என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Temple"

    • ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை ரிலீசாகிறது.
    • கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருச்சி ரஜினி ரசிகர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    விநாயகர் கோவிலுக்குள் கூலி படத்தின் ரஜினி புகைப்படங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரஜினி பேனருக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு பூசணிக்காய் உடைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    மேலும் கூலி படம் நாளை வெளியாவதை ஒட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    • திருப்பத்தூர் மாவட்ட மக்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன்
    • பிரிவு உபசார விழாவில் கலெக்டருக்கு பரிசு வழங்கினர்

    திருப்பத்தூர்:

    வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 2-வது மாவட்ட கலெக்டராக அமர்குஷ்வாஹா (15.06.21) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார்.

    பின்னர் தமிழக அரசு புதிய கலெக்டராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமித்தது உத்தரவிட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது மனைவியுடன் திருப்பத்தூர் மாய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்னைக்கு சென்றார்.

    கோவிலுக்கு வந்த கலெக்டரை என்விஎஸ் சங்க தலைவர் என்.பி..எஸ். ராஜா வரவேற்றார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம் அறங்காவலர் குழு உறுப்பினர் பக்தவச்சலம் வரவேற்றனர். மாய விநாயகர் கோவிலுக்கு கலெக்டர் மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவருக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பத்தூர் பொதுமக்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களை மறக்க முடியாது என்றும் நினைவில் கொள்வேன் திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 மாத காலம் பல்வேறு பணிகள் மாவட்ட முழுவதும் நடைபெற்று உள்ளது.

    பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளோம் விடைபெறுகிறேன் மீண்டும் சமூக நலன் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும்போது தங்களை சந்திப்பேன் என தெரிவித்தார்.

    அவருடன் என்.வி.எஸ் சங்க நிர்வாகிகள் ஐயப்பன் ரமேஷ் குமார் ஹரி பிரபாகர், கமலக்கண்ணன் உட்பட பல கலந்து கொண்டனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அனைத்து துறை சார்பில் கலெக்டருக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

    • கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக இடையே முக்கிய சாலையாக இது உள்ளது. மலைப்பாதையில் 27 அபாய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் செல்வது வழக்கம். வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக இந்த விநாயகர் கோவில் இருந்து வந்தது. சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டத்தால் இரவு மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மலைப்பாதையில் தொடங்கும் இடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும், வழிபடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனாலும் கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக விளங்கிய விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டு போய்விட்டது. இதனை கண்டு வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மதுரையில் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜநாடார்- கிருஷ்ணம்மாள் மன்றம் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியாஹவாசனம், 11 மணிக்கு தன பூஜை, மகா கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,வாஸ்து சாந்தி நடந்தது. மாலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியா ஹவாசனம்,முதற்கால யாக பூஜை ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி நடக்கிறது. காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு கல்யாண விநாயகர் விமான மகா கும்பாபிஷேகம், கல்யாண விநாயகர் மூலாலய கும்பாபிஷேகம், மகா அபிஷேகம்,மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. 6-ந் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி 48 நாட்களுக்கு நடக்கிறது.

    கும்பாபிஷேக பூஜைகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் தானீகம் ராஜா பட்டர் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (9ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தி நாளை(9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
    • ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனை முன்னிட்டு ராஜ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதே போல் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோல் நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • சிங்கம்புணரி அருகே செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி வேங்கைபட்டி ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதியுடன் முதல் கால பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து நேற்று 2-ம்கால பூஜைகள் நடந்தது. இன்று காலை பல்வேறு சிறப்பு பூைஜகள்,ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
    • வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.

    அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சோழவந்தான் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடந்தன.

    இன்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, பூர்ணாகுதி நடந்தது. இதைத் தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து

    கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.

    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பொய்யாமொழி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி வெட்டமனை நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • இதையொட்டி ஏர்வாடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி வெட்டமனை நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி ஏர்வாடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கோவில் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

    அன்னதானமும் நடந்தது. விழாவில் லட்சுமணன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், சக்தி குமார், ஜெகன், ஜெகதீஷ், சரவணன், வீரக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் ஏர்வாடி ஊராட்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ராமநாதபுரம் நகர செயலாளர் சதீஷ் நாடார் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டு இரட்டையூரணி கிராமத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் தமிழ்நாடு பனை வாரிய மாநில தலைவர் பாலசிங்கம் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கீழக்கரை இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் செல்வகணேஷ்பிரபு, நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூரில் வல்லப விநாயகர் கோவில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
    • நைவேத்தியங்களுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.

    மூலவர் வல்லப விநாயகருக்கு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பலவகை தீபாராதனைகள் உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கன்னிமூல கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வேஷ்வரர், நந்தியம்பெருமான், வள்ளி தெய்வயானை உடனாகிய முருகப்பெருமான், காலபைரவர் மற்றும் நவகி–ரகங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, நைவேத்தியங்கள் உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×