் பலர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எதிர்கட்சியின் வாக்குகள் சிதறக்கூடாது. சிதறாமல் ஒரு வியூகம் அமைக்க வேண்டும். சில சலசலப்புகளினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது. குறையவும் குறையாது.
செங்கோட்டையன், விஜய், டி.டி.வி.தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என யாராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்த கடமை தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி தி.மு.க.வை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அந்த வியூகத்துக்குள் எல்லோரும் வர வேண்டும்.
புதுவையில் 15 ஆண்டுகாலம் இடைக்கால பட்ஜெட் தான் போடப்பட்டது. முழுநேர பட்ஜெட் நாம் வந்த பிறகுதான் போடப்பட்டது. அது இரட்டை இஞ்சின் அரசாங்கத்தால் தான் நடந்தது. ஆகவே இரட்டை இஞ்சின் இன்னும் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார்.
- அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர் என தெரிவித்தார்.
ஈரோடு:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, த.வெ.க.வில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் த.வெ.க.வினர் மத்தியில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார். எல்லோரையும் அரவணைப்பவர் விஜய்.
நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர், 2-வது தலைவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா?
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்ததைபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்.
காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும். நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்.
அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா? என்றார்.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
- செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர்.
சென்னை:
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என செங்கேட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன் என்று ஜெயக்குமார் கூறினார்.
- விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.
- இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும். நேற்று தான் கட்சியில் இணைந்துள்ளேன். இனிதான் பிரசாரம் செய்ய வேண்டும். இன்று சொந்த நிகழ்வுக்காக கோவை செல்கிறேன்.
அதில் கலந்துகொண்டு வந்த பின், விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.
நான் எப்படி செயல்பட்டு இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நிலையில் நின்று பாடுபடுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.
விஜயுடன் இணைந்து கோபி செட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது தொடர்பாக விரைவில் அவருடன் கலந்து பேசி எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்வேன்.
இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. மக்களால் நேசிக்கப்படுகிற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
2026-ம் ஆண்டு மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருகிற காலம் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் இன்று தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது தனது வாகனத்தில் த.வெ.க. கட்சிக்கொடி கட்டி இருந்தார்.
- ஈழ போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் பதிவு.
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈழ போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்," தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம், தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.






