என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு வழிபாடு"
- ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை ரிலீசாகிறது.
- கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருச்சி ரஜினி ரசிகர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விநாயகர் கோவிலுக்குள் கூலி படத்தின் ரஜினி புகைப்படங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரஜினி பேனருக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு பூசணிக்காய் உடைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் கூலி படம் நாளை வெளியாவதை ஒட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
- பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு அன்று அனைவரும் நீர் நிலைகளுக்கு சென்று விரதமிருந்து பூஜைகள் செய்வார்கள். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தே விரதமிருந்து பூஜை செய்து கடவுளின் அருளைப் பெறலாம். தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து வீட்டைத் துடைத்து மாக்கோளமிட்டு, நீராட வேண்டும். பூஜையறையில் சாமி படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் முதலான பூஜைக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு நிறைகுடத்தில் இருந்து கலச சொம்பில் நீர் எடுத்து அரைத்து வைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். அந்த கலச நீரை விளக்கேற்றி அதன் முன் வைத்து, தீபாராதனை செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, வைகை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளை மனதில் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பின்னர் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தலையில் தெளித்துக்கொண்டு, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். எஞ்சிய நீரை வீட்டிலுள்ள மரம், செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை தாலியாக பாவித்து கட்டிக்கொள்ள அடுத்த ஆடிக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வசதி இருப்பின் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து அவர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், இரவிக்கைத் துண்டு, கொஞ்சம் இனிப்பு சேர்த்து கொடுக்கலாம். இந்த பூஜையின் போது நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். நீர்நிலைகளுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலிருந்த படியே கடவுளை வழிபட்டு அதன் பலன்களைப் பெறலாம்.
ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் அரிசி, பருப்பு முதலான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடிப் பெருக்கென்று புதிய தொடக்கம் வளர்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.
- முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதல் நாள் சஷ்டி விழாவில் தாரகா சுரனை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்க ப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ முருகப்பெருமான் எதிரில் இருந்த தாரகாசூரணை போரில் வென்று தலையை துண்டிக்கும் நிகழ்ச்சி நடந்தது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை தரிசித்து சென்றனர்.
- கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அழகிய கூத்தர், சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலும் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை. தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
- இளையான்குடி அருகே உள்ள தர்காவில் தமிழ்மகன் உசேன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
- முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
சிவகங்கை
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தமிழகம் முழுவதும் உள்ள தர்காவிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் புதூரில் புலவர் மீரா தர்காவில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.
பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் ஜாதி, மதம் கிடையாது. அவரவர் மத வழிபாட்டின் படி இறைவனிடம் வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்து மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட பிரார்த்திப்போம் என்றார்.
முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகரசெயலாளர் மீரா, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
- விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
கார்த்திகை தீபத் திருவிழாவின் 2-வது நாளான நேற்று விஷ்ணு தீபத்தையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் குமார சாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று இரவு சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. மேள தாளத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
- மதியம் 12 மணிக்கு மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11 அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகா லிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இங்கு பைரவரின் பிறந்த தினமும், மஹாதேவ காலபைரவாஷ்டமி நாளான வருகிற 16-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடும், 9மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜையும், காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவ-காலபைரவர் ஹோமமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபார தனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாரதனையுடன் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழி பாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்ற னர்.
- ஆஞ்சநேயர் சுவாமிக்கு 21-ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அனிச்சம்பாளையம் குட்டுக்காடு காவேரி கரை யில் ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 21-ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் மேல தாளங்கள் முழங்க தீர்த்த குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மதியம் 12 மணிக்கு காவேரி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளான நன்செய்இடையார், பொய்யேரி, காமாட்சி நகர், குப்பச்சிபாளையம், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், அனிச்சம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதேபோல் பரமத்தி வேலூரில் எல்லையம்மன் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு, ஜெயந்தி விழாவை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் வடை மாலை சாற்றப்பட்டு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வடை,
பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணி நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும்சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
- நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்று புறபகுதியில் உள்ள 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், நல்ல கன மழை பொழிந்து ஆறு, குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும் 9 கிராமங்களில் கோவில்களில் வேண்டுதல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதில் பொறுப்பாளர்கள் சூரியகலா, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, அமுதசுரபி, வனசுந்தரி, செல்வகுமாரி, அமுதா, சுஜாதா, கோகிலா, பட்டு ரோஜா, சரஸ்வதி, சுதா, செல்வி, தமிழரசி, தங்கச் செல்வி, முத்துலட்சுமி, முருகம்மாள், சித்திரை கனி, பாரதிகோபிகா, இசக்கியம்மாள், இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கேசவன் மற்றும் சதீஷ் ரகு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
- பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர்.
குமாரபாளையம்:
சஷ்டியையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை பாலமுருகன் கோயில், முதலியார்தெரு பாலமுருகன் கோயில், பள்ளிபாளையம் சாலை மருதமலை முருகன் கோயில், வட்டமலை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
திருப்பூர்:
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமி சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அவினாசி, தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், சேவூர், புதுப்பாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் கங்காதீசுவரர், மாரியம்மன் கோவில், அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது. நவநீதகிருஷ்ணன் ஸ்ரீ பூமா நீளாச்சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், நலுங்கு பொடி, நெய் அபிஷேகங்கள் நடைபெற்றது. உடுமலை குட்டை திடலில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசன்ன விநாயகர் கோவிலில் அதிகாலை பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதே போல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேப்ேபால் திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், சுக்ரீஸ்வரர் ஆலயம், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர், முருகன், அம்மன் ஆலயங்களிலும் , ஊத்துக்குளி தென் திருப்பதி கோவில் மற்றும் சாய்பாபா கோவில் ஆகியவற்றில் மக்கள் காலை முதலே வந்து சாமி தரிசனம் செய்தனர். காங்கயம் சிவன்மலை கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.
- கோதண்டராம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராமர், சீதை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு கோலத்தில் காட்சியளித்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் பஜனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பழமை வாய்ந்த பச்சை மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்களும் அபிஷேகங்களும் செய்து சிறப்பு வெண்ணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் பெருமான் காட்சியளித்தார்.
இந்த சிறப்பு பூஜையில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






