என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live Updates
- 17 Feb 2026 1:12 PM IST
இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டசபையில்ன் இன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது.
- 17 Feb 2026 1:05 PM IST
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு
- 17 Feb 2026 1:04 PM IST
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- 17 Feb 2026 1:03 PM IST
விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு
- 17 Feb 2026 1:02 PM IST
அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
- 17 Feb 2026 1:00 PM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை- அமைச்சர்
- 17 Feb 2026 1:00 PM IST
புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
- 17 Feb 2026 12:59 PM IST
வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.








