என் மலர்

    நீங்கள் தேடியது "Shiva Temples"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில், ஆஸ்பத்திரி ரோடு மாதேஸ்வரன் கோவில், பெருந்தலையூர் பிரகனநாயகி சமேத மகிழேஸ்வரர் கோவில் மற்றும் பட்டையகாளி பாளையம் தென்காளகஸ்தி கண்ணப்ப நாயனார் கோவில் ஆகிய கோவில் களில் சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் பவானி திருமுறை கழகம் தியாகராஜா தலைமையில் தாங்கள் கொண்டு வந்திருந்த சிவலிங்க உற்சவர் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், சந்தனம், பன்னீர் போன்ற நவ திரவியங்களால் ஐந்து காலமும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடி சிறப்பு வழிபாடு செய்தார்கள். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள மூலவருக்கு ஐந்து கால அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் கவுந்தப்பாடி, வேலம்பாளையம், அய்யம்பாளையம், பொம்மன்பட்டி, க.புதூர், செந்தாம்பாளையம், சலங்கைபாளையம், பெருந்தலையூர், குட்டிய பாளையம், பி.மேட்டுப் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    உடுமலை :

    உடுமலையில் சனி பிரதோஷத்தை முன்னி ட்டு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், சோழீஸ்வரர் சன்னதியில் சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கே ஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து ரத்தின லிங்கேஸ்வரர் சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    எலையமுத்தூர் பிரிவு புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது.மடத்துக்கு ளம் கடத்தூரில் அமரா வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சு னேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவி ல்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மற்றும் நந்தியம் பகவானை தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    மதுரை

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது
    • கால பைரவருக்கு சிறப்புபூஜை

    கரூர்:

    கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான சிறப்பு பூஜை நடந்தது.

    சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் கால பைரவர் திருக்கோலமும் ஒன்றாகும். காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் எடுத்தமையால் கால பைரவர் என அழைக் கப்படுகிறார். சூரிய பகவானின் மகனான சனீஸ்வரர் காலபைரவரை வழிபட்டு அருள்பெற்று நவக்கிரக பதவியும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளார் என்பது வரலாறு.

    சனீஸ்வரருக்கு கால பைரவர் குருவாக கருதப்படுகிறார். கால பைரவரை ஒவ்வொரு அஷ்டமி அன்று வழிபட்டு வந்தால் கண்டம், பயம் நீங்கும், பல வியாதிகள் குணமாகும், வியாபாரம் நன்கு நடக்கும், தரித்திரம் நீங்கும் என்பது ஐதீகம்.

    க.பரமத்தி சௌந்தர நாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந் திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன் னைவனநாதர் கோயில் ஆகிய கோயில்களில் கால பைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமா னோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்,

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் வலம்வந்து சிவாய நமக... சிவாய நமக... என்று சொல்லி வந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத்தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவி ல்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
    • ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.

    உடுமலை :

    உடுமலையில் பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
    உலகநாதனாகிய சிவபெருமான் அபிஷேக பிரியன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சிவபெருமான் நமக்கு வரும் அத்தனை பயங்களையும் நீக்கும் வல்லமை கொண்டவர். குறிப்பாக சிவ பக்தர்களுக்கு மரணபயம் என்பதே இருக்காது. அப்படி நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

    500 ஆண்டுகளுமேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். புராணங்களின் படி சிவபெருமானிடமிருந்து பிராண லிங்கத்தை பெற்ற ராவணன் அதை இலங்கைக்கு கொண்டு சென்று ஸ்தாபிக்க தென்திசை நோக்கி பயணமானான். இந்த பிராண லிங்கத்தை இலங்கைக்கு ராவணன் கொண்டு சென்று ஸ்தாபிப்பதை தடுக்க, ராவணன் சந்தியாகால பூஜை செய்யும் வேளையில், அந்தண இளைஞன் வேடத்தில் வந்த விநாயகர் தனது தந்திரத்தால் இந்த லிங்கத்தை இப்பகுதியில் ஸ்தாபித்து விட்டார். பூஜை முடிந்து திரும்பி வந்த ராவணன், லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து தனது இருபது கைகளால் இந்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அச்சிவலிங்கம் நான்காக உடைந்தது. அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்ரகம் ஆனதாக கூறப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.

    தல சிறப்பு

    இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.

    எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலத்தில், உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :

    காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
    மதியம் 3.00 மணி முதல் இரவு 8.15 வரை

    கோவில் முகவரி :

    ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில்,
    பட்கல், உத்தர கன்னட மாவட்டம்
    கர்நாடகா - 581350

    தொலைபேசி எண் :

    422 2615258
    422 2300238
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. எண்ணற்ற சித்தர்கள், தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட ஆற்றல் நிறைந்த இடமாக இது விளங்கு கிறது.

    இறைவன் அருள்புரியும் திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடவரைக் கோவிலாகும். குரு அம்சமான தத்தாத்ரேயர் அவதரித்த புண்ணிய ஸ்தலம் இதுவாகும்.

    சப்த ரிஷிகளில் முதன்மையானவராக விளங்குபவர், அத்ரி மகரிஷி. இவரது தர்மப் பத்தினியாக இருந்தவர் கற்புக்கரசி அனுசுயாதேவி. இவர் அத்ரி முனிவருடன் சேர்ந்து தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித யோக பூமிதான் திருமூர்த்தி மலை. பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தெய்வீகத் தம்பதியருக்குப் பிறந்த அவதாரப் புருஷர்கள் ஆவார்கள்.

    மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்ரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசுயாதேவியின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

    ஒரு முறை அத்ரி மகரிஷி வெளியே சென்ற போது, மும்மூர்த்திகளும் அனுசுயாவை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயாவை தன் கணவனை மனதால் நினைத்து, தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

    இந்த மலையின் மீது ‘பஞ்சலிங்க அருவி’ என அழைக்கப்படும் அருவி ஒன்றும் உள்ளது. அங்கே மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்ரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக நம்பப்படுகிறது. மேலும் குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்’ என வழங்கப்படுகிறது.

    பழனியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், உடுமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருமூா்த்தி மலை அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.
    1.4.2019 அன்று ஆழித் தேரோட்டம்

    திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.

    சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர்.

    இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.

    சுந்தரர் திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்காக வந்த போது, சங்கிலியிடம் காதல் வயப்பட்டார். தொடர்ந்து ஈசனிடம் சென்று, சங்கிலியிடம் தனக்காக சென்று பேசி, தனக்கும் சங்கிலிக்கும் மணம் செய்து வைக்கும்படி வேண்டினார்.

    ஈசனும் அதற்கு ஒப்புக்கொண்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். உடனே சங்கிலியார், “சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான் எப்படி அவரை மணக்க முடியும்?” என்று ஈசனிடம் கேட்டார்.

    அதற்கு ஈசன், அவளை விட்டு சுந்தரர் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவதொண்டு செய்து வந்தனர். சில காலம் சென்றது.

    திருவாரூரில் வசந்தவிழா விசேஷம் வந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுந்தரருக்கு பிறந்தது. அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டிப் பதிகங்கள் பாடினார், சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால், திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை மட்டும் கொடுத்தார் ஈசன்.

    அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவதலங்களை தரிசிக்கச் சென்றார், சுந்தரர். ஒரு கட்டத்தில் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு ஏகாம்பரநாதரை உருகிப் பாடினார். இதில் மனம் மகிழ்ந்த ஈசன், சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கினார். பின்னர் அங்கிருந்து இன்னும் சில சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர், திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு ஈசனிடம் மன்றாடி வலது கண் பார்வையையும் பெற்றார்.

    இந்த நிலையில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது பற்றிய தகவல் அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன்னுடைய மாளிகைக்குள் விட மறுத்தார். சிவனடியார்கள் பலரும் சுந்தரருக்காக சமாதானம் பேசிப் பார்த்தும் பலனில்லை. மனம் நொந்து போன சுந்தரர், நேராக திருவாரூர் ஆலயம் சென்று தியாகேசப் பெருமானை சரணடைந்தார். தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார். அதன்படியே திருவாரூர் ஆலய சிவாச்சாரியார் வேடத்தில் சென்று, பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.

    தூது சென்ற சிவபெருமானுக்காக இரவு நேரத்திலும் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அங்குவந்த ஈசன், “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்” என்றார்.

    அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க நஞ்சு உண்டீர்; மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்' எனக்கூறி ஈசனின் திருப்பாதங்களில் பணிந்தார்.

    அவரது பக்திக்கு இரங்கிய ஈசன், “சுந்தரா! உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம்” எனக்கூறினார். பின்னர் தன் சுய உருவத்துடனேயே பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்து கொண்டிருந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.

    ஈசன் பரவையாரிடம், “பரவையே! தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உன்னுடைய இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எம்முடைய விருப்பம்” என்றார்.

    “பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் நான் இசையாது இருப்பேனோ! நாங்கள் கூடி வாழ்கிறோம்” என்று கூறினார், பரவை நாச்சியார். அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரரிடம் சென்று, “சுந்தரா! நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக” என்று கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். முன்புபோல் சுந்தரரும் பரவையாரும் மீண்டும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரியலாயினர்.

    இப்படி சுந்தரருக்காக நள்ளிரவில் தம் திருப்பாதம் நோக, திருவாரூர் வீதிகளில் தூது சென்ற திருவாரூர் வீதிகளில் தான், திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். ஆழித்தேர் என்று சொல்லப்படும் திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித் தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி வழிபடுவார்கள். இப்படிச் செய்வதால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தேவாசிரியன் மண்டபம்

    திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் வெளிப் பிரகாரமான, பெரிய பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இது ‘தேவாசிரியன் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது. தியாகேசரை வணங்க வந்து கூடும் தேவாதி தேவர்கள், தமக்குரிய நேரம் வரும் வரை காத்திருக்கும் இடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.

    செல்வத் தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இந்த மண்டபத்தில் வந்துதான் மகாபிஷேகம் கண்டு, செங்கோல் செலுத்துவார். எனவே இந்த மண்டபத்தை ‘ராஜதானி மண்டபம்’ என்றும் அழைக்கிறார்கள். அந்த மண்டபத்தில் சிவனடியார்கள் வீற்றிருப்பார்கள்.

    திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து அங்கிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கி அதன் பின்னரே, மூலவர் திருமூலட்டான நாதரையும், தியாகேசப் பெருமானையும் வழிபடுவது வழக்கம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம் தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை பணிந்து பின்னர் தம் தோழரான திருவாரூர் ஈசனை பணிவார்.

    அமைவிடம்

    கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் அமைந்துள்ளது. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது.
    ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது. திருக்கூர் திருத்தலமானது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது.

    தல வரலாறு :

    மாடு மேய்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் இருந்த நம்பூதிரி ஒருவரின் மாடுகளைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும், மேய்ச்சலுக்குப் பின்பு மாலையில் அவைகளைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதுமாக இருந்தான்.

    ஒருநாள், அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில், ஒரு பசு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பசு அங்கிருந்த மலைப் பகுதிக்கு வழி தவறிச் சென்றிருக்கும் என்று நினைத்த அந்தப் பணியாளன், மலைப்பகுதிக்குச் சென்றான். அந்த மலைப்பகுதியில் ஒரு குகை காணப்பட்டது. அந்த குகைக்குள் சென்ற பணியாளன், அங்கு பசு இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.

    பசு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த பணியாளன், அந்த பசுவை மலையில் இருந்து கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அதன் அருகே சென்றான். அப்போது பசு மாயமாக மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். அதே சமயம் பசு நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. என்ன ஏதென்று அறியாமல் விழிபிதுங்கிய பணியாளன், ஓட்டமும், நடையுமாக மலையை விட்டு இறங்கினான். பின்னர் தான் மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்காக விட்டுச் சென்றிருந்த மற்ற மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் திரும்பிச் சென்றான்.

    அங்கு மாடுகளின் உரிமையாளரான நம்பூதிரியிடம், பசு காணாமல் போனதில் இருந்து, மலையின் மேல் பகுதியில் அது மறைந்து, சிவலிங்கம் தோன்றியவரை சொல்லி முடித்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நம்பூதிரி, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு, பணியாளன் குறிப்பிட்ட அந்த மலைப் பகுதிக்குச் சென்றார்.

    மாடு மேய்ப்பவன் தெரிவித்தபடி, மலைக்குகையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். சுயம்பு வடிவில் தோன்றியிருந்த அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினர். அப்போது நம் பூதிரியின் மனக்கண்ணில், இங்குள்ள சுயம்பு லிங்கம், அக்னி தேவனால் வணங்கப்பட்டது என்பதும், இந்த லிங்கம், பஞ்சபூதங்களில் அக்னி வடிவிலானது என்பதும் தோன்றி மறைந்தது. இதையடுத்து அந்த அக்னி லிங்கத்திற்கு, நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து சில காலங்களில் கோவிலுக்கு தேவையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டார். திருப்பணிகளுக்குப் பிறகு இந்த ஆலயம் பொதுமக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதாக கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :


    உயரமான மலைப்பகுதியில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டு இயற்கையாக அமைந்த குகைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குகையின் தெற்கு திசையில், கடைசிப் பகுதியில் வடக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள், சிவலிங்கத்தின் வலதுபுறத்தை மட்டுமே பார்வையிட்டு வழிபட முடியும். இங்கிருக்கும் இறைவன் ‘திருக்கூர் மகாதேவர்’ என்றழைக்கப் பெறுகிறார்.

    ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

    இறைவன் சன்னிதிக்கு மேற்குச் சுவரில் கணபதி சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தில் சாஸ்தா, அந்திமகாகாளன், பத்திரகாளி, பகவதி, சாமுண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டிற்காக இடம் பெற்றிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். முகப்பு மண்டபத்தில் வைஷ்ணவ சைதன்ய மரபிலான சாலக்கிராமம் இடம் பெற்றிருக்கிறது.

    மலைப்பாறையின் மேல் பசுமையாக இருக்கும் குளம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1966-ம் ஆண்டில் இருந்து கேரள மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இக்கோவில் இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    வழிபாடுகள் :

    சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 16 கற்தூண்களுடன் அமைக்கப்பெற்றிருக்கும் நமஸ்கார மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது, சரஸ்வதி வழிபாடு மற்றும் சாக்கியார் கூத்து போன்றவை நடத்தப்பெறுகின்றன.

    இக்குகைக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மாலை நேர பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு 108 வில்வ இலைகள் சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    கயிறு வழிபாடு :

    சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் பாதிப்புடையவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கயிறு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கின்றனர். சுவாச நோய்ப் பாதிப்புடையவர்கள் சிலர் இங்கிருக்கும் இறைவன் உயரத்துக்குச் சமமாகத் தாம்புக்கயிறு வாங்கிக் கொடுத்து வழிபடுகின்றனர். சிலர், அவர்களது எடைக்குச் சமமான தாம்புக்கயிறைத் துலாபாரம் போன்று எடை போட்டு வழங்கி இறைவனை வழிபட்டுத் தங்கள் சுவாச நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். கயிறு வழிபாட்டில் பெறப்படும் கயிறுகள் அனைத்தும் கோவில் மண்டபத்தில் தொங்கவிடப் படுகின்றன.

    சிறுவர்களுக்குச் சுவாசக் கோளாறுகள் இருப்பின் கருக ஹோமம் அல்லது இறைவனுக்குப் பின்னால் எண்ணெய் விளக்கு இடுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் திருக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin