search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிவலம்"

    • 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை அதிகாலை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.

    ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள், தரிசனம் செய்ததாக கோவில் தரப்பில் கூறப்படுகிறது.

    ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதி வழியாக பூத நாராயண கோவில் வரை வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டது.

    மேலும், பூத நாராயண கோவிலில் இருந்து பெரிய தெரு வரை தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது. பெரிய தெருவில் இருந்து சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 4 தரிசன மேடைகள் வழியாக அனுமதிக்கப்பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.

    மேலும் கர்ப்பிணிகள், முதியோர், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரிசையில் காத்திருக்காமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், பிஸ்கட், நீர்மோர், குடிநீர், வாழைப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. கோவில் வெளி பகுதியில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    கடந்த 2 நாட்களில் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்தனர். இதனால் திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. சிறப்பு பஸ் ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.
    • அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.

    அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி சென்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    • மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும்.
    • இஷ்ட தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    ஜோதிட ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நேர் எதிரில் துலாம் ராசியில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளில் பவுர்ணமி வருவதால், சித்ரா பவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஆத்மகாரகனும், மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

    2024 ஆம் ஆண்டு இந்த வருடம் சித்ரா பவுர்ணமி எப்பொழுது கொண்டாடப்படுகிறது என்றால் ஏப்ரல் 22-ந் தேதி மாலை 5:30 மணிக்கு மேல் பவுர்ணமி திதி ஆரம்பித்தாலும் 22 -ந்தேதி முழு இரவு மூன்றாம் தேதி முழு பகலும் நமக்கு பவுர்ணமி திதியாக வருகிறது.

    இந்த சமயத்தில் ஏப்ரல் 23-ந் தேதி காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து நம் இஷ்ட தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    முடிந்தவர்கள் காலையிலேயே நீராடி விட்டு வீட்டை சுற்றிலும் மஞ்சள் நீரால் தெளித்து விட்டு காலையில் உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று 9 முறை நவகிரகத்தை சுற்றிவர பவுர்ணமி அன்று பெறக்கூடிய அனைத்து சக்திகளையும் நீங்கள் பெறலாம்.

    ஒருவேளை நீங்கள் மிகுந்த பக்தியோடு இருப்பவர் ஆயினும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் பாயாசம் போன்றவை படையெடுத்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கலாம்.

    குறிப்பாக சனி பகவான் ஜோதிடத்தில் கருமக்காரனாய் வருகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனியை வைத்து அவரின் கர்மாவை நம்மால் கணித்து விட முடியும். இப்படியான சூழ்நிலையில் ஒருவர் ஜாதகத்தில் சனி நீச்சம் பெற்றாலோ அல்லது நாவாம்சத்தில் நீச்சம் பெற்று இருந்தாலும் அவருக்கான பலன்களை அவர் வாழ்க்கையில் அனுபவித்தே தீர வேண்டும்.

    இது மாதிரியான சமயங்களில் குருவின் பார்வை ஒன்று ஐந்து ஏழு ஒன்பது போன்ற ஸ்தானங்களில் இருந்து சனியை பார்த்தால் நிச்சயமாக கர்மாவில் இருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும்.

    அப்படி குரு பார்க்கும் சனி கொண்ட ஜாதகர்கள் இதுபோன்று சித்ரா பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருந்தால் உடனடியாக அவர்களது கர்மா தீர்க்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சுப காரியங்களோ நடக்க வேண்டிய நல்லதுகளோ அல்லது பணம் சம்பந்தமான தொழில் சம்பந்தமான வியாபாரம் சம்பந்தமான எந்த ஒரு தடையாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி ஆகும் என்பது தான் முன்னோர்கள் கூறி வைத்த கருத்து.

    சிவனையும் பார்வதியும் ஒரு சேர இருக்கும் தளங்களுக்கு சென்று நீங்கள் பவுர்ணமி தினத்தில் வழிபடுவது சிறப்பு.

    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ராபவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24-ந் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் 23-ந் தேதி முழுமையாக சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சித்ரா பவுர்ணமிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
    • சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமியன்று தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 8-ந்தேதி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டும், 6-ந்தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டும் சதுரகிரிக்கு செல்ல வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது என்பதால் இந்த முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந் தேதி மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அமாவாசையான 8-ந்தேதியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மலையேறி வருவதை தவிர்க்க வேண்டும். பாலித்தீன் கேரிப்பை மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.

    சுந்தர மகாலிங்கம் கோவில் பிரதோஷ, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.
    • திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை.

    ஈரோடு மாவட்டம் மேட்டூருக்கு அருகில் உள்ளது வேதகிரிமலை.

    பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.

    திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை.

    இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி.

    ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது.

    இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும்.

    குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.

    • வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.
    • செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.

    வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.

    செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம்.

    வடகிழக்கை நோக்கி உள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது.

    இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதி யுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கொண்டு திகழ்வார்கள்.

    • மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
    • இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.

    ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.

    இதற்குரிய திசை மேற்கு.

    மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.

    சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது.

    வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.

    இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

    • சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.
    • இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம்.

    இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி உள்ளது. எம தர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது.

    இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.

    இதனருகில் சிம்ம தீர்த்தம் எனப்படும் தெப்பகுளம் அமைந்துள்ளது.

    இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என நம்பப்படுகிறது.

    நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும்.

    இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.

    இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    • சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்
    • வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.

    இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.

    சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்

    வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.

    இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது.

    இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.

    அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.

    இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன்.

    மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.

    இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

    • பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது.
    • இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.

    பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது.

    மற்ற பவுர்ணமி நாட்களை விட, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது.

    அன்றைய தினம் மலை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.

    சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனையும் வழிபட வேண்டும்.

    இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும்.

    நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும்.

    பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

    இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.

    இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோவில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    • இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.
    • அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பழமலை நாதர் எழுந்தருளியுள்ள விருத்த கிரீஸ்வரரைப் பவுர்ணமி நாளில் வலம் வந்தால் மீண்டும் பிறவா நிலையை அடையலாம்.

    இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.

    இங்கிருந்த மலை மறைந்தாலும் இப்புண்ணிய தலத்தைப் பழமலை என்றும் விருத்த கிரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறது.

    தற்காலத்தில் இந்தத் தலத்தில் உள்ளவர்களும் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களும் முழுமதி நாளில் பழமலை திருக்கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள்.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் விலகி புண்ணியம் கிட்டும்.

    கிரிப்பிரதட்சனம் செய்பவர்களின் காலில் பட்ட தூசி பறந்து சென்று விழும் இடம் கைலாசமாக மாறி விடும்.

    அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பவுர்ணமி ஞாயிறன்று கிரிவலம் செய்தால் சிவபதம் அடையலாம்.

    திங்கள்கிழமையும் பவுர்ணமியும் கூடிய நாளில் கிரிவலம் வந்தால் ஏழு உலகங்களுக்கும் அதிபதியாகலாம்.

    செவ்வாய் பவுர்ணமியில் கிரிப்பிரதட்சணம் செய்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

    முழு நிலவு பிரகாசிக்கும் புதன் அன்று சிவன் குடிகொண்டிருக்கும் மலையை வலம் வந்தால் தேவர்களாகலாம்.

    பவுர்ணமி வியாழக்கிழமையில் கிரி பிரதட்சனம் செய்தால் முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் பவுர்ணமி வரும்போது மலைவலம் செய்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

    முழுமதி சனியன்று கிரிவலம் வந்தால் நவக்கிரகங்களின் நற்பயனைப் பெறலாம்.

    ×