என் மலர்
நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"
- உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்
- சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்
பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை நிதின்நபின், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.
பொதுமக்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமாக பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி அங்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடந்தது. ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக கோவை முதலிபாளையத்தில் கோவை கோட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிதின் நபின் கலந்து கொண்டு பேசியதாவது:-
'பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியால் பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளோம். இங்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டசபை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இங்கு 80 சதவீதம் பூத் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது நமக்கான வெற்றியை அளிக்கும்.
ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உள்ளோம். இந்த தேர்தலில் உங்களின் பணியால் தி.மு.க.வை தோற்கடிப்போம். வெற்றியை நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. விவேகானந்தர் கூறியது போல இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும். சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வந்து இருக்கிறோம். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம், மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தி.மு.க. அரசின் பிரதான தோல்வியை கையில் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும். நாம் உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
'பா.ஜ.க. கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும், பலர் வெளியேறுவதாகவும் தொடர்ந்து என்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், கூட்டணியில் தற்போது பா.ம.க. இணைந்து அவர்களுக்கான பதிலை அளித்துள்ளது. பொங்கல் முடிந்த பிறகு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள கூட்டணிகள் வெளியேறும். அடுத்த 80 நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பா.ஜ.க. கட்சியின் ஆணி வேராக பூத் கமிட்டி உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், சிறப்பாக வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பூத் கமிட்டி நிறைவாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். கடந்த 2021 தேர்தலில் சரிவு வந்தது. அதுபோல வரும் தேர்தலில் நடந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலம் பா.ஜ.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.'
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
- எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கோவை:
பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.
கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.
அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.
தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார்.
- பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
- இந்துமத வெறுப்பில்லாத அரசு.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"உங்கள் கனவ சொல்லுங்கள்" என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதலமைச்சருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:
1. சீரான சட்டம் ஒழுங்கு.
2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.
3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.
4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.
5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.
6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.
7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.
8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.
9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.
10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
11. இந்துமத வெறுப்பில்லாத அரசு.
மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.
- சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
* பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
* பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.
- சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
- அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர்.
2 தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.
அ.தி.மு.க. உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
- தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
- ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கண்டித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு!
"சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுக்கட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
பல கோடி செலவழித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று நாடக விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது.
- 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.
நெல்லை:
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
* தீபத்தூண் வழக்கில் அன்றே உத்தரவை நடைமுறைப்படுத்தி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.
* தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது. பின்னர் நீதிபதிக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றுகிறது.
* 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.
* வேலைக்குச் செல்லாமலேயே தவறான நபர்களுக்கு 100 நாள் வேலையில் ஊதியம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
- 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்.
- இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் கோஷத்துடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையை தொடங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான அரசு அமைய வேண்டுமா? என கூட்டத்தினரிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆமாம் என்று கோஷம் எழுப்பினர்.
பின்னர் அமித் ஷா மேலும் பேசியதாவது:-
தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியான புதுக்கோட்டையில் உரையாற்றுகிறேன்.
2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான். உதயநிதியை முதலமைச்சராக்குவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது.
திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி திமுக தான்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது.
அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
- தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பிரச்சார பயண நிறைவு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.
அப்போது அவர், கரூர் கூட்ட நெரிசல், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
திமுக ஆட்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்.
நாங்கள் உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி; திமுக உருவாக்கியது போலி கூட்டணி, திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை
தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். பீகார் மற்றும் திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழ்நாட்டிலும் வீசும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், தமிழகம் வந்தனைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான்
- நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?
"அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெயிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓய்வூதியம் அறிவிப்பு தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 'ஏமாற்று வேலை' என்று கூறும் நயினார் நாகேந்திரன் அவர்களே!ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான். நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.






