என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி"

    • புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.
    • மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.

    தமிழ் மாதந்தோறும் 2 சிவராத்திரிகள் வருகின்றன. அதற்கான சிறப்புகள் வருமாறு:-

    சித்திரை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும். உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

    வைகாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும். சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

    ஆனி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜை செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

    ஆவணி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால் பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும். மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.

    புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.

    ஐப்பசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலையமாட்டோம். வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம். அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

    கார்த்திகை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் விரதம் இருந்துவழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

    தை மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நெல் முதலான தானியங்கள் நன்கு விளையும். அள்ளி வழங்கிய தான பலன் கிடைக்கும்; மாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான். கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்.

    பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால், சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும். அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன என்கிறனர் ஆன்மீக பெரியவர்கள்.

    • தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன
    • சிவராத்திரி விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.

    தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

    இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்து இருந்தார்.

    தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பிரேமலதா ஒரே மேடையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்குள் கூட்டணி வடிவத்தை இறுதி செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.

    தற்போது தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு கோவையில் நேற்று நடந்த சிவராத்திரி விழா தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கியமாக இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.

    மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

    முன்வரிசையில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

    இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பானது அ.தி.மு.க. பா.ஜ.க. தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இன்றும் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் தான் தங்கி உள்ளார். அவருடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.

    மேலும் கோவையில் தங்கி இருக்கும் பிரேமலதா விஜயகாந்த்தை கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மகா சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார். நேற்று பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த சந்திப்பு இயல்பாக நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தபடி தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை நிச்சயம் அமைப்பார்.

    • அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
    • சிவனை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    சென்னை:

    மகா சிவராத்திரி தினத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    பக்தர்கள் காலையில் நீராடிய பிறகு விரதம் மேற்கொள்வார்கள். விரத காலத்தில் சிவபெருமான் நாமத்தை இடைவிடாமல் உச்சரித்து வருவதுடன் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். பழங்கள், இனிப்புகள், பால் போன்ற நைவேத்யங்களை சிவபெருமானுக்கு பக்தியுடன் படைத்து வழிபடுவார்கள்.

    இந்நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், புரசை கங்காதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் சிவபெருமானை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பால், தயிர், பழங்கள், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றன.

    ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

    நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தீபாராதனைகளின் போது பக்தர்கள் உற்சாகத்துடன் ஓம் நமசிவாய கோஷம் எழுப்பினர்.

    இதேபோல், இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலமான கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடுகள் விமர்சையாக நடந்தன.

    • நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார்.
    • சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சிினை ஏற்பட்டது. அவர்களது சண்டையை தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

    தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவ பெருமானுக்கு மிகப்பெரிய நெருப்பு பிழம்பமாக தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு விண்ணிற்கும், மண்ணிற்கும் பரவி மிகப் பெரிய வடிவமாக காட்சி அளித்தது. அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண விஷ்ணுவும், முடியை காண பிரம்மாவும் புறப்பட்டனர்.

    அடியையும், முடியையும் முதலில் கண்டறிந்த வருபவரே உலகில் பெரியவர் என்றார் சிவபெருமான். அன்னப்பறவையாக மாறி பல யுகங்கள் பிரயாணம் செய்த பிரம்மாவின் அகந்தை குறையாததால் ஒரு தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதன் படி தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. நெருப்பு பிழம்பாக இருந்த சிவ பெருமானுக்கு கோபம் வந்தது.

    அந்த நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு பூவுலகில் வழிபாடுகளே இருக்காது என்றும், தாழம்பூ எந்த பூஜைக்கு பயன்படாமல் கொடிய நாகங்கள் குடியிருக்கும் இடமாக மாறும் என்றும் சாபம் அளித்தார். அதே சமயம் சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் தான். மகாசிவராத்திரி மட்டுமல்ல லிங்க வழிபாடும், உலகில் முதன் முதலில் அக்னி தோன்றியதும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். இந்த அக்னியில் இருந்த தான் சூரியன், சந்திரனின் பிரகாசங்களும், தீப ஒளியும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன.

    அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வு மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் நடைபெற்றதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை தலத்தில் இருந்து தான் லிங்க வழிபாடும், மகாசிவராத்திரி வழிபாடும் மற்ற பகுதிகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

    • மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
    • திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.

    சிவ பெருமான் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தரும் பஞ்சபூத தலங்களில் ஈசன் அக்னி வடிவமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படுவதும், தமிழகத்தில் உள்ள முக்தி தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவதும் திருவண்ணாமலை தான்.

    திருவண்ணாமலை தலத்தில் தான், சிவ பெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. இதை போற்றும் விதமாகவே திருக்கார்த்திகை தீப திருநாளில், சிவமே மலையாக காட்சி தரும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவமாக காட்சிதந்த சிவ பெருமான், லிங்கோத்பவராக காட்சி தந்ததும் இங்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.

    அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி மாறி வந்துள்ளது.

    "அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்." என்கின்றது அருணாசல புராணம். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.

    அதுபோல் சிவ பெருமானின் அருளை பெற விரும்புபவர்களும், பாவங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற விரும்புபவர்களும் மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

    திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலை யாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.

    பொதுவாக ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் ஐதீகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி என்பதால் கிரிவலம் செல்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஞாயிறு கிரிவலம் செய்தால் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்கின்றனர்.

    சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் மலையின் காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி, மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கி தொடங்க வேண்டும். அடுத்து இடையூறு இல்லாமல் கிரிவலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலத்தை முடித்தப் பின்னர், கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும். அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அண்ணாமலையாரையும், உண்ணா முலையம்மாளையும் தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஈசன் அருளுடன் துர்வாசரின் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும், விடாமல் ஓம் சிவ சிவ ஓம் என ஜபித்தவாறும் சென்றால் நமது எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது. இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திரத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை.

    அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும். அப்படி ஒரே ஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம் சிவ சிவ ஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறுநாளே நமது கடுமையான பிரச்சினை ஒன்று தீரும் அல்லது அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.

    • கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஓட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில் பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.

    இந்த சங்கானது வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறி வருகின்றனர்.

    புராணக் கதையின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுகிறது. பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்குச் செல்ல வனத்துறையிடம் பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

    • சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
    • சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம்.

    மகாசிவராத்திரியின் நேரடி அர்த்தம் 'சிவனின் மகா இரவு' என்பதாகும். மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்க ஆசீர்வதிக்கிறது. திருமணமான பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    மகாசிவராத்திரி என்பது சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.

    தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடுவதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

    திருமணம் தாமதமாகிறவர்கள், திருமணம் தடைபடுபவர்கள் இந்த நாளில் எளிய பரிகாரம் செய்தால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என்பது நம்பிக்கை. யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தங்கள் கைகளால் மஞ்சளை சிவன் மற்றும் பார்வதியின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் கணவன்- மனைவியும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.

    மஞ்சளை படைத்து, சிவன்-பார்வதியை வேண்டிக் கொண்டு முடிந்த வரை சிவ மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள வேண்டுதலை சொல்லி வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களின் திருமணம் நடைபெறுவதில் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் ஆகியவை நீங்கி, மனதிற்கு விருப்பமான திருமண வாழ்க்கை அமையும்.

    சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம். அன்று 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ திருமணம் தள்ளிப் போகிறது என்றாலும் அன்னதானம் செய்து, சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தி ஆகி மகிழ்வான வாழ்க்கை அமையும்.

    • சிவராத்திரி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
    • சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை விலகும். சிவராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 100 அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் (குறியல்) செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்துக்கு ஈடாகாது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

    அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். இரவு சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ தூங்க வேண்டும். மறுநாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    கோவிலில் 4 காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நான்கு கால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம். சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

    மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
    • சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

    மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    • மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும்.
    • பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும்.

    சிவராத்திரி 5 வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.

    மாக சிவராத்திரி:

    மாக சிவ ராத்திரியே 'மகா சிவராத்திரி' என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவ ராத்திரி' என்ற பெயரும் உண்டு.

    யோக சிவராத்திரி:

    யோக சிவ ராத்திரியில் நான்கு வகை உண்டு. திங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி நேரம்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி. திங்கட் கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரிதான்.

    திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.

    இந்த நான்கு 'யோக' சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தாலும், அதற்கு 'மூன்று கோடி சிவராத்திரி' விரதம் கடைப்பிடித்த பலன் கிடைக்கும்.

    மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத் திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்தச் சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம் என்பார்கள்.

    நித்திய சிவராத்திரி:

    வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் 24 நாள்களும் நித்திய சிவராத்திரி.

    பட்ச சிவராத்திரி:

    தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

    மாத சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த `மாத சிவராத்திரி' என்பது, மாதத்தின் மற்ற திதி நாள்களிலும் வரும். மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை மாதத் தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி, ஆனி மாத வளர்பிறை சதுர்த் தசி, ஆடி மாதத் தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்த 14 நாட்களும் மாத சிவராத்திரி எனப்படும்.

    • இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
    • ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.

    எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருகின்றது. அன்றைய தினம் இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள் தோறும் நற்பலன்கள் நடை பெறும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்துசேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, அதிகாலையில் நீராடி, பின்னர் உணவருந்துவது உத்தமம்.

    திருவண்ணாமலையில் ஈசனின் அடி முடியைத் தேடி அலுத்துத் திரும்பிய பிறகு, அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு சிவராத்திரி நாளில்தான்.

    சிவபெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் கோவில் ஒன்றில், எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியது. அங்கு கருவறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் அணையும் தருவாயில் இருந்தது. எலிக்கோ விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யின் வாசம் மூக்கைத் துளைத்தது. இதனால் அது விளக்கின் அருகில் சென்று, அணையும் நிலையில் இருந்த விளக்குத் திரியில் தன் மூக்கை வைத்து உரசியது. இதில் விளக்கில் இருந்து வெளிப்பட்ட திரியில், தீ நன்றாக பிடித்து விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அந்த எலியை, மறு பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறக்கச் செய்தார். எலி, விளக்கைத் தூண்டி விட்டதும் ஒரு சிவராத்திரி நாள் என்று புராணம் சொல்கிறது.

    ஒரு முறை உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருள்சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்தவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். சிவராத்திரி அன்று, சிவலிங்கத் திருமேனியை வலம்புரி சங்கால் அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து, 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.

    அன்றைய தினம் சனிப்பிரதோஷமும் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த வருட மஹா சிவராத்திரி விளங்குகிறது,

    'ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • சிவராத்திரி விழாவுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் சார்பில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதன்படி விழா நடைபெறுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தஞ்சை வந்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில், கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர் கோவில் ஆகிய 5 இடங்களில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகேயுள்ள திலகர் திடலில் மகா சிவராத்திரி விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஏறத்தாழ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான நிதியை திருக்கோவில் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விழாவை அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ நடத்தவில்லை.

    அந்தந்த கோவில் நிர்வாகம் தான் நடத்துகிறது.

    யானையை நாம் காட்டில் இருந்து கொண்டு வந்து வளர்க்கக் கூடாது. யாராவது நன்கொடையாளர்கள் யானையை கொடுத்தால் கோவிலில் (தஞ்சை பெரிய கோவிலில்) வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள 1,250 திருக்கோவில் களுக்கும், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோவில்களுக்கும் என மொத்தம் 2,500 கோவில்களுக்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.1 லட்சம் வீதம் என இருந்ததை தலா ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.50 கோடியை ஒரே தவணையில் தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்தார்.

    ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்க அரசாணை வெளியிடப்படும். மற்ற கோவில்களுக்கு மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

    இதுவரை 22 மாவட்டங்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    ஆயிரத் துக்கும் அதிகமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்பின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கல்யாணசுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சதய விழாக்குழு தலைவர் செல்வம் மற்றும் அதிகா ரிகள் உடன் இருந்தனர்.

    ×